google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தி எக்ஸ்பென்டபில்ஸ் 3 - சினிமா விமர்சனம்

Wednesday, August 27, 2014

தி எக்ஸ்பென்டபில்ஸ் 3 - சினிமா விமர்சனம்

ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம்...போன்ற கிழட்டு நடிகர்களுடன் ஆர்யா,விஷால்,அதர்வா,விக்ரம் பிரபு,கெளதம் கார்த்திக்,சிம்பு...போன்ற இளம் நடிகர்கள்  நடித்து கோலிவுட்டில் ஒரு படம் வந்தால் எப்படியிருக்குமோ....? அந்த உணர்வு தருகிறது ஹாலிவுட் படம்......... தி எக்ஸ்பென்டபில்ஸ் 3

உலகளவில் பயங்கர ஆயுத வியாபாரி தலைவனை  சில்வஸ்டர் ஸ்டலோன் தலைமையிலான எக்ஸ்பென்டபில்ஸ் டீம் கண்டுபிடித்து அழிப்பதே படத்தின் கதை 

எக்ஸ்பென்டபில்ஸ் தலைவர் சில்வஸ்டர் ஸ்டலோன் தனது குழுவினருடன்  இராணுவ சிறையிலிருக்கும்  தங்கள் முன்னாள்  நண்பரை ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஓடும் ரயிலில் சாகச சண்டையிட்டு மீட்பது போல்  படம் துவங்குகிறது 

சில்வஸ்டர் ஸ்டலோன்  இவர்களுடன்  சென்று சோமாலியாவில் சட்டவிரோத ஆயுத வியாபாரம் செய்யும் கும்பலை தடுக்கும் போது ஏற்படும் சண்டையில் ஆயுத வியாபார தலைவன் மெல் கிப்சன் சுட்டதில் எக்ஸ்பென்டபில்ஸ் குழுவில்  இவர்களுக்கு உறுதுணையாக இருந்த   சீசர் (Terry Crews) காயம்படுகின்றார்

அதனால்  சில்வஸ்டர் ஸ்டலோன் தன் பழைய நண்பர்களை விட்டுவிட்டு எக்ஸ்பென்டபில்ஸ் அமைப்பாளர் ஹாரிசன் ஃபோர்டு தூண்டுதலால் லாஸ் வேகாஸ் சென்று தனது அணிக்கு இளம் கூலிப்படையினரை திரட்டுகின்றார் 


சில்வஸ்டர் ஸ்டலோன் இந்த புதிய இளம் அணியில் உள்ள   (ஒரு முன்னாள் கடற்படை வீரன்,  ஓர் இரவு விடுதி பெண் பாதுகாவலர், ஒரு கணணி நிபுணர் மற்றும்  ஓர் ஆயுத வல்லுனர்) கூலிப் படையினர் உதவியுடன் மெல் கிப்சனுடன் மோதும் போது...

மெல் கிப்சன் அந்த இளம் அணியினரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொள்கிறார் 

மீண்டும் சில்வஸ்டர் ஸ்டலோன் தன் பழைய  எக்ஸ்பென்டபில்ஸ் அணி நண்பர்களுடனும்  அவரது இன்னொரு நண்பர் அர்னால்ட் உதவியுடனும் ஆயுத வியாபாரி மெல் கிப்சனை அழித்து இளம் அணியினரை மீட்பதுடன் படம் நிறைவடைகிறது 

அப்படியே சில்வஸ்டர் ஸ்டலோன் தலைமையில் புதிய திறமைகளுடன் இன்னொரு இளம் அணியினர் அடங்கிய தி எக்ஸ்பென்டபில்ஸ் 4 படத்திற்கு இயக்குனர் ஹக்ஸ் கதவு திறந்து வைக்கிறார்



எக்ஸ்பென்டபில்ஸ் பழைய அணியில் ஹாலிவுட் கிழட்டு நடிகர்களும் புதிய அணியில் இளம் நடிகர்களும் கலக்கலாக நடித்துள்ளனர் ஒருவருக்கொருவர் பெரிசு-இளசு என்று நக்கலடிப்பது செம காமெடி........
 
படம் முழுக்க சில்வஸ்டர் ஸ்டலோன் மட்டுமே நிறைந்து இருந்தாலும் அர்னால்ட் வரும் சில காட்சிகளில் மட்டுமே அரங்கம் அதிர்கிறது 


தி எக்ஸ்பென்டபில்ஸ் 3 தமிழ் பதிப்பில் வசனங்கள் நம்ம கோலிவுட் படங்களில் வருவதைவிட சுவராசியமாக உள்ளது நிறைய பன்ச் வசனங்கள் சிரிப்பூட்டுகிறது மேலும் படையப்பா படத்தில் வரும் வெற்றி கொடிகட்டு....பாடல் ரசிக்கும்படி உள்ளது   

தமிழில் வரும் அதிரடிப் படங்களைவிட தமிழாக்கம் செய்யப்பட்ட  தி எக்ஸ்பென்டபில்ஸ் 3  ஹாலிவுட் படம் ரொம்ப தமாஸாகத்தான் உள்ளது நேரம் போவதே தெரியவில்லை 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1