google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உண்ணாவிரதங்கள்

Sunday, April 22, 2012

உண்ணாவிரதங்கள்




காந்திஜியின் உண்ணாவிரதம்
வெள்ளையரை விரட்டியது.
அன்னா ஹசாரே உண்ணாவிரதம்
ஆளுவோரை அதட்டிவிட்டு
அவருக்கே வலித்துவிட்டது.

கூடங்குளம் தொடர்விரதம்
உண்ணாவிரதம்?
அவ்வப்போது
தொடரும் தொடராது
தொடராது தொடரும்

அரசியல்வாதிகளுக்கு வரும்
அடையாள உண்ணாவிரதம்
காலையில் ஆரம்பிக்கும்
மாலையில் முடிந்துவிடும்

பசிக்காமல் இருந்தால்
பணக்காரர்கள் உண்ணாவிரதம்
பசிக்கு கிடைக்காமல் இருந்தால்
ஏழைகள் உண்ணாவிரதம்

எது எப்படியோ
என் எழுத்துப்பசிக்கு
உண்ணாவிரதமும் தீணியாகிப்போச்சு!     
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1