விரைவில் வரவிருக்கும் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் வெற்றிக்கு குழந்தைகளைக் குஷிப்படுத்தி வசூலில் சக்கைப்போடு போடும் ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 3 நிச்சயம் உலகளவில் முன்னோட்டமாக அமையும்...
கடவுள் சக்திக்கு அப்பாற்பட்டு மனித சக்தியை மிகைப்படுத்தி வந்த ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 3 இதுவரை இந்திய திரைப்படங்களில்
3 இடியட்ஸ், சென்னை எக்ஸ்பிரஸ் படங்களுக்கு அடுத்து 200 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களில் மூன்றாவது இடத்தையும் முதல் நாளில் 33 கோடிக்கு மேல் வசூலில் சாதனை செய்த முதல் படமாகவும் வெற்றி இடத்தைப் பிடித்துள்ளது
தீய சக்திக்கு எதிராக நல்லவர் ஒருவர் தனியாளாக நின்று வெற்றிப் பெரும் மாமூல் க்ரிஷ் பட வரிசையில் இது மூன்றாவது ஆகும்...ஆயினும் முதற்படத்தில் இருந்த காதல் நளினம் இல்லாமல் குழந்தைகளை முழுக்க மகிழ்விக்கும் எண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ள.......க்ரிஷ் 3 அதில் முழுக்க வெற்றிப்பெற்றுள்ளது
வீட்டில் குழந்தைகள் வீடியோ கேம் விளையாடும் போது அருகில் இருந்து வேடிக்கைப் பார்த்த உணர்வு பெரியவர்களுக்கும் விளையாடும் உணர்வு குழந்தைகளுக்கும் என்று படம் பார்க்கும் போது வித்தியாசமான நிறைவு
thanks-YouTube-Krrish 3
படம் ஆரம்பிக்கும் போதே....பறக்கும் விமானத்தின் முன் சக்கரம் பழுது அடைய அதனால் விமானம் இறங்கும்போது விபத்தாகும் பயங்கர சூழலில் கிருஷ்ணன் என்ற கிரிஷ் மிக உயர்ந்த கட்டிடங்களைத் தாண்டிக் குதித்து ஆகாயத்தில் பறந்து விமானத்தை விரட்டிப் பிடிக்கும் சாகசகாட்சியும்... தொடர்ந்து லேண்டிங் ஆகும் போது சக்கரத்தில் நின்று விமானத்தை தாங்கிப் படித்து அனைவர் உயிரையும் காக்கும் நிகழ்வும் என்றும் துவங்கி படம் முடியும் வரை படம் முழுக்க இதே போன்று அதீத சாகசங்கள்
thanks-YouTube-by T-Series
முந்தய கிரிஷ் படங்கள் போன்றே இதுவும் பெண்களைக் கவர நிறைய குழந்தை சென்டிமென்ட்...சிறுவர்களின் வேடிக்கைகள் என்றும் பஞ்சமில்லை ஷாப்பில் மாலில் தவறி விழும் குழந்தையையும் தாயையும் க்ரிஷ் காப்பாற்றும் நிகழ்ச்சி....
படத்தின் நம்பமுடியாத பிரமிப்புக்கு என்று தீய மேதை கால் (Kaal ) மற்றும் அவரது அடியாள்கள் வித்தியாசமான கெட்டப்புகளில்...நீண்ட நாக்கு கொண்ட ஆசூர மனிதன் மற்றும் அவ்வப்போது உருமாறும் காயா என்ற பெண் அடியாள்.....இவர்கள் செய்யும் சாகச சண்டைகள் குழந்தைகளை குதூகலிக்கச் செய்யும்
படத்தின் சிறப்பாக மிகப்பெரிய க்ரிஷ் சிலை திறக்கப்படுவதும் வில்லன் கால் (kaal) கிளைமாக்சில் அச்சிலையின் தலையை உடைத்து அதன் மீது நின்று சண்டை செய்வதும் மற்றும் நிறைய சண்டைக்காட்சிகள் அத்தனையும் வீடியோ விளையாட்டை முன்னிறுத்தியே படம் காட்டப்படுகின்றது இடைவேளைக்குப் பிறகு சில இடங்களில் இதுவே நமக்கு தளர்ச்சி உண்டாக்கி கொட்டாவி....... ஆனாலும் இப்படத்தின் சிறப்பு விரிவும் விறுவிறுப்பும் இந்தியாவில் எடுக்கப் பட்ட ஹோலிவுட் படம் என்று சொல்ல வைக்கின்றது
ரித்திக் ரோஷன்-விஞ்ஞானி தந்தையாகவும் அவரது மகன் சூப்பர் ஹீரோ சக்தி உள்ளவராகவும் இதிலும் சிறப்பாக வேறுபாடு உணர்வுகள் முகத்திலும் நடிப்பிலும் பிரதிபலிக்க நடித்து படம் முழுக்க அவரே நிறைந்துள்ளார் மற்றபடி பிரியங்கா சோப்ரா,விவேக் ஓபராய்,கங்கணா.இவர்களுக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என்றாலும் அவர்கள் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள்
ராஜேஷ் ரோஷன் இசையில் பாடல்கள்அனைத்தும் அருமை அதிலும் ரகுபதி ராகவ்...பாடல் இந்தியாவின் உன்னதத்தையும் காந்திஜியின் மகோத்துவத்தையும் உலக நாடுகளில் பறைசாற்ற...பின்னணி ஸ்கோரில் சலீம் சுலைமான் வீடியோ விளையாட்டின் ஒலிநயத்தை உணர்த்துகின்றது
எஸ்.திருவின் ஒளிப்பதிவில் சாகசங்கள் சண்டைக்காட்சிகள் பிரமிப்பூட்ட பாடல் காட்சிகள் குளுமை...Dil Tu Hi Bataa அப்படியே நம்ம சூப்பர் ஸ்டாரின் எந்திரன் பாடல் காதல் அணுக்களை... நினைவூட்டுகின்றது
ம்ம்ம்ம்.....கோச்சடையானுக்கும் க்ரிஸ் 3-க்கும் அனிமேஷன் தவிர சாகசம் செய்வதிலும் கிராபிக்ஸ் நுட்பத்திலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்காது...எனவே விரைவில் வரவிருக்கும் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் வெற்றிக்கு குழந்தைகளைக் குஷிப்படுத்தி வசூலில் சக்கைப்போடு போடும் ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 3 நிச்சயம் உலகளவில் முன்னோட்டமாக அமையும்...
கடைசித் தகவல்-
சென்னை எக்ஸ்பிரெஸ் சாதனையை முறியடித்து முதலிடம் நோக்கிச் செல்லும் க்ரிஷ் இதுவரை உள்ள இந்திய பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்தப் படமாக வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது...

thanks-YouTube-by m usama

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |