google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கங்காரு-சினிமா விமர்சனம்

Wednesday, April 29, 2015

கங்காரு-சினிமா விமர்சனம்

முதலில் பாசமலர் மாதிரி அண்ணன்-தங்கை பாசத்தில் தொடங்கி....
அப்புறம் இரண்டு கொலைகளுடன் கிரைம் திகில் படமாக மாறி....
பிறகு போலிஸ் விசாராணை குற்றவாளி கண்டுபிடிப்புடன் சைகோ....லாஜிக் படமாகி.....கடைசியில் ஒரு கதைப்பாட்டு போட்டு படம்பார்ப்பவர்களை பைத்தியமாக்கி........
தியேட்டரைவிட்டு தாவிக் குதிச்சு ஓடவைக்கிறது.........சாமியின் கங்காரு 

கொடைக்கானலில் கைக்குழந்தையுடன் வரும் சிறுவனை ஆதரிக்கிராரு நாடார் (தம்பி ராமையா) அவியிங்க வளர்ந்து அண்ணன் முருகேசன் (அர்ஜுனா) தங்கை அழகு (பிரியங்கா) பாசத்தில   பொங்குறாயிங்க

இவியிங்களுக்கு வில்லனாக வருறாரு பொம்பள புரோக்கர் டிக்கெட்  (கலாபன்மணி) அவரு டிக்கட் போட நினைக்கும் செல்லம் (வர்ஷா) ஒருதலையாய் முருகேசனை காதலிப்பதால்........

அழகும்  ஒரு தல வெறியனும் (அஜித் ரசிகனப்பா) காதலிக்கிறாயிங்க கல்யாணத்துக்கு முன்னாடி அய்யோ  பாவம் அவன் மலையில இருந்து விழுந்து செத்துபோறான் 

அப்புறம் அழகுக்கு இன்னொருத்தனை மாப்பிளையாய் நிச்சயிக்க அய்யோ பாவமும் அவனும் கரண்ட் கம்பி அறுந்து விழுந்து செத்துப்போகிறாரு

அதனால அண்ணன்-தங்கை இரண்டு பெரும் பக்கத்து ஊருக்கு சுந்தர்ராஜன் மூலம் இடம் பெயர்ராங்க அங்க அவரு மச்சான அழகுக்கு மனம் முடிக்கிறாங்க  அவரு மச்சானும் பயங்கராமாக தாக்கப்படுறாரு 

சுந்தர்ராஜன் பெரிய ஆளு....உடனே போலிஸ் விசாரணனை நடக்கு குற்றவாளி அண்ணன் முருகேசன் என்கிறாயிங்க தங்கைமேல உள்ள பாசத்தில எல்லாரையும் கொன்னாரு என்கிறாயிங்க 

அந்நியன் விக்ரம் மாதிரி முருகேசனுக்குள்ள இரண்டு மனுஷங்க...... ஒருத்தன் தங்கச்சிக்கு நல்லது நடக்க நினைக்கிறவன் இன்னொருத்தன் தங்கச்சிய யாரும் தொடக்கூடாதுன்னு நினைக்கிறவன் இரேண்டுபேருமே தங்கச்சி பாசக்காரப் புள்ளைக

அத்தோடு விட்டானுங்களா...? 

ஒரு பாட்ட போட்டு பாட்டாலேயே முருகேசன்-அழகு  யாரு? உண்மையான அண்ணன் தன்கையானு ஒரு குட்டிக்  கதை சொல்லி........

அடடே......தியேட்டர்ல இருந்த பத்து போரையும் காணோம் நான் மட்டும் இருக்க பைத்தியமா....? துள்ளிக் குதிச்சி ஓடுனேன் பாரு...கங்காரு மாரி   

பாடல்கள் கேட்க ரசனையா இருக்கு காட்சிகள் அனைத்தும் பழனி கொடைக்கானல் என்பதால் குளுகுளுன்னு இருக்கு இயக்கமும் பரவாயில்லை 
ஆனால்.........
இருபது வருசத்துக்கு முன்னாடி வரவேண்டிய படம் இப்போது வந்ததுதான் ரசிக்கமுடியவில்லை 

ஆக மொத்தத்தில.......
உயிர் படத்தில் அண்ணி-கொழுந்தன் உறவை கொச்சைப்படுத்திய சாமி......
சிந்து சமவெளி படத்தில் மாமன்-மருமகள் உறவை இச்சை படுத்திய சாமி.........
கங்காரு படத்தில அண்ணன்-தங்கை உறவை கொச்சைப்படுத்தவில்லை அதற்காக இயக்குனர் சாமிக்கு ஓஓஓஓஓஓஒ....போடலாம் 

 


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1