சமிப காலங்களாக நான் சினிமா விமர்சனம் எழுதுவதையே விட்டுவிட்டேன் சில தமிழ் படங்கள் பார்த்ததினால் வந்தப் பாதிப்பு
ஆனால்....
ஆங்கிரி பேர்ட்ஸ் (தமிழ்) படத்தை பார்த்து குழந்தைகளோடு குழந்தையாக மாறி குதுகளம் அடைந்தேன்
சுட்டீஸ்களின் வீடியோ கேம் உலகில் ஆங்கிரி பேர்ட்ஸ் பேரைக் கேட்டாலே அதிரும் இப்ப ஆங்கிரி பேர்ட்ஸ் படம் பார்க்க போனால் திரையரங்கமே சிரிப்பால் அதிரும்
ஆங்கிரி பேர்ட்ஸ் போன்ற அனிமேஷன் படமான கேப்டன் அமெரிக்கா பார்த்து பாதியில் தூங்கி வழிந்ததால் சுவராஸ்யம் இல்லாமல்தான் இந்தப் படத்திற்கும் போனேன்
ஆனால்....
ஆங்கிரி பேர்ட்ஸ் படம் பார்க்கும் போது அதில் வரும் கேரக்டர்ஸ்,கதையமைப்பு,தமிழ் வசனம்.....இவைகள் நம்மை ஓர் அதிசய குழந்தைகள் உலகில் என்னை சஞ்சரிக்க வைக்கின்றன
U
பறக்க இயலாத பறவைகள் வாழும் ஒரு தீவில் கோபம் கொண்ட பறவையாக வரும் மிஸ்டர் ரெட்-க்கு தண்டனையாக அந்த தீவு மக்கள் தலைவரால் கோபத்தை தணிக்கும் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்
அந்த சமயம் பண்ணித் தீவிலிருந்து நட்பு பாராட்டி வரும் பண்ணி ராஜா தன் பண்ணிப் படைகளுடன் சேர்ந்து பறவைகளின் முட்டைகளை அபகரித்துச் செல்கிறார்
மிஸ்டர் ரெட் தன் நண்பர்கள் சக்,குண்டு ஆகியோர்களுடனும் பறவைத்தீவு காப்பாளர் கழுகு உதவியுடனும் பண்ணித்தீவுக்கு பயணித்து பண்ணி ராஜா மற்றும் அவரது பண்ணிப் படைகளுடன் போரிட்டு எப்படி முட்டைகளை சேதாரம் இல்லாமல் பறவைத்தீவுக்கு கொண்டு வருகிறார் என்பதே.....
ஆங்கிரி பேர்ட்ஸ் படத்தின் அட்டகாசமான கதை
ஆக மொத்தத்தில்.....
ஆங்கிரி பேர்ட்ஸ் படம்-
குழந்தைகளின் கொண்டாட்டம்
பெரியவர்களின் கவலைகளுக்கு மாமருந்து
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |