google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அடுத்த சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...?

Tuesday, October 01, 2013

அடுத்த சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...?


ஆசியாவில் ஜாக்கி சானுக்குப் பின்னர் அதிகச் சம்பளம் வாங்கும் நடிகர் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவார்....முன்பு ஒரு கூட்டமே அடுத்த சூப்பர் ஸ்டார் நான்தான் என்று வரிசையில் நிற்க..அய்யோ..இன்று எல்லோரும் அந்த வார்த்தையைக் கேட்டாலே........... காததூரம் ஓடுகிறார்கள்.

 1920-ல் ஹோலிவுட் சினிமா ஜித்தர்கள் சினிமாவை பிரபலப்படுத்தவும் வணிகரீதியில் வெற்றிபெறச் செய்யவும் சில சித்து விளையாட்டுகளை (gimmicks) செய்து நடிகர்-நடிகைகளில் சிலரை வதந்திகளாலும் பரபரப்பான செய்திகளாலும் திட்டமிட்டு நட்சத்திர அமைப்பு (Star System) என்பதை உருவாக்கி...

marlin

1970-களில் ராக் ஹட்சன், மர்லின் மன்றோ (நடிகை), கிரேஸ் கெல்லி போன்ற நட்சத்திரங்களை சூப்பர் ஸ்டார் என்று உருவாக்கி...
1980-90 களில் பொழுதுபோக்கு விளம்பரம் தந்திரோபாயங்கள் 
(entertainment publicity tactics) மூலம் சமுக நடவடிக்கைகள்,விளம்பர முயற்சிகள்,மூர்க்கத்தனமான பொது அறிவிக்கைகள்,பொது சர்ச்சைகள்,..இவைகளில் ஈடுபடுத்தி இந்த சினிமா உலகம் குளிர் காய்ந்துக் கொண்டிருக்கிறது... இன்னும் தொடர்கிறது 

இன்று உலகில் சிறிய அளவில் இருக்கும் இத்தகைய சூப்பர் ஸ்டார்கள் பெரிய அளவில் கலை,கலாச்சாரத் துறையில் மட்டுமின்று சமுகம்,அரசியலிலும் ஆதிக்கம் செய்பவர்களாக வளர்ந்து விடுகிறார்கள் 

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று எம்.கே.தியாகராஜ பாகவதர்....அவரால் அன்று ஆரம்பிக்கப்பட்ட மன்மத லீலை கலாச்சாரச் சீரழிவு இன்றுவரை தொடர்கிறது.அப்புறம் அவரும் ஒருவழக்கில் வழுக்கி விழுந்து...அத்தோடு அவரது சூப்பர் ஸ்டார் ஆட்டம் அடங்கியது


mgr

அதற்குப் பிறகு தமிழில் நிறைய நடிகர்கள் இருந்தாலும் எம்.ஜி.ஆர்..சூப்பர் ஸ்டாரா? என்பதைவிட அதையும் தாண்டி மக்கள் நாயகராக மாறிவிட்டார் அவர் காலம் முழுக்க அவரை மிஞ்ச யாருமில்லை...


mgr

அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட இத்தகைய சூப்பர் ஸ்டார் நடிகர்கள் காலப்போக்கில் அவர்களே அரசியல்வாதியாகி உண்மையான அரசியல்வாதிகளைத் தங்களது கவர்ச்சியாலும் பப்ளிசிட்டியாலும் புதைத்துவிட....இன்றுவரை கவர்ச்சியே அரசியலில் ஆட்சி செய்கிறது...அவர்களது வாரிசாக நடிகர்கள் அனைவரும் ஆட்சிக்கட்டிலில் அமர வரிசையில் நிற்கிறார்கள்....அவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் பதவிப் பாதுகாப்பும் இன்று பெரிய அளவில் நாம் காணமுடிகிறது. 

http://chennai365.com/wp-content/uploads/actors/rajini/rajini_super_star.jpg


இன்றைய காலகட்டம் வரை ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார்...என்பதை யாரும் மறுக்க முடியாது நாம் முன்பு பார்த்த... ஒரு சூப்பர் ஸ்டார் எப்படி? யாரால்? உருவாக்கப்படுகிறார்கள் அத்தனையும் இவருக்குப் பொருந்தும் 

freeonlinephotoeditor

பாலச்சந்தர்,பாரதிராஜா,மகேந்திரன்..இப்படி பல சினிமா ஜித்தர்களால் சினிமா வியாபாரத்திற்காக உருவாக்கப்பட்ட ரஜினி...பல வித சமுக...அரசியல் சச்சரவுகளால் சூப்பர் ஸ்டாராக நிலை நிறுத்தப்பட்டு...ஒரு காலக் கட்டத்தில் அரசியல் மாற்றங்களுக்கும் காரணமாக இருந்து.... இன்றும் மோடி போன்ற அரசியல்வாதிகளால் அவர்..அல்லது அவரது புகைப்படங்கள் உபயோகிக்கப்படுவது இந்த உண்மையைத்தான் சொல்கிறது.  

freeonlinephotoeditor

தமிழ் திரைவானில்.........நடிகர் விஜயகாந்த்,நடிகர் சரத்குமார் போன்றவர்கள் அரசியலில் முழு ஈடுபாடு கொண்டு சென்றுவிட்டார்கள் நாளை அவர்கள் அடுத்த முதல்வர் நான்தான் என்று கனவு காணும் நிலையில்...நடந்தாலும் நடக்கலாம் (அதே நேரம் இல்லாமல் போனாலும் போகலாம்)  

http://1.bp.blogspot.com/-yjgiOPkJ7N4/TWYShPP0kQI/AAAAAAAAB-M/SFf7-Cj4WW0/s400/Vijay-At-Political-Meeting-In-Nagapattinam-20.jpg

இப்போது இருக்கும் நடிகர்களில்........இந்த நட்சத்திர அமைப்பில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் அவர்களை முளையிலையே கிள்ளிவிடும் எச்சரிக்கை உணர்வால்......
தலைவா! அடுத்த சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...? 
நான்தான் என்று சொல்லிக்கொண்டு யாரும் முன் வருவதில்லை... 

https://lh3.googleusercontent.com/-5rVOi2krPZQ/UVqcDPhQFOI/AAAAAAAAxOE/IyYzuWcLIYo/57925_363751837074908_1810180320_n.jpg

வெளிப்படையாக அவர்கள் மறுத்தாலும் மறைத்தாலும் அவர்களுக்குள் உள்ளிருக்கும் உணர்வுகள் அவ்வப்போது வெளிப்படும்...அது அவர்களது திரைப்படங்கள் வெளிவரும் காலக்கட்டமாக இருக்கும் 

இன்று இல்லையேல் நாளை நான்தான் சூப்பர் ஸ்டார் என்பார்கள்....அல்லது அவர்கள் மறுத்தாலும் சுயநலமிக்க சினிமா உலகம் அவர்களில் ஒருவரை சூப்பர் ஸ்டார் ஆக உருவாக்கிவிடும்........ 

என் உயிரிலும் மேலான  பதிவர் உடன்பிறப்புகளே......அப்படி உங்களிடம் யாரேனும்.............. அடுத்த சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...? உங்கள் பதில் என்னவாக இருக்கும்? 





அடுத்த சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...?


வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........முடிவு-02/10/2013 
      
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1