google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: திருடன் போலீஸ்-சினிமா விமர்சனம்

Friday, November 14, 2014

திருடன் போலீஸ்-சினிமா விமர்சனம்


போலீஸ் துறையில் வெளியே தெரியாமல் நடக்கும் சில அவலங்களின் பின்னணியில் தந்தை மகன் குடும்பப் பாசத்துடன் கொஞ்சம் காதலும் நிறைய காமெடியுமாக அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜு அட்டகாசமாக சிரிக்கவைத்து படம் காட்டுவதே ......... திருடன் போலீஸ்

படத்தின் கதையாக...........

வேலைவெட்டியில்லாத இளைஞன் விஸ்வா (அட்டகத்தி தினேஷ்)வுக்கு தன் போலீஸ் ஏட்டு அப்பா   (ராஜேஷ்) மீது கொஞ்சமும் மரியாதையை இல்லாமல் நடந்துகொள்வதுடன்  அவரது உயர் போலிஸ் அதிகாரி ஏகாம்பர (முத்துராமன்) த்தின் மகன் நிதின் சத்யாவையும் அடித்து காயப்படுத்துகிறான் 

லோக்கல் ரவுடிகளான மாணிக்கம் (நான் கடவுள் ராஜேந்திரன்) அவன் தம்பி ஜான் விஜய் உதவியுடன்  நிதின் சத்யா ஒரு பெண் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட.....
அதை தெரிந்து கொண்ட ஏட்டு ராஜேஷை  உயர் போலீஸ் அதிகாரி ஏகாம்பரம்   ஒரு என்கவுண்டர் நாடகம் போட்டு அந்த ரவுடிகளை வைத்தே  கொன்றுவிடுகிறார்
ஏட்டு ராஜேஷின் நேர்மையை அறிந்த கமிஷனர் ஆடுகளம் நரேன்   காவல்துறையில் விஸ்வாவுக்கு போலீஸ் வேலை போட்டுகொடுக்கிறார் 

போலீசான விஸ்வா அந்த வேலையில் இருக்கும் கஷ்டத்தை பார்த்து அப்பா மீது பாசம் வருகிறது அவரைக் கொன்ற ரவுடிகளையும்  உயர் போலீஸ் அதிகாரியையும் கண்டுபிடித்து ஒரு சைகோ போல் காமெடியாக சித்திரவதை செய்து தண்டனை வாங்கிக் கொடுப்பதே.............

படத்தின் சிறப்பான காட்சிகளாக..........
-தன் காதலி ஐஸ்வர்யாவின் அக்கா குழந்தையை ரவுடி ராஜேந்திரன் ஆட்கள் கடைவீதியில் கடத்தி ஒழித்து வைத்திருப்பதை தினேஷ் கண்டுபிடிப்பதும் காதல் அரும்புவதும்........
-புழல் சிறையில் ரவுடி ராஜேந்திரன் ஜான் விஜய் இருவரையும் யார் என்று தெரியாமலேயே தினேஷ் அடித்து உதைப்பது
-டாஸ்மாக் பாரில் தினேஷ் அப்பா சென்டிமெண்டில்   பாலசரவணனுடன் பீர் பாட்டிலை அடிக்கும்  காமெடி கலாட்டா 
-கிளைமாக்ஸில் ரவுடிகளுக்கும் உயர் போலிஸ் அதிகாரிக்கும் தினேஷ் பிரியாணி விருந்து படைப்பது 
இப்படி நிறைய காட்சிகள் சொல்லலாம்

இயக்குனர் கார்த்திக் ராஜு........பழைய கள்ளு புதிய மொந்தை என்ற கதையாக அப்பாவை கொன்றவர்களை மகன் பழிவாங்கும் கதையே ஆயினும் நகைச்சுவை காட்சிகளாலும் யதார்த்தமான போலிஸ் துறை காமெடிக் காட்சிகளாலும் படம் பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறார் 
சில நேரங்களில் அப்பா-மகன் சென்டிமென்ட் தூக்கலாக மெலோட்ராமாவாக நம்மை வதைத்தாலும் காதல் காமெடி  காட்சிகளால் குதுகலிக்க வைக்கிறார் 

ஒரே படத்தில் இரண்டு எபிசோட் போன்று தோன்றினாலும் லாஜிக் ஓட்டைகள் எதுவும் அதிகம் இல்லை  ஆனால் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இப்படி தத்தியாக இருப்பாரா....? லோக்கல் ரவுடிகள் இப்படி கோமாளிகளாக இருப்பார்களா....? என்பதை தவிர்த்து.

அட்டகத்தி தினேஷ்.........காதல்,காமெடி,சென்டிமென்ட் எல்லாவற்றிலும் விதவிதமான முகபாவனையில்  தோன்றி நடிக்கிறார் அப்பா மீது  பாசமுள்ள சைகோவாக சிரிப்பூட்டுகிறார் பாடல்காட்சிகளில் நல்ல நடன அசைவுகள் காட்டுகிறார் இவரது போலீஸ்நண்பனாக வரும் பால சரவணன்.......நடிப்பிலும் பேச்சிலும் சிரிப்புக்கு உத்திரவாதம்

ஐஸ்வர்யா........சும்மா வந்து போகிறார் ஆனாலும் அழகாக தோன்றுகிறார் 
ராஜேந்திரன்,ஜான் விஜய்.....கோமாளி வில்லன்களாக தோன்றி பெண்கள் போல் மாறுவேடங்கள் போட்டும்  கலக்குகிறார்கள்  ராஜேஷ்.....தினேஷ் அப்பாவாகவும் நேர்மையான போலீஸ் ஏட்டாகவும் வந்து குணச்சித்திர நடிப்பில் அசத்துகிறார் 

முத்துராமன்....கெட்ட உயர் போலீஸ் அதிகாரியாகவும் ஆடுகளம் நரேன்......நல்ல போலீஸ் கமிஷனராகவும் வருகிறார்கள் நிதின் சத்யா.......சும்மா வந்து போக விஜய் சேதுபதி.....ஒரு குத்து பாட்டில் ஆட்டம் போட்டு போகிறார்   

யுவன் சங்கர் ராஜா இசையில்......பாடல்கள் கேட்கும்படியும் பின்னணி இசை அதிக தூக்கலாகவும்  உள்ளது பேசாதே.......பாடல் மீது மீண்டும் கேட்கத் தோன்றும் சித்தார்த் ஒளிப்பதிவில்.....காட்சிகளும் பாடல்களும் அருமை 

ஆக மொத்தத்தில்............

காவல்துறையில் சில  உயரதிகாரிகள் செய்யும் அவலங்கள்  பற்றிய சமுக விழிப்புணர்வு படம் போல் தோன்றினாலும் யதார்த்தமான காமெடி காட்சிகளால் பார்வையாளர்களை சிரிக்கவைக்கிறான்......திருடன் போலீஸ்


படம் பார்த்தவர்களின் மதிப்பீடு.............

திருடன் போலீஸ்-படம் எப்படியிருக்கு.....?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1