google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அஜித்தின் ஆரம்பமும் அதிரடி விமர்சனங்களும்

Friday, November 01, 2013

அஜித்தின் ஆரம்பமும் அதிரடி விமர்சனங்களும்
(குறிப்பு-இங்கே அஜித்தின் ஆரம்பம் படத்திற்கு நேர்-எதிர் விமர்சனகளும் உங்கள் பார்வையில் ஆரம்பம் படம் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பும்  )


 
இப்போது சினிமாவும் அரசியலும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போன்று நாறிவிட்டது....ச்சே...ஆகிவிட்டது   இங்கேயும் நட்சத்திர நடிகர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் போன்று சில நேரங்களில் போற்றப்படுகிறார்கள்.... சில நேரங்களில் தூற்றப்படுகிறார்கள்


 
அவர்களது படங்கள் வெளிவரும்போதெல்லாம் தேர்தல் காலம் போன்றே நாடு களைகட்டுகின்றது .........அடப்பாவமே...இங்கேயும் யார் அடுத்த முதல்வர் போன்று யார் அடுத்த சூப்பர் ஸ்டார் கலவரமே....அரசியல் தொண்டர்கள் குண்டர்கள் போன்று இங்கேயும் ரசிகர் தொண்டர்கள்...

Made with .freeonlinephotoeditor.com

ஆரம்பம் படம் பற்றி இவியிங்க என்ன சொல்லுராயிங்க...........

ஆரம்பம்-ஹாலிவுட் மூவி ஸ்வார்ட் பிஷ் (Hollywood movie Sword Fish) சாயல் உள்ளதும் அதை விஷ்ணுவர்த்தன் தமிழ் ரசிகர்களின் ரசனை படி கொடுத்துள்ளார் என்று சொல்லும்  ONE INDIA பிரகாஷ் உபாத்தியா....நிறைய சுவராஸ்யமான திருப்பங்கள் & திருப்பங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் மூட்டுகின்றார் என்றும் பாராட்டுகின்றார்
Made with .freeonlinephotoeditor.com
 
இயக்குனர் விஷ்ணுவர்தன், இரட்டை எழுத்தாளர்கள் சுபா,இவர்களுடன்  படத்தொகுப்பாளரான ஸ்ரீகர் பிரசாத் இணைந்து சில இடங்களின் இழுவையான காட்சிகள் இருந்தாலும் பெரும்பான்மை காட்சிகள் மூலம் பார்வையாளர்களை 2.30 மணி நேரம் படத்துடன் விறைப்பாக ஒன்றிட வைத்தமைக்கு பாராட்டவேண்டும் என்று எழுதுகிறது BEHINDWOODS விமர்சனக் குழு (Let’s make this simple ... Arrambam has enough in it to be enjoyed this Diwali) என்று தல அஜித்தின் பன்ச் டயலாக்கில் தீர்ப்பு  சொல்கிறது 
http://tamil.webdunia.com/articles/1308/08/images/img1130808038_5_2.jpg

இரண்டாவது பாதியில் ஃப்ளாஷ்பேக் காட்சியில் படம் கொஞ்சம் இழுவையாக தெரிந்தாலும் ஃப்ளாஷ்பேக் முடியும் போது படத்திற்கு தீவிர  வேகத்தை கொடுத்து படத்தை நகர்த்துவதாகவும் அதே நேரம் ஆரம்பம் படத்தின் கதை  மும்பை தீவிரவாதத்தை தொட்டாலும் தாக்குதலின் போது காயமுற்று உயிரிழந்த போராளிகளுக்கு காணிக்கையாக படம் இருப்பதாக iFlikz வலைத்தளம் பாராட்டுகின்றது 


Made with .freeonlinephotoeditor.com
 
நீங்கள் ஓர் அஜித் ரசிகர்கள் என்றால் மீண்டும் மீண்டும் ஆரம்பம் படம் பார்க்க விரும்புவீர்கள்  ஆனால் நீங்கள் ஓர் அஜித் ரசிகராக இல்லையென்றால்  திரைக்கதைக்காகவும் அதை வெளிப்படுத்திய ஸ்டைல்க்காகவும்  ஆரம்பம் படத்தை விரும்புவீர்கள் என்று
Indiaglitz வலைத்தளம் அமர்களம் செய்கின்றது 

ஆரம்பம் படம் பல்வேறு ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்தி செய்த 
(a satisfying thrill ride) உணர்வை தருகின்றது என்பதுடன் இந்த தீபாவளிக்கு பார்க்க மதிப்பான படம் என்றும் அதன்   பொழுதுபோக்கு அம்சங்கள் உங்களுக்கு சலிப்பூட்டாது என்றும்  Sify வலைதளம் எழுதுகின்றது

இவை இப்படியிருக்க நம்ம ட்வீட்டர்கள் என்ன சொல்லுராயிங்க என்று பார்ப்போம்......


புரட்சி கனல்@IamKanal 
ஆரம்பம் எவளவு தடவ பாத்தாலும் புரியாது போல.. சீன் ப்ய் சீன் ஆடியன்ஸ் கத்திகிட்டே இருந்தா எப்டியா புரியும்.

yoga kanaga@aharan12
மாணவர் போராட்டத்துக்கு கிடைக்காத ஆதரவு பேஸ்புக்கில் ஆரம்பம் படத்துக்கு கிடைத்து இருப்பது கூட அரசியலில் ஒரு புறநிலை வெற்றிதான் .!!


சிந்து Talks@sindhutalks 
ஆரம்பம் ப்ளாக்பஸ்டர்ங்கறது எதிர்பார்த்தது தான்..ஆனா விஜய் பேன்ஸ் இவ்ளோ வயித்தெரிச்சல் படுவாங்கன்னு எதிர்பாக்கல.

நாயோன்@writernaayon 
நியாயமா ஒரே ஒரு விமர்சனம் ஃப்ரம் ஹார்ட். "விஜய்க்கு ஒரு கில்லின்னா.. அஜித்துக்கு ஆரம்பம்" அவ்ளோதான்! #Arrambam

Skedaddle@paidkiller 
ஆரம்பம் தலைவா படத்தை விட நூறு மடங்கு தேவலை! ஆனா மங்காத்தா மாதிரி ப்ளாக்பஸ்டர் ரேஞ்சுக்கு தூக்கி சொல்றதுவும் அபத்தம்!

பொர்க்கி (பால்வீதி)@iindran 


தலைவா படம் பாதிப்பல இருந்து இன்னும் வெளிவரல போல குஞ்சுக.. அதான் லூசு மாதிரி படமே பாக்காம ஆரம்பம் ப்ளாப்னு கதறுதுக 101க்கு அடிக்கவும்

உளவாளி @withkaran 
ஆரம்பம் ஹிட் ஆனத விட சொன்ன தேதில ரிலீஸ் ஆயிருச்சேன்னுதான் இந்த அணில் குஞ்சுகள் அதிகமா அழுகுதுங்க.பிக்காலீஸ்.


Newstig.com@newstignews
கத்தி மீனுன்னு போனா இது இங்க இருக்குற சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி மாற்றம் பண்ணுறோம்ன்னு சொல்லி கெளுத்தி மீனா போயிருச்சு. இருந்தாலும் இப்போ வர மத்த மொக்கை படங்களுக்கு இது எவ்வளவ்வோ மேல். 


ரசிகர்களின் அடடா........ஆட்டம்.....ஆரம்பமே
நான் அப்லோட் பண்ணுனதல அஜித்தோட மாஸ் வீடியோ ஏதோ ஆயிரம் பேர் பார்ப்பாங்க என்று நினைத்தேன்..ஆனால் 7 மணி நேரத்தில 7,000 பேர் பார்த்திருக்கிரங்க....
                             thanks-YouTube-by  Rajesh kumarRajesh kumar

சிக்கல்காரன்@ThowfiqS 
ஆரம்பம் ப்ளாப்னு சொல்லுறவங்களுக்கு எங்க ஊரு பக்கம் தான் ஏர்வாடி.உங்களுக்காக நாலு மரத்துல சங்கிலி கட்டி வைக்கிறேன்.வந்து சேந்துருங்க:)

Rj Visho@vishoprashanth 
சராசரி தமிழ் சினிமா இரசிகனை அடுத்த தளத்திற்கு மேல் தூக்கிச் செல்கிறார் #அஜித் அட்டகாசமான ஆக்ஸன் படம் #ஆரம்பம் மூலம் :)

Thala Ajith "Arambam" Mass Crowd on Special Fans Show at 31.10.2013 Karaikal P.S.R Theater

              thanks-YouTube-by  Rajesh kumarRajesh kumar


காதல்...கவர்ச்சி...திகில்....அதிரடி...ஆட்டம்...பாட்டம்...என்று அறு சுவை படிக்கும் தல-யின் தீபாவளி விருந்து....

நமது கருத்துக்கணிப்பில் ஆரம்பம் படம் வெளிவருவதற்கு முன்னரே மிகப்பெரிய வெற்றிப்படம் என்று  60 % பேர் வாக்களித்து தங்கள் எதிர்பார்ப்பை காட்டினார்கள்...இப்போது ஆரம்பம் வெளி வந்த பின்பு நீங்கள் படம் பார்த்தவர்களாக  உங்கள் பொன்னான வாக்கை அளித்து......

ஆரம்பம் படம் பற்றிய உங்கள் கருத்து என்ன...?வாக்களிக்கும் அனைவருக்கும்..... நன்றி முடிவு = 7/11/2013 
    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1