google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குக்கூ-சினிமா விமர்சனம்

Friday, March 21, 2014

குக்கூ-சினிமா விமர்சனம்


இருட்டில் வாழும் இரண்டு பார்வையற்ற மாற்று திறனாளிகளின் இதயத்தில் ஒளிரும் அழகான காதலை நளினமான  உணர்வுடனும் யதார்த்தமான நகைச்சுவையுடனும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.........குக்கூ திரைப்படம்

விகடன்  பத்திரிகை எழுத்தாளராக வரும் ராஜு முருகன் தான் பேட்டிகண்ட  பார்வையற்ற இளம் ஜோடி தமிழ்(தினேஷ்) -சுதந்திரக்கொடி (மாளவிகா)யின்  காதல் கதையை  நினைத்துப் பார்ப்பதுபோல் படம் துவங்குகின்றது.......

ரயிலில் கிண்டலிலும் மோதலிலும் ஆரம்பிக்கும் அவர்கள் காதலுக்கு வில்லனாக கொடியின் அண்ணனும் அவனது நன்பனும் வர காதலர்கள் பிரிக்கப்படுகின்றார்கள்....

இருவரும்  ஓன்று சேர நினைக்கும் போது...தமிழ் விபத்தில் மாட்டிக்கொள்ள...... கொடி வீட்டைவிட்டு தப்பி ஓடுகின்றாள்....

எழுத்தாளர் இந்தக்  கதையை விகடனில் எழுதி சுதந்திரக்கொடியை கண்டவர் தெரியப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்ள ஒரு வாசகர் கொடியை மும்பையில் பார்த்ததாகச் சொல்கின்றார்.....

தமிழ் கொடியை சந்தித்தாரா...? இருவரும் ஓன்று சேர்ந்தார்களா...? பார்வையற்ற அவர்களின்  காதலில் வெளிச்சம் வந்ததா...? என்பதே கதை 

சிறு சிறு  காட்சிகளாகச்  சொல்லி இயக்குனர் ராஜு முருகன் படத்தின் கதையை நகர்த்திச் செல்வதால் நீங்கள் குக்கூ படம் பார்த்தால்  மட்டுமே இந்த அழகான ஜோடிகளின்  உண்மையான காதலை உள்ளத்தில் உணரமுடியும்

படத்தின் சிறப்பான காட்சிகளாக........
-டைட்டில் போடும்போதே ஒளியில்லாமல் இருளாக பின்னணியில் ஒலி சப்தங்கள் மட்டுமே வைத்து  திரையில் காட்டுவது....
-தமிழ் நெற்றியில் காயம் பட  தாக்கிய கொடி பிறகு பிராத்தனை செய்வது..
-தமிழும்-கொடியும் சர்ச்சில் மின்வெட்டு இருளில் காதல் செய்வது....
-தமிழ் தன் அம்மாவை அடக்கம் செய்யுமுன் தாயின் முகத்தைத் தடவிப் பார்ப்பது...
-கொடியின் சர்விஸ் ரீடர்ஸ் காதலர்கள் அவளை ஓட்டலில் சாப்பிட வைத்து பேஸ்-புக்கில் போட போட்டா எடுப்பது....
-நள்ளிரவில் கொடியையும் தமிழையும் காப்பாற்றும் வேன் டிரைவர்...
-தமிழ் இசை நடனகுழுவில் இளையராஜாவின் பழைய  காதல் மெலோடிகளை பாடுவது........என்று நிறைய சொல்லலாம்

தினேஷ் இப்படத்திலும் யதார்த்தமாக நடித்து மீண்டும் தான் ஒரு கதை நாயகன் என்பதை நிருபித்துள்ளார்....மாளவிகாவின் அழகான அதேநேரம் சாந்தமான முகம் படம் பார்ப்பவர்களை ஈ...ர்க்கின்றது மற்றபடி  ஆடுகளம் முருகதாஸ்,தமிழ் நண்பராக வரும் இளங்கோ,ராக் அண்ட் ரோல் இசை நடனம் ஓனர் மூன்று பொண்டாட்டி சந்திரபாபு,எம்ஜிஆர், விஜய், அஜித்...குழுவினர் நல்ல காமெடி 

படம்  முதல் பாதி காதல் அரும்புவதிலும் இரண்டாம் பாதி பிரிவும் தேடலும் என்று போய்கொண்டிருக்க பாடல்கள் பிரேக் அடிப்பது போல் தோன்றினாலும் சந்தோஷ் நாராயணனின் இனிமையான இசையாலும் வர்மாவின் அருமையான ஒளிப்பதிவாலும் நன்றாகத்தான் உள்ளது 

படத்தின் 90 விழுக்காடு காட்சிகள் ரயில் நிலையம்....எக்மோரில் துவங்கி பூனே வரை நீண்டுகொண்டே.....ஆனாலும் வர்மாவின் கேமரா நமக்கு இந்தக் கோடையிலும் குளுமை  

இயக்குனர் ராஜு முருகனின் குக்கூ திரைப்படம் பார்வையற்ற மாற்று திறனாளிகளின் வாழ்க்கையில் உள்ள இனிப்பான,கசப்பான,அன்பு, அவலங்களை வெள்ளித்திரையில் நளினமான  உணர்வுடனும் யதார்த்தமான நகைச்சுவையுடனும் ஆபாசம் இல்லாமல் அழகாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றது 
 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1