கற்பனை புராண காவியங்கள் இராமாயணம்,மகாபாரதம் போன்று பாகுபலி திரைப்படம் இயக்குனர் ராஜமௌலியின் சொந்த கற்பனை சரித்திரக் கதையே
நம்பமுடியாத வித்தியாசமான கிராபிக்ஸ் வேலைப்பாடுகளுடன் பிரபாஸ்,ராணா டகுபதி,தமன்னா,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன்,நாசர், சத்யராஜ்... போன்றவர்களின் நடிப்பால் பிரமாண்டத்தை படம் காட்டுகிறது....பாகுபலி
குழந்தையாக இருக்கும் போது அம்புலி மலைவாழ் கிராமத்தில் ரோகிணியால் எடுத்து வளர்க்கப்பட்ட மாவீரன் பிரபாஸ் ஒரு வானுயர்ந்த நீர்வீழ்ச்சியை ஏறிக் கடந்து மகிலமதி என்ற பெரிய ராஜ்யத்தை அடையும் போது தமன்னாவைக் கண்டு காதலில் விழுகிறான்
மகிழமதியை கொடுங்கோல் ஆட்சி செய்யும் ராணா டகுபதிஇடமிருந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் அனுஷ்காவை மீட்க போராடும் தமன்னாவும் அவளது கூட்டத்தினரிடமும் சேர்ந்து பிரபாஸ் போரிட்டு...
அனுஷ்காவை பிரபாஸ் மீட்ட்டாரா....?
ராணாவின் ஆட்சிக்கு முடிவு வந்ததா....? என்பதே பாகுபலி படத்தின் கதை.....
அனுஷ்க்காவுக்கும் பிரபாவுக்கும் என்ன தொடர்பு என்பது படத்தின் ட்விஸ்ட் ஆனால் போராட்டம் முற்று பெறாமல் பாகுபலி பார்ட்-2 க்கு அடித்தளம் இடுகிறது
ஹாலிவுட் பாணி போர்க்காட்சிகள், ஆடம்பர அரண்மனைக் காட்சிகள்,காமிக் சித்திரப் புத்தகத்தில் வரும் ஆடை அணிகலன்கள்,பிரமாண்டமான நீர்வீழ்ச்சி,மலைக்காட்சிகள்....என்று ஆரம்பம் முதல் கடைசிவரைஒரு புதுமையான பேன்டசி கற்பனை உலகத்துக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து பார்வையாளர்களையும் பயணிக்க வைப்பதில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் ராஜமௌலி
அதேநேரம்........
நீளமான சில போர்க்காட்சிகள்,சில தேவையற்ற பாடல்கள், மிகைப்படுத்தப்பட்ட பிரபாஸ்-தமன்னா காதல் காட்சிகள்... போன்றவைகளை குறைத்து படத்திற்கு இன்னும் வேகத்தை கூட்டியிருக்கலாம்
பாகுபலி-இந்தியத் திரையுலகில் இதுவரை வெளிவராத ஒலி-ஒளி தொழில்நுட்பத்துடன் வந்து பிரமிக்கவைக்கிறது கலை இயக்குனர் கைவண்ணத்தில் படத்தின் ஒவ்வொரு பிரேமும் ஒரு மாயஜால காட்சியாக உள்ளது
பாடல்களைவிட பின்னணி இசை படத்திற்கு வேகம் ஊட்டுகிறது ஒளிப்பதிவு.........பிரமிக்க வைக்கிறது
ஆக மொத்தத்தில்............
உலகத்தரத்தில் சினிமா தொழில்நுட்பத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் இந்தியத் திரையுலகின் பிரமாண்டமான படைப்பு..........பாகுபலி
பெரிய திரையில் பார்த்தால் மட்டுமே பிரமிக்க வைக்கும்
குறிப்பு-
பாகுபலியின் வெற்றி......
விரைவில் வரவிருக்கும் விஜய்-யின் புலி தமிழ் பேன்ட்டஸி படத்தின் வெற்றிக்கு முன்னோடியாக இருப்பதும் இல்லாததும் இயக்குனர் சிம்புதேவன் கையில் உள்ளது
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |