google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காவியத்தலைவன்-சினிமா விமர்சனம்

Friday, November 28, 2014

காவியத்தலைவன்-சினிமா விமர்சனம்

மின்சார LED விளக்கு காலத்தில் மண்ணெண்ணெய் அரிக்கேன் விளக்கு காலகட்டத்தில் நடந்த கதையை திரைப்படமாக காணும் மனநிலையில் நாம் மாறிக்கொண்டால்.......

இயக்குனர் வசந்தபாலன்,இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்,எழுத்தாளர் ஜெயமோகன் போன்ற முப்பெரும் கலைப் படைப்பாளிகளின் காவியத்தலைவன் திரைப்படம் இந்த ஆண்டின் மிகச் சிறந்த  ஒரு கலைப் படைப்பாகும் 

சுதந்திரகாலத்திற்கு முற்பட்ட ஒரு நாடக சபாவில் வாழும் இரண்டு நாடக நடிகர்களின் நட்பு,காதல்,கோபம்,பொறாமை, துரோகம்... போன்றவைகளை சில கதாப்பாத்திரங்கள் மூலம் படம்காட்டுவதே.... காவியத்தலைவன்

படத்தின் கதையாக........

மதுரையில் பிரபலமாக விளங்கும்  நாடகக் கம்பெனி ஸ்ரீலஸ்ரீ பால சண்முகானந்தா நாடகசபா முதலாளி சிவதாஸ் சுவாமி(நாசர்)களின் நாடகக் குழுவில் உள்ள  கோமதிநாயகம் (பிரிதிவிராஜ்)  தனக்கு கிடைக்க வேண்டிய ராஜாபார்ட் வேடம் கிடைக்காததால்   சக நடிகர் காளியப்பா (சித்தார்த்) மீது நட்பாகப் பழகிக்கொண்டே பொறாமையால்....

காளியப்பாவுக்கும் ஒரு ஜமீன்தாரின் மகளுக்கும் இடையில் உள்ள காதலை சிவதாஸ் சுவாமிகளிடம் காட்டிக்கொடுத்து ராஜாபார்ட் வேடத்தை பறித்துக்கொள்கிறான்

சக நாடக நடிகை வடிவாம்பாள் (வேதிகா)கூட தன்னைக் காதலிக்காமல் காளியப்பாவை காதலிப்பதால் சிவதாஸ் சுவாமிகள் மரணத்திற்குப் பிறகு நாடகசபாவை தலைமை ஏற்று நடத்தும் கோமதிநாயகம் காளியப்பாவை தங்கள் சபாவிலிருந்து விரட்டிவிடுகிறான்

பெரிய நாடக நடிகராக வெளிநாடுகள் சென்று 5 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை வரும் கோமதி நாயகம் ஒருநாள் விஷக் காய்ச்சலில் நடிக்க முடியாமல் போக காளியப்பாவை தேடிபிடித்து தங்கள் நாடகத்தில் நடிக்க வைக்கிறார்கள்

மீண்டும் காளியப்பா பாகவதராக பேரும் புகழும் அடைகிறான் வடிவாம்பாளுக்கும் காளியப்பா மீது காதலும் தீவிரமடைகிறது இதனால் தந்திரமாக கோமதிநாயகம் காளியப்பாவின் தேசப்பற்றை வெளிப்படுத்தி அவனை சிறையில் அடைக்கிறான்

சிறையிலிருந்து வெளிவரும் காளியப்பா பல சுதேசி நாடகங்கள் நடித்தி பெரிய அளவில் வளர்ந்து வடிவாம்பாளையும் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறான் கோமதியின் நாடக சபா அழிந்துபோக அவனையும் தன் நாடக சபாவில் காளியப்பா சேர்த்துக் கொள்கிறான்

ஆனால்......

ஒருபுறம்  கோமதி நாயகம் வடிவாம்பாளை அடைவதற்காக காளியப்பாமீது நயவஞ்சக கொலைவெறியுடன் கூடவே இருக்க.....
இன்னொருபுறம் வெள்ளைக்கார போலிஸ் உயர் அதிகாரி சுதேசி நாடகங்கள் நடத்தும் காளியப்பாவை சுட்டுக் கொல்ல வாரன்ட்வுடன்  கொலைவெறியில் அலைய......

இவர்களிடமிருந்து காளியப்பா பாகவதர் உயிருடன் பிழைத்தாரா...? என்பதை பல உணர்வுப் பூர்வமான காட்சிகளாளும் சில எதிர்பாராத திருப்பங்களாலும்  உயிரோட்டமாக பட்ம்காடுகிறார் இயக்குனர் வசந்தபாலன்

படத்தின் சிறப்பான காட்சிகளாக.........

-ரயிலில் காளியப்பா  பாடி பிச்சையெடுக்கும் சிறுவனாக தோன்றும் பிளாஸ்பேக் காட்சி
-சூரபத்மன் நாடகத்திற்கான ஒத்திகையும் காளியப்பாவை  முதன்முதலாக ராஜாபார்ட் வேடத்திற்கு சிவதாஸ் சுவாமிகள் தேர்வு செய்யும் காட்சி
-சிவதாஸ் சுவாமிகள் காளியப்பாவின் காதலை கண்டித்து அடித்து உதைக்கும் காட்சி 
-சிவதாஸ் சுவாமிகள் மீது  காளியப்பா தன் காதலியின் மரணத்திற்கு காரணம் என்று சாபமிட்டு மண்வாரித் தூவும் காட்சி 
-படத்தில் பாடலுடன் வரும் பவளக்கொடி,கர்ணமோட்சம்....போன்ற நாடகக்காட்சிகள் அத்தனையும் ரசிக்கும்படி இருக்கின்றன 
-காளியப்பா-வடிவாம்பாள் டூயட் பாடல் யாருமில்லா தனியரங்கில்....என்ற பாடலின் இசையும்  காட்சியாக்கப்பட் விதமும் அருமை 
-கடைசியில்  வரும் வாரணாசி திவசக் காட்சியும் சாமியார்களும் 
இதுபோல் நிறைய காட்சிகள் படத்தில் உள்ள ஒன்றிரண்டு சோடைக் காட்சிகளை மறக்கடித்தி படத்தோடு நம்மை ஒன்றிடச் செய்கிறது 

இயக்குனர் வசந்தபாலன்....இந்த அதிவேக காலக்கட்டத்தில் இதுபோன்ற ஆமைவேக நாடகத்தன்மை உள்ள நாடகக் கதையை   அனைவரும் ரசிக்கும் வண்ணம் சினிமாவாக்கியது சினிமா மீது அவருக்கு உள்ள நேசத்தின் பிரதிபலிப்பு ஆயினும்...

திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம் ஆனாலும் கிளைமாக்ஸ் வாரணாசி காட்சி வசந்தபாலனின் இயக்கத்திற்கு அரங்கத்தில் கரவொலிகள் வெகுமதியாக.....

எழுத்தாளர் ஜெயமோகன்......அவரது காவிப் பற்றையும் காவியப் பற்றையும் கொஞ்சம் தேசப்பற்றுடன் கலந்து ஒரு கற்பனை கதைகட்டியுள்ளார் படம் பார்க்கும் போது மகாபாரத கதைகளின் உல்டாவாக ஒரு நாவலைப் படிக்கும் உணர்வு அதிகமாக மிஞ்சி விஞ்சி நிற்கிறது ஜனரஞ்சகம் அஞ்சி எஞ்சி நிற்கிறது 

ஏ.ஆர்.ரகுமான்......இசையில் ஒரு சரித்திரம் படைத்துள்ளார் பழைய நாடகங்கள் காட்சியாக வந்தாலும் இன்றைய நவநாகரீக மாந்தர் ரசனைக்கு ஏற்ப தூள் கிளப்புகிறார் பாடல்கள் அத்தனையும் காட்சிகளோடு கேட்பது மனதைக் கவர்கிறது 

நிரவ் ஷா ஒளிப்பதிவில்......அந்தக் காலகட்டத்திற்கேற்ப வண்ணத்தை பிரதிபலிக்கிறார் ஒப்பனையும் கலையும் காட்சிகளுக்கு ஒருவித நிஜத்தன்மையை காட்டி காட்சிகள் களைகட்டுகின்றன

நடிகர்கள் சித்தார்த்தும் பிரிதிவிராஜும் சம பங்கிட்டு கதைக்கேற்ப நடித்துள்ளனர் சித்தார்த் முகபாவனையில்  கதைக்கேற்ற அப்பாவித்தனமும் பிரிதிவிராஜ் முகபாவனை நிறைய நேரம் நம்பியார் சாயலும் அப்பட்டமாக தெரிகிறது வேதிகா....அழகாக தெரிகிறார் நடிப்பிலும்

நடிகர் பொன்வண்ணன்...ராஜாபார்ட் வைரவர் பாகவதராக  கொஞ்ச நேரமே வந்து போனாலும் மனதில் நிற்கிறார் நடிகர்கள் சிங்கம் புலி,தம்பி ராமையா,மன்சூர் அலிகான்... சிரிக்கவைக்கிறார்கள் நாசர்....நடிப்பின் உச்சத்தை இப்படத்தில் எட்டிவிட்டார் 

ஆக மொத்தத்தில்............

மின்சார LED விளக்கு காலத்தில் மண்ணெண்ணெய் அரிக்கேன் விளக்கு காலகட்டத்தில் நடந்த கதையை திரைப்படமாக காணும் மனநிலையில் நீங்கள்  மாறிக்கொண்டால்.......
காவியத்தலைவன்  படம் பார்க்கும் உங்கள் முகம் பிரகாசமாக தெரியும் இல்லையேல்......பியுஸ் போன பலப்  


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு.........

காவியத்தலைவன்-படம் எப்படியிருக்கு........?படம் பார்த்து......
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......... 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1