google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சரபம்-சினிமா விமர்சனம்

Saturday, August 02, 2014

சரபம்-சினிமா விமர்சனம்


சரபம் என்றால் என்ன? சிங்க முகமும் வாலும் கொண்ட ஆக்ரோசமான பறவை ஆகும்  சரபம் படத்தில அப்படி எந்த விசித்திர பூச்சியும் இல்லை ஆனால் பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஒரு விசித்திர மனிதன் பற்றி........

அறிமுக  இயக்குனர் அருண் மோகன் ஒரு மர்மமான கடத்தல் பின்னணி உள்ள திரைக்கதையில் நவீன் சந்திரா,சலோனி லுத்ரா,ஆடுகளம் நரேன்...இவர்கள் மூவரையும் வைத்து முப்பதுநாளில் அதீத வேகத்தில் காட்டிய படமே........சரபம்

கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி புராஜெக்ட் இஞ்சினியர் நவீன் சந்திராவின்  தீம் பார்க் பிளான்  சர்வசக்தி வாய்ந்த தொழிலதிபர்   ஆடுகளம் நரேனால் நிராகரிக்கப்படுகிறது

அதனால் ஆத்திரம் அடைந்த நவீன்  பழிவாங்கும் எண்ணத்துடன் நரேனின் அடங்காப்பிடாரி மகள் சலோனியுடன் சேர்ந்து அவள் கடத்தப்பட்டதாக போடும்  நாடகத்துடன் முதல் பாதியும்...........

அந்த கடத்தல் நாடகம் என்ன ஆனது? என்பதை பல  திருப்பங்களுடன் பார்வையாளர்களை இருக்கையின் விளிம்பிலேயே அமரவைக்கும் திகிலுடன் இரண்டாம் பாதியிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

இயக்குனர் அருண் மோகன் தன் சிறப்பான திரைக்கதையால் சரபம் படத்தின்  பின்பகுதியில் வரும் திகில் காட்சிகளுக்கு ஏற்ப நல்ல திடமான பவுன்டேசன் முன்பகுதியில் போடுகிறார் ஆனாலும் அவரது மெதுவான கதை சொல்லும் போக்கு படத்திற்கு பின்னடைவு 

இன்னும் அறிவுஜீவி பார்வையாளர்கள் காட்சியின் தன்மையை ஊகித்துவிடுவார்கள் மேலும் சாதாரனமான பார்வையாளர்கள் விரும்பும் காதலும் காமெடியும் மிஸ்ஸிங்

நவீன் சந்திரா நடிப்பில் அவர் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது ஆனாலும் பெரிய ஹீரோயிசம் இல்லாத வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ளார்........

 ஆடுகளம் நரேனிடம்  ஆடுகளம் படத்திற்குப் பிறகு மீண்டும் வசப்படுத்தும் நடிப்பு மிளிர்கிறது 

சலோனி..... தண்ணியும் தம்மும்  என்று புதுமைப் பெண்ணாக கலக்கல் நடிப்புடன் வருகிறார் கோலிவுட்டில் இன்னும் கொஞ்சகாலம் நல்ல இடம் பிடிப்பார்

பிரிட்டோ மைகேல் தன் பின்னணி இசையில் படம் பார்ப்பவர்களை கவர்ந்திட... கிருஷ்ணன் வசந்த்தின்  ஒளிப்பதிவு கதைக்கேற்ற வண்ணத்தை திரையில்  வரைந்துள்ளது 

எல்லாவற்றையும் விட எடிட்டர் லியோ ஜான் பால் தன் கத்தரியால் படத்துக்கு தேவையான விறுவிறுப்பை வழங்கியுள்ளார்

சரபம்........சாதாரனமான கதையுடன் தொடங்கி அசாதாரணமாக திரையில் தெரிகிறது

 பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் கிளைமாக்ஸ் காட்சியுடன் வந்துள்ள திகில் திரைப்படம் சரபம் ஒருமுறை பார்க்கலாம்

படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...............


சரபம்-படம் எப்படியிருக்கு?




வாக்களிக்கும்  அனைவருக்கும் நன்றி..........முடிவு-9/8/2014



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1