google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜெ.ஜெ...எனும் அம்மாவின் வாழ்க்கை

Monday, February 24, 2014

ஜெ.ஜெ...எனும் அம்மாவின் வாழ்க்கை


இதுதான் ஜெ.ஜெ...எனும் (தமிழக முதல்வர்) அம்மாவின் வாழ்க்கை...........அந்தப் பிரம்மன் அவர் தலையில் எழுதிய எழுத்து....... அதிர்ஷ்டத்தின்   ஆட்டோகிராப்   

 
பள்ளிப் படிப்புக்கு பாதிப்பு வராமல் 1961-ல் Epistle என்ற ஆங்கிலப்படத்தில் நடித்த  அம்மா தனது 15-வயதில் நடித்த முதல் படம் சின்னடா கொம்பே என்ற கன்னட படம் தமிழில்வெண்ணிற ஆடையில் அறிமுகமாகி.......

தமிழ் திரைப்படப் பட வரலாற்றில் முதன் முறையாக குட்டைப்பாவாடை (skirt) அணிந்து புரட்சியாக நடித்த ஒரே நடிகையான அவர் நடித்த படங்களில் அவரது கதாப்பாத்திரம் அவரது இயல்பான யாருக்கும் அடிபணியாத குணத்தையும் பிரதிபலிக்கும்.....



யாருக்கும் அடிபணியாத லண்டனில் படித்து விட்டு கிராமத்துக்கு வரும் கல்பனாவாக  அவர் நடித்த பட்டிக்காடா பட்டணமா அவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது 1972-ல் முதல் முறையும் அவரது சூர்யகாந்தி படம் 1973-ல் இரண்டாவது முறையும் அவரது தெலுங்கு ஸ்ரீ கிருஷ்ணா சத்ய மூன்றாவது முறையும் பெற்றுத்தந்தது 


jayalalitha

அதேபோல் அவர் சுதந்திரப் பறவையாக  நடித்த தெய்வமகன் சிறந்த வெளிநாட்டு மொழிக்கான ஆஸ்கர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்படம் ஆகும்



அவர் எம்ஜிஆருடன் நடித்த ஆயிரத்தில் ஒருவன்,காவல்காரன்,அடிமை பெண்,எங்கள் தங்கம்,குடியிருந்த கோயில்,ரகசிய போலிஸ் 115, நம் நாடு....என்று அனைத்தும் வெற்றிப்படங்களே.........அதுவே அவருக்கும் எம்ஜிஆருக்கும் ஒரு நெருக்த்தை தந்தது...



அம்மா அவர்களை எம்ஜிஆர்  அரசியலிலும் பங்காற்ற அழைத்தப்போது முதலில் மறுத்த அவர் 1982-ல் அதிமுகவில் இணைந்தார்.... அரசியலில் அவரது முதல் பேச்சு-பெண்ணின் பெருமை அவருக்கு பெரும் புகழும் தந்து அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆக்கியது 


beach

அவரது ஆங்கிலப் பேச்சுத் திறமையை அறிந்த எம்ஜிஆர் ராஜ்யசபை உறுப்பினர் ஆக்கினர் பிறகு பல சூது கவ்வும்  போராட்டங்களில் வெற்றிபெற்று 1991-ல் முதலமைச்சரானார் தொடர்ந்து மூன்றாவது தடவையாக முதல்வராக இருக்கும் அவர் நாளையப்  பிரதமராக......... பேசப்படுகின்றார்


cricket

அச்சுறுத்தலாலும் கடுமையான நடவடிக்கையாலும் யாரும் என்னிடமிருந்து எதையும்  பெறவோ அல்லது என்னை அடிபணிய வைக்கவோ முடியாது.யாருக்கும் எனது ஒத்துழைப்பு வேண்டுமென்றால் என்னிடம் அன்பாக,பணிவாக,கொஞ்சலாக நடந்துகொள்ள வேண்டும்..... இது 1985-ல் அம்மா அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது........



















அவரது  இன்றைய செயல்பாடுகள் அத்தனையும் இதற்கு சான்று இன்று அம்மா 7-பேர் விடுதலை தீர்மானம்கூட அடுத்த பிரதமாராக அம்மா வந்தாலும் வருவார்களோ...?  என்ற அச்ச உணர்வை இந்திய அரசியலில் காங்கிரஸ்,பாஜக,ஆம் ஆத்மி கட்சிகளுக்கு ஊட்டியுள்ளது......


jj

இன்று  பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் சினிமா-அரசியல் வாழ்வில் நேற்று நடந்தவைகள் அத்தனையும் அவர்கள் திட்டமிட்டச் செயல்கள் அல்ல...நாளை பிரதமர் பதவியும் நடக்காது என்று சொல்வதற்கில்லை.........

Made with FreeOnlinePhotoEditor.com  

சிலநேரங்களில் கல்லெடுத்து எறியாமல் தானாக அவரது மடியில் விழுந்த வெற்றிக்கனிகள்......பலநேரங்களில் அவர்கள் எதிரிகள் எறியும் கல்லில் இவரது மடியில் வந்து விழும் வெற்றிக்கனிகள் 

Made with FreeOnlinePhotoEditor.com  
இதுதான் ஜெ.ஜெ...எனும் அம்மாவின் வாழ்க்கை...........அந்தப் பிரம்மன் அவர் தலையில் எழுதிய எழுத்து....... அதிர்ஷ்டத்தின்   ஆட்டோகிராப்  



என்  பதிவுலக நண்பர்களே! உங்கள் பார்வையில்............
அடுத்தப் பிரதமராக அம்மா வர (அதிஷ்ட) வாய்ப்பு உள்ளதா...?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-3/3/2014


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1