google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தொட்டால் தொடரும்-சினிமா விமர்சனம்

Saturday, January 24, 2015

தொட்டால் தொடரும்-சினிமா விமர்சனம்

முன்பாதி காதல்,குடும்ப சென்டிமென்ட் என்றும் பின் பாதி மாஃபியா கூலிப்படை கொலைக்கும்பல் பற்றியும் பிரபல பிளாக்கரும் சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர்  படம் காட்டும் வெற்றி காதல் திகில் திரைப்படமே.... தொட்டால் தொடரும் 

பணத்துக்காக படுபயங்கரமான கொலைகள் செய்து அதை விபத்து போல் ஜோடனை செய்யும் ஒரு கூலிப்படை மாஃபியா  கும்பலிடம் மாட்டிக்கொண்ட ஒர் இளம் காதல் ஜோடி பற்றிய கதையே......... தொட்டால் தொடரும்

அமைச்சர் துரைச்சாமி என்பவர்  காரில் போகும் போது சாலை விபத்தில் மரணம் அடைவது போல் துவங்கும் தொட்டால் தொடரும் படத்தின் கதையாக........

ID பேங்கிங் சர்வீஸில் போன் காலராக வேலை பார்க்கும் மது (அருந்ததி) வுக்கும் ஒரு நிறுவனத்தில் HR ஆக இருக்கும் சிவா (தமன் குமார்) வுக்கும் செல்போனிலேயே பேச்சு மோதலுடன் முகமறியா காதல் தொடர்கிறது.....

மதுவின் கவனக்குறைவால் அவளது தம்பிக்கு சாலை விபத்து ஏற்பட்டு மருத்துவச் செலவுக்கு ரூ.30 லட்சம் தேவைப்பட.......
பணம் புரட்ட முடியாத மது தான் இறந்தால் கிடைக்கும் காப்பீடு பணம் ரூ.30 லட்சத்துக்காக நிகில் (வின்சென்ட் அசோகன்) என்ற கொலைகாரன்  தலைமையில் உள்ள ஒரு கூலிப்படையினரை தொடர்புகொண்டு தன்னை விபத்தில் இறந்தது போல் கொலை செய்ய ஏற்பாடு செய்கிறாள் 

சிவாவும்  மதுவுக்கு தெரியாமல் தன் பேஸ்புக் நண்பர்கள் மூலம் ரூ.30 லட்சத்தை திரட்டி மதுவிடம் ஒப்படைக்கும் போது ...........
மது காப்பீடுக்காக செய்துள்ள தவறை அறிந்து அவளை கொலை செய்ய தொடரும் கொலைகாரன் நிகிலிடமிருந்து காப்பாற்ற துடிக்கிறான் 

இதற்கிடையில்.....

அமைச்சர் துரைச்சாமியின் மரணம் விபத்து இல்லை என்றும் அது விபத்து போல் ஜோடிக்கப்பட்ட கூலிப்படையினரின் செயல் என்பதையும் அறிந்து கொண்ட அமைச்சரின் மகனும் அவரது ஆட்களும் நிகிலை தேடி தொடர்கிறார்கள் 

மதுவை விபத்து போல் ஜோடனை செய்து கொலை செய்ய தொடரும் நிகிலிடமிருந்து சிவா அவளை எப்படி காப்பாற்றுகிறான்.../ என்பதே......

படத்தின் சிறப்பான காட்சிகளாக............
- அமைச்சர் துரைசாமியின் சாலை விபத்து 
-சமுக அக்கறையுடன் காட்சிப் படுத்தப்பட்ட பாஸ் பாஸ் பாடல் 
-சிதம்பரத்தில் ஓட்டல் மாடியில் மதுவை கொலை செய்ய பவர் லைனை கட் செய்து நிகில் முயற்சிக்கும் புதுமையான காட்சி 
-தாயத்துக்குள் wireless device  காட்சி
-படத்தில் வரும் நிறைய ஒன் லைன் வசனங்கள் ...
உ.ம்.."சரக்கு அடிச்சவன் சம்சாரத்துக்கிட்ட இருந்து தப்பிச்சுக்கலாம் ஆனால் சைட் அடிச்சவன் பிரண்டுகிட்ட இருந்து தப்பிக்க முடியாது"
-கிளைமாக்ஸ் காட்சியில் நடக்கும் சேஸிங் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் பார்ப்பதற்கு நன்று 

இன்னும் இதுபோன்ற நிறைய காட்சிகள் தொட்டால் தொடரும் படத்துக்கு புதுமையூட்டுகின்றன 

அறிமுக இயக்குனர் கேபிள் சங்கர்.....புது முயற்சியாக விபத்து போல் ஜோடனை செய்து கொலை செய்யும்   மாஃபியா கூலிப்படை கும்பல் பற்றிய கதையுடன் காதலும் சென்டிமெண்டும் கலந்து தொட்டால் தொடரும் என்று திரைப்படமாக கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் அவரும் டாக்டராக இரண்டு காட்சிகளில் நடித்துள்ளார்

அங்கே இங்கே என்று திரைக்கதையில் சில ஓட்டைகள் இருந்து படம் பார்க்கும் போது நம் கண்களை இருள் கட்டினாலும் மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் தடுமாறினாலும் இயக்குனர் காட்சிப்படுத்தியுள்ள சில புதுமையான காட்சிகளால் அவைகள் பெரிதாக தெரியவில்லை 

ஆனாலும் முன் பாதியில்  நாடகத்தன்மையை தரும்  காதலையும் சென்டிமென்ட்டையும் கொஞ்சம் குறைத்து வேகத்தை கூட்டியிருக்கலாம் 


தமன் குமார் முகத்தில் காதலியை காப்பாற்ற வேண்டிய வேகம் பிரதிபலிக்க நன்றாக நடித்துள்ளார் அருந்ததி........நடிப்பில் காதலும் பயமும்  கலந்துள்ளது வின்சென்ட் அசோகன்...நடிப்பில் யதார்த்தமான வில்லத்தனம் தெரிகிறது

ஆக மொத்தத்தில்..........
அறிமுக இயக்குனர் கேபிள் சங்கரின் புதுமையான கதைக்கருவுக்கும் சில சமுக விழிப்புணர்வு செய்திக்காகவும் அனைவரும் பார்க்கவேண்டிய படம் .......தொட்டால் தொடரும்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1