google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆள்-சினிமா விமர்சனம்

Monday, September 22, 2014

ஆள்-சினிமா விமர்சனம்


சமீபத்தில்  பிரதமர் மோடி சொன்னதுபோல் "இந்திய முஸ்லீம்களின் தேசப்பற்று குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது" என்ற கருத்தை பிரதிபலிப்பது போல்..........

முஸ்லீம் தீவிரவாதிகள் பற்றிய உலகளாவிய சர்ச்சையை கதைக்கருவாக எடுத்து தீர்க்கமான திரைக்கதையுடன் அமைதியும் நல்லிணக்கத்தையும் வலியிறுத்தி  திகில் படம் காட்டுகிறது  விதார்த் நடித்த.... ..ஆள் 


aal

சிக்கிமில் உள்ள ஓர் அழகான ஊரில் இருக்கும் ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் விளையாட்டு பயிற்சியாளராக வேலை செய்யும் சென்னையை சேர்ந்த அமீர் (விதார்த்)........

 ஒருநாள் சில மாணவர்களால் தீவிரவாதி என்று அடித்து விரட்டப்படும் ரிஸ்வான் என்ற முஸ்லிம் இளைஞனை காப்பாற்றி (இவனால்தான் பின்னாடி பெரிய சிக்கல் வரும் என்பது தெரியாமல்...) அவன் மேல் பரிதாபப்பட்டு தன்னுடன்  தன் அறையில் தங்க வைக்கிறார்

நட்பாக பழகிய ரிஸ்வானுடன் அமீர் சென்னையில் உள்ள தன் அம்மா,தம்பி,தங்கை மீது உள்ள பாசத்தையும் தன் வேற்றுமதக் காதலி மீனாட்சி (ஹர்திகா ஷெட்டி) பற்றியும் சொல்லி பகிர்ந்துகொள்கிறார்

 காதல் விவகாரம் தன் காதலியின் அப்பாவுக்கு தெரிந்ததால் திருமண விசயமாக   அவரை  சந்திக்க சென்னை விமான நிலையம் வரும் அமீருக்கு போனில் வரும் ஒரு மர்ம அழைப்பு......

அவரது குடும்பத்தினரை பணயக் கைதியாக பிடித்து வைத்து அச்சுறுத்தலுடன்........ அவரை "ஜிஹாத்" அவசியத்தை பற்றி மூளைச்சலவை செய்து பல பயங்கரவாத செயல்களை செய்ய வலியுறுத்துகிறது 

 தன் குடும்பத்தை காக்க அந்த மர்மக் குரலுக்கு அடிபணிந்து அமீர் பயங்கரவாத தீவிரவாதியாக மாறினாரா....? அமீரின் காதல் என்ன ஆனது...? என்பதை ஆள் படத்தில் திகிலுடன் படம் காட்டுகிறார் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா

இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா......ஃபிலிப்பைன்ஸ் CAVITE தாக்கத்தில் வந்த அமீர் (இந்தி) படத்தின் அப்பட்டமான தமிழ் ரீமேக் ஆள் படத்தில்.....

இன்றைய சமுக அரசியல் சூழலில் ஒரு சாதாரண முஸ்லிம் இளைஞர் தான் சார்ந்துள்ள மத நம்பிக்கைக்கும் மத பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கும் இடையில் எப்படி சங்கடப்படுகிறான் என்பதை திகில் காட்சிகளாக பிரதிபலிக்கிறார் 

ஆள்-படத்தில் முன்பாதியில் வரும் அதிகபட்ச உரையாடல்களும் பின்பகுதியில் வரும் அதிகபட்ச உணர்வு பூர்வமான காட்சிகளும் ரசிகர்களுக்கு சலிப்பூட்டுகின்றன 


aal

விதார்த்......அடுத்த கட்டத்தை எட்டியுள்ள இவரது நடிப்பு அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் குறிப்பிடத்தக்கது ஹர்திகா ஷெட்டி.... நடிப்பதற்கு அதிக சந்தர்பம் இல்லை என்றாலும் சொக்கவைக்கும்  அழகுக்கும் கவர்ச்சிக்கும் பஞ்சமில்லை 

ஜோகனின் பின்னணி இசை கதை ஓட்டத்துக்கு இடையூறு இல்லாமல் அற்புதமாக உள்ளது அதேநேரம் என்.எஸ்.உதயகுமாரின் கேமரா சிக்கிமின் அழகை அள்ளிவந்துள்ளது


aal

ஆக மொத்தத்தில்..........
அதிகபட்ச உரையாடல்,பலவீனமான கதாநாயகி பாத்திரப் படைப்பு,சலிப்பூட்டும் கதை சொல்லலால் கொஞ்சம் தள்ளாடினாலும்.........

வலுவான கதை,திரைக்கதை,பின்னணி இசை,விதார்த் நடிப்பு,அழகியல் காட்டும் ஒளிப்பதிவு...இவைகளால் சமுக சிந்தனையுடன் வந்துள்ள இந்த ஆள்......பரவாயில்லை


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1