google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: லிங்கா-சினிமா விமர்சனம்

Friday, December 12, 2014

லிங்கா-சினிமா விமர்சனம்

இங்கே ரஜினியின் லிங்கா பட விமர்சனமும் லிங்கா படம் எப்படியிருக்கு? கருத்துக்கணிப்பும்......

ஒரு மிகப்பெரிய அணையை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்வது போல் துவங்கும் லிங்கா படத்தின் கதையாக..........

சுமார் 70 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில்  கட்டப்பட்ட சோலையூர்  அணையை உடைத்துவிட்டு பல ஆயிரம் கோடியில் புதிய ஆணை கட்டி கொள்ளையடிக்கும் எண்ணத்தில் உள்ள அப்பகுதி M.P (ஜெகபதி பாபு) அணையை ஆய்வு செய்து போலி அறிக்கை தரமறுத்த பொறியாளரை (பொன்வண்ணன்) தன் ஆட்களை விட்டு கொலை செய்ய......

அவரோ சாகுமுன் சோலையூர் நாட்டாமை ( கே.விஸ்வநாத்) பெரியவரிடம் அணையை ஒட்டியுள்ள ஒரு சிவன் கோவிலை திறந்து பாருங்கள் என்று சொல்லி செத்துவிடுகிறார்

அந்தக்  கோவிலோ சோலையூர் அணையைக் கட்டி மக்களை காப்பாற்றிய ராஜா லிங்கேஸ்வரன் (ரஜினி) என்பவரால் கட்டப்பட்டதால் அவரது வாரிசு பேரன் லிங்கா (இன்னொரு ரஜினி) வந்துதான் திறக்க வேண்டும் என்று தனது பேத்தி லட்சுமி (அனுஷ்கா) மூலம் தேடுகிறார்........

நண்பர்களுடன் காமெடித் திருடனாக அலையும் லிங்காவை கண்டுபிடித்த லட்சுமி தந்திரமாக அவரை சோலையூர் அழைத்து வர....
நாட்டாமை அவரிடம் கோவிலில் இருப்பது மரகத லிங்கம் என்று சொல்கிறார்

லிங்கா தன் நண்பர்கள் சந்தானம்,கருணாகரன் உடன் மரகத லிங்கத்தை நள்ளிரவில் திருடிச் செல்ல முயலும் போது ஊர் மக்களிடம் அகப்பட்டுக் கொள்ள....லிங்காவை திருடன் என்று சந்தேகப்படுகிறார்கள் 

அப்போது நாட்டாமை அந்த சோலையூர் அணையுடன் சேர்த்து சிவன் கோவில் எப்படி கட்டப்பட்டது? பிறகு ஏன் மூடப்பட்டது? என்பதை பிளாஷ்- பேக் கதையாக விவரிக்கிறார்.........

ஆங்கிலேயர் காலத்தில் மதுரை கலெக்டராக இருக்கும் பொறியியல் படித்த கொடையூர் ராஜாவான லிங்கேஸ்வரன் சோலையூரில் நீர் இல்லா பஞ்சத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் தற்கொலை செய்வதை அறிந்து அங்கே ஒரு அணை கட்ட அரசாங்கத்தில் அனுமதி மறுக்கப்பட தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு.........

மக்களுக்காக தன் அரண்மனைகளையும் சொத்துக்களையும் விற்று சோலையூரில் மக்களோடு மக்களாக இருந்து அணைகட்டுகிறார்  பரிகாரமாக அந்தச் சிவன் கோவிலையும் கட்டுகிறார் (அவ்வப்பதோ துணையாக இருந்த அந்த ஊர் பெண் மணி பாரதி (சோனாஷி சின்கா) யையும் கட்டுகிறார்) 

அணைகட்ட இடையூறாக இருக்கும் வில்லன் ஆங்கிலேய துரையின் சதியால் ஊர் மக்கள் அவருக்கு எதிராக திரும்பிவிடுகிறார்கள் அவர் கட்டிய அந்த கோவிலை மூடிவிட்டு அவரை ஊரைவிட்டும் விரட்டிவிடுகிறார்கள் உண்மை தெரிந்த மக்கள் ராஜாவை மீண்டும் அழைக்கும் போது அவர் வர மறுத்துவிடுகிறார்

அவரது பேரன்தான் இந்த லிங்கா என்றும் மீண்டும் சோலையூருக்கு வந்துள்ள ஆபத்தை லிங்கா கண்டுபிடித்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகிறார்

 சாகுமுன் பொறியாளர் பொன்வண்ணன் கோவிலில் மறைத்து வைத்த அறிக்கையை எடுத்து லிங்கா தன் காதலி தொலைகாட்சி ரியாலிட்டி ஷோ நடத்தும்  லட்சுமியுடன்  சேர்ந்து சோலையூர் அணையையும் மக்களையும் அப்பகுதி M.P யிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறார்....? என்பதை

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் காதலும் நகைச்சுவையும் கலந்த அதிரடி திரைப்படமாக காட்டுவதே.........லிங்கா

படத்தின் முன்பகுதியை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் நகர்த்தும் இயக்குனர்  பிளாஷ்-பேக் காட்சி கதையை மெலோ ட்ராமாவாக நாடகத்தன்மையுடன் நத்தை வேகத்தில் கொண்டு போவது கொஞ்சம் அபத்தம் ஆயினும் படம் முழுக்க ரஜினியிசமாக வரும் அவரது நடை,உடை, பாவனையில் அவரது ரசிகர்களை விசிலடிக்க வைப்பதில் வெற்றியடைந்துள்ளார்

ரஜினியின் பிறந்த நாளில் இன்று வெளிவரும் லிங்கா படத்தில் ராஜா லிங்கேஸ்வரன் அரண்மனையில் பிரமாண்டமாக பிறந்த நாள் கொண்டாடும் காட்சி வைத்துள்ளது அவரது இயக்கத்தில் உள்ள நல்ல ரசனை

படத்தின் சிறப்பான காட்சிகளாக............
-ரஜினியின் துவக்க காட்சியாக  லிங்கா ஆடும் கனவுப்பாடல் ஒ...நண்பாவும் -போலிஸ் ஸ்டேசனில்  பிரமானந்தத்துடன் அனுஷ்கா அடிக்கும் லூட்டி
-லிங்கா அனுஷ்காவுடன் நட்சத்திர ஓட்டலில் அடிக்கும் நகைக் கொள்ளை
-கலெக்டர் லின்கேஸ்வரனாக ரஜினி ரயிலில் போடும் சண்டை
-ராஜாவாக ரஜினி அரண்மனையில் ஆங்கிலேய கவர்னர்,துரைகளுடன் கொண்டாடும் பிரமாண்டமான பிறந்த நாள்
-பொறியாளர் லிங்கேஸ்வரன் ரஜினி  சோனாஷி சின்காவுடன் போடும் வண்ணமயமான பாடல் காட்சி
-லிங்கா ரஜினியுடன் அனுஷ்கா காணும் படகு பாடல் காட்சி

இன்னும் நிறைய சிறப்பான காட்சிகள் இருக்க கிளைமாக்ஸ் பலுன்-பைக் சேஸிங் போன்ற  லாஜிக் மீறல் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியை கோச்சடையான் மாதிரி அல்லாமல் நிஜத்தில்  பார்க்கும் போது அவரது வயதும் முதிர்ச்சியும் ஒப்பனையின் திறமையாலும் இயக்குனர் திரைக்கதை திறமையாலும்  தாத்தா ரஜினி-பேரன் ரஜினி இருவரையும் ஒரே உருவத்தில் இளமையாக காட்டுகிறார்கள் ரஜினியும் தனது ஸ்டைல் நடிப்பாலும் தத்துவ வசன உச்சரிப்பாலும்  ரசிகர்களை ஏமாற்றவில்லை

அனுஷ்காவின் முதிர்ச்சி முகத்தில் மறைக்க முடியவில்லை அப்படியே சோனாஷியின் இளமை ஒப்பனையின்றி துள்ளுகிறது

சந்தானம் தனது ஒன்-லைன் காமெடியில் கருணாகரனுடன் வெளுத்து வாங்குகிறார் அவர் ரஜினியிடம் நன்பேண்.....என்று ஆரம்பிப்பதும் ரஜினி டா....போட்டு முடிப்பதும் நல்ல தமாஷு

மற்றபடி  வில்லன் M.P-யாக வரும் ஜெகபதி பாபு,ஊர் பெரியவர் விஸ்வநாத்,பழைய நாட்டாமை விஜயகுமார்,ஜமீன் நிழல்கள் ரவி, போட்டு கொடுக்கும் சகுனியாக வரும் சுந்தர்ராஜன்,ரயில் இஞ்சின் ட்ரைவர் மனோபாலா, உதவியாளர் இளவரசு...என்று ஒரு நடிகர்கள் கூட்டமே திறமையாக நடித்துள்ளனர்  

ரத்தினவேலின் ஒளிப்பதிவில் அணை,இயற்கை காட்சிகள்,நீர்வீழ்ச்சி காட்சிகள் மட்டுமல்ல ரஜினி,சோனாஷி,அனுஷ்கா எல்லோரும் அழகாக தெரிய ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு பெரிதும் துணையாக இருக்க......

ஆக மொத்தத்தில்.............

நிறைய காதல்,காமெடியுடன் கொஞ்சம் சமுக சிந்தனையாக   சாதி சமத்துவம்,தேசபற்று என்று சினிமா காட்டும் கே.எஸ்.ரவிகுமார்- ரஜினி கூட்டணியில்  லிங்கா திரைப்படம் கொஞ்சம் ட்ரிம் பண்ணி விறுவிறுப்பு கூட்டியிருந்தால் முத்து படையப்பா வரிசையில் மிகப் பெரிய வெற்றிப்படமாக  இருக்கும்



படம் பார்த்தவர்களின் மதிப்பீடு...........

லிங்கா-படம் எப்படியிருக்கு.....?




படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி......
முடிவு-19/12/2014



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1