google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விமர்சனங்களால் துள்ளிக் குதிக்கும் தங்கமீன்கள்

Sunday, September 01, 2013

விமர்சனங்களால் துள்ளிக் குதிக்கும் தங்கமீன்கள்


(குறிப்பு-இப்பதிவு தங்கமீன்கள் திரைப்படத்திற்கு ட்வீட்டர்கள், முகநூல்வாசிகள், வலைப்பதிவர்கள்,மற்றும் தமிழ் வலைதளங்களின் விமர்சனப் பார்வை பற்றியது...)  

http://images.desimartini.com/media/versions/main/original/9750caaf-fdb7-44e0-b3fb-30a351ed79f9_original_image_500_500.jpg

எல்லோருமே உப்புக்கு சப்பாக பாராட்டாமல் ஒரு உணர்வுப்பூர்வமான விமர்சனங்களால் தங்கமீன்கள் திரைப்படத்தைப் பாராட்டும் போது...தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை  அசாதாரணமானது என்பது அம்பலமானது.

http://images.desimartini.com/media/versions/main/original/86cbb8d8-635c-44b2-ab52-c9dd04dc5b08_original_image_500_500.jpg

அதனால்தான் உறைந்துபோன இதயத்தை சூடாக்கும் படம் (Heart-Warming Film) என்று ibtimes எழுதியது   
இயக்குனர் ராம் தங்கமீன்கள் படத்தின் கதாப்பாத்திரங்களுக்கு தன் எழுத்துக்களால் உயிரூட்டியுள்ளார்.... அதேநேரத்தில்  படத்தில் அவரது பாத்திரங்களின் அதீத நாடகத்தன்மையும் அதீத உணர்ச்சிப் பெருக்கும்கூட (over-dramatic and hyper-emotional ) தேவையானதாகிறது...Behindwoods

http://images.desimartini.com/media/versions/main/original/73d20a83-b6d3-44b2-a266-bce82fa71b7a_original_image_500_500.jpg

இப்படம் உணர்வைத் தூண்டக்கூடிய நிகழ்வுகளால் நல்ல கருத்துக்களை பளிச்சென காட்டும் முயற்சி என்று எழுதுகிறார் 
M Suganth of The Times of India இயக்குனர் விஜயின் தெய்வதிருமகள் போன்று ஒரு அழகான குழந்தையைக்காட்டி நம் இதயத்தை வருடும் எவ்வித கீழ்த்தரமான தந்திர வேலைகளையும் இயக்குனர் ராம் தங்கமீன்கள் படத்தில் காட்டவில்லை என்று பாராட்டுகிறார் Prashanth Reddy of Desimartini


thangameengal

வசதி படைத்தவர்களும் வசதியற்றவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ நேரும்போது ஏற்படும் மனத்தாங்கல்கள், தனியார் பள்ளிகளின் லாப நோக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்கள் என சமூக பொருளாதாரப் பிரச்சினைகளையும் தொட்டுச் செல்கிறது இந்தப் படம்.........



குறைகள் இருந்தாலும் இத்தனை உணர்ச்சிமயமான கதையை தேவைக்கதிகமாக அழுதுவடியாமல் புதுமையான காட்சிகள் மற்றும் பாத்திரப் படைப்புகளுடன் சொல்லியிருப்பதும் அறிவுரைத் தொனி இல்லாமல் சமூகம் குறித்த விமர்சனங்களை முன்வைத்திருப்பதும் இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் முக்கியமான பதிவுகளில் ஒன்றாக உயர்ந்துகின்றன.....என்று எழுதுகிறது  Indiaglitz
freeonlinephotoeditor

கதை என பார்த்தால் சமீக கால தமிழ் சினிமா மென்று தின்று அசை போட்டுக்கொண்டிருக்கும் தனியார் பள்ளியா அரசு பள்ளியா என்ற விசயம் தான். அதனால் கதையாய் இந்தப்படம் பெரிய பிரம்மிப்பை ஏற்படுத்திவிட வில்லை. ஆனால் ராம் இந்தப் படத்தை இந்தக் கதைக்கான பிரசங்கமாய் எடுக்காமல் ஒரு நெகிழ்ச்சியான அனுபவமாய் தந்திருக்கிறார் என்பது தான் இதை வெற்றிப்படமாய் மாற்றியிருக்கிறது......sound-camera-action 

கட்டதொர ™@kattathora 
இந்த ட்விட்டர் சமூக போராளிகள புரிஞ்சுக்கவே முடியலை, தலைவா, டவுண்ட்லோட் பண்ணி பாக்கலாமாம்..ஆனா தங்கமீன்கள் தியேட்டர்லதான் பாக்கனுமாம்..

வாலு பையன் !!!@shakings8 
படம் முடிந்தபின்,அனைவரும் எழுந்து இருநிமிடம் கைதட்டிக்கொண்டே இருந்தார்கள்.கலைஞனுக்கான சன்மானம் #தங்கமீன்கள்

ஆல்தோட்டபூபதி@thoatta 
என் தங்கமீனோடு தங்கமீன்கள் காண :-)) என் மகள் பார்க்கும் முதல் படம் என்ற பெருமையை பெற்ற தங்கமீன்களுக்கு என் வாழ்த்துகள் :)-
 Sudharshan@SSudha 
கண்ட குப்பைகளைக் கொட்டி காசைப் பிடுங்குகிற சினிமாவை மட்டும் வெட்கமில்லாமல் வெளியிடுவார்கள். தங்கமீன்கள் இல்லை.
இக்பால் செல்வன்@iqbalselvan 
இவ் ஆண்டு வெளியாகிய தமிழ் படங்களிலேயே தங்கமீன்கள் சிறந்த படமாக இருக்கும் என நினைக்கின்றேன்.
Er.அரிகெங்காராம்@Arigengaram 
தங்க மீன்கள் பார்த்து தமிழகத்தில் ஒரு தந்தையாவது தனது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால்,அதுவே ராமின் உண்மையான வெற்றி#தங்கமீன்கள்.
Gowthamvetriselvan@gowthammanivel 
தங்கமீன்கள் தமிழ் சினிமாவின் பொன் ஏடுகளில் பொறிக்க படவேண்டிய ராமின் மிக சிறந்த படைப்பு. ஒரு ஓவியம் வரைவது போல்..
ஆதித்த கரிகாலன்@smanojshere 
தங்கமீன்கள் படத்தை நாடகம் என்பவர்களே 'மகள்களைப்பெற்ற அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் மட்டுமே புரியும் காவியம் இது.'
சி.பி.செந்தில்குமார்@senthilcp 
அப்பா - மகள் பாசம் தாண்டி தங்கமீன் கள் சொல்ல வரும் சங்கதிகள் நிறைய.பசங்க படத்துக்குப்பின் தமிழ் சினிமாவின் மழலை உலக வாழ்வியல் சொன்ன கதை

freeonlinephotoeditor

இதில் நகைச்சுவைக்கென்று தனியாக விரசமாய் விக்கும் நடிகர்கள்கூட இல்லை...நள்ளிரவில் கல்யாணி தன் மனைவியுடன் வெளியே பேசிவிட்டு வரும்போது..குலைக்கும் தெரு நாய் மீது கல்லெறியும் காட்சி...செல்லம்மா  தாளாளர் இறந்ததற்கு ஸ்கூல் விடுமுறை   என்றதும் கைதட்டுவது..இப்படி யதார்த்தமான அன்றாட நிகழ்வுகளை நகைச்சுவையாக சொல்லுகிறார். 

freeonlinephotoeditor

இப்படியொரு படம் வந்து இன்று ரசிகர்களாலும் விமர்சகர்களாலும்  பாராட்டப்படும் போது இனிமேல் இதைப்போல் நிறைய படங்கள் வர வாய்ப்புள்ளது.இனி கொலைவெறி குத்து ஆட்டக்காரர்கள்...ரிகள் மட்டுமன்றி இங்கே உள்ள கவர்சிக் கண்ணிகளும் மும்பை எக்ஸ்பிரஸ்,திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்,ஹைதராபாத் எக்ஸ்பிரஸ்...என்று மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு புறப்படவேண்டியதுதான்...

http://i1.ytimg.com/vi/AJku2XrvXKo/hqdefault.jpg

எனது பார்வையில் ராம் அவரது குரு இயக்குனர் பாலு மகேந்திராவை மிஞ்சிவிட்டார் என்பேன்...அவருக்கும் மூன்றாம் பிறை என்ற கலைப்படைப்பை வணிக ரீதியில் வெற்றியடை அன்று சில்க் என்ற கவர்ச்சி ஆட்டக்காரி... பொன்மேனி உருகுதே என்றும்  கமலுடன் உருகி உருகி நடிக்கும் பாடலும் படத்தில் வைக்கவேண்டியிருந்தது.

http://i1.ytimg.com/vi/fZ5RAdJL6r8/hqdefault.jpg

பாலாவின் சமீபத்திய பரதேசி படமும் இன்றைய காலகட்டத்தின் சமுக அவலங்களை சொல்லமறந்து..நியாயன்மார்களே என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது 

http://f0.pepst.com/c/A58276/436423/ssc3/home/015/shiva.happy/albums/aadukalam_dhanush01.jpg_480_480_0_64000_0_1_0.jpg

வெற்றிமாறன் ஆடுகளம் படமும் கோழிச்சண்டை கொக்கு சண்டை என்றும் வெள்ளைத்தோலுக்கு ஏங்கும் காமக்கிருக்கர்களை காட்டி தேசியவிருது வாங்கிக்கொண்டது    


http://www.giriblog.com/wp-content/uploads/2012/06/Thang-Mmeengal.jpg

தங்கமீன்கள் படம் மூலம் ஒரு கலைப்படைப்பையும் தந்து சமுக அவலத்தை குத்திக்காட்டியுள்ள இயக்குனர்  ராம்.......இயக்குனர்கள் பாலு மகேந்திரா,பாலா,வெற்றிமாறன் போன்ற கலைப்படைப்பாளிகளை எளிதாக வென்றுவிட்டார் 

                                                ......................................பரிதி.முத்துராசன்  


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1