இயக்குனர் பாலு மகேந்திராவின் நடிப்புப் பட்டறையிலிருந்து நடிகரான முதல் ஹீரோ சத்யா....ஹீரோவும் அல்ல... ஜீரோ அல்ல. வயதுக்கு ஏற்ற காதலின் வசீகரம் மட்டுமே அவரது கண்களில் தெரிகிறது.. ஆனால் ஹீரோவாக அங்கீகரிக்கப் பட இன்னும் படங்கள் அவருக்கு வரவேண்டும்
EV கணேஷ் பாபு இயக்கத்தில் புதுமுக நடிகர் சத்யா-ஸ்ரீ ரம்யா இவர்களின் காதலுக்கிடையில் இப்படம் சமுக அவலங்களை நகைச்சுவையாகவும் த்திரிலிங்காகவும் வெளிப்படுத்துகிறது. ஆனால் முடிவுதான் நிறைய ட்விஸ்ட்களுடன் சொதப்பலாக...
பாஸ்கரன் (சத்யா) கல்லூரியில் தன்னுடன் படிக்கும் யமுனா(ஸ்ரீ ரம்யா)வைக் காதலிக்க..படம் கல்லூரிக் காட்சிகளாக நமுத்த நகைச்சுவையாக செல்கிறது.ஒரு கட்டத்தில் பாஸ்கரன் தன் காதலி யமுனாவை விபச்சாரியாக சந்திக்க...த்திரிலிங் இடைவேளை.. அவளோ சந்திரிகா(வினோதினி) என்ற போலி சமுக சேவகியால் படிப்பதற்காக தந்திரமாக விபச்சாரியாக மாற்றப்பட்டவள் என்பதை அறிந்து இருவரும் போராடுகிறார்கள்... வென்றார்களா? என்பதை திரையில் தெரிந்துகொள்ளுங்கள்
கவிப்பேரரசு வைரமுத்து வார்த்தைகளில் இலக்கியன் இசையில் அனைத்துப்பாடல்களும் நம் காதுகளில் தேனாறாய் பாயிந்து இன்பத்தில் மூழ்கடிக்கும் திகட்டாத திரையிசை வெள்ளம்....என்று எழுதத்தான் ஆசை ஆனால்.. ம்..ம்..கூம்
இசை தூக்கலாய் வார்த்தைகளை விழுங்கிவிட...இன்னும் கவிப்பேரரசுக்கு இரட்டை அர்த்தமுள்ள டாஸ்மாக் குத்துப்பாட்டு... திம்பா..திம்பா..தேவையா....?
thanks-YouTube-by yamuna tamilmovie
சந்திரிகாவாக நடித்துள்ள வினோதினி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு சிவப்பு சொர்ணக்கா....கவர்ச்சிகரமான வில்லி. இயக்குனர் கணேஷ்பாபு சினிமாவில் லாஜிக்னா என்ன விலை...? என்பாரோ..பரவாயில்லை அதற்காக இப்படியா கல்லூரி கலாட்டாக்கள் என்று...வாங்க பழகலாம் கூத்து...காதல் ட்ராமா...கக்கூஸ் செல்போன் காட்சி..சிக்னலில் காணும் பெண்களையெல்லாம் பார்த்து கதாநாயகன் ஜொள்ளுவது...பார்த்தஒரு மணி நேரத்தில் காதல்..பிறகு மாடியிலிருந்து காதலன் குதிப்பது இப்படி படம் பார்ப்பவர்களை சொரியலாமா...?
முக்கி முக்கி கண்ணிவாசல் என்று கதைவிட்டு கடைசியில்.. பெண் இன்ஸ்பெக்டர்,அவரது மகள்,இரண்டு போரையும் கொன்று...ஹீரோவையும் கொன்று ..ஹீரோயினும் தீக்குளித்து...வில்லியையும் கட்டிப்பிடித்து...அப்பாடா.. எப்படியோ படத்தை முடித்துவிட்டார்....நன்றி
தமிழில் புதுப்படம்... காதலிக்கும் ஆண்கள் உண்மையான காதல் என்பது உடலா...? உள்ளமா....? என்பதை தெரிந்துகொள்ள இப்படத்தைப் பார்க்கலாம் அதேநேரம் காதலன்கள் ஜாக்கிரதை...இப்படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் காதலிகளைச் சந்தேகிக்க கூடாது....அப்புறம் பெண்ணை நம்பாதே...என்று புலம்பக்கூடாது..அம்புட்டுதான் சொல்லிப்புட்டேன்...கல்லூரி மாணவ-மாணவியர் காதலைப் புதுமையாகப்... பார்த்து ரசிக்க எல்லோரும் பார்க்கலாம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |