அன்று-
கோபம் கொண்ட அகத்தியர்
தன் கமண்டலத்தில்
அடைத்தாராம் காவேரியை...?
அது புராணகாலக் கதை
இன்று
மோசம் செய்யும் கர்நாடகா
அணைகட்டி வைத்து
அடைக்கின்றார் காவேரியை.
இது இந்தகாலக் கதை
அண்டங்காக்கை உருவத்தில்
அன்று வந்த விநாயகர்
விடுதலை கொடுத்தார் காவேரிக்கு!
எவர் வருவாரோ இன்று?
உச்ச நீதிமன்றம் வந்து
உயிர் கொடுக்குமா தமிழருக்கு?
அகத்தியர் என்றொரு திரைப்படத்தில்
சீர்காழியார் பாடுவார்
நடந்தாய் வாழி காவேரி! என்று
அது என்னவோ
என்காதில் விழுந்தது இப்படி.....
கிடந்தாள் வாடி காவேரி!-சிறைபட்டு
கிடந்தாள் வாடி காவேரி!
நாடெங்குமே செழிக்க-கன்னடர்
நன்மையெல்லாம் சிறக்க
கிடந்தாள் வாடி காவேரி!-சிறைபட்டு
கிடந்தாள் வாடி காவேரி!
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாள்
சிறு மனம் படைத்தோரிடம் அடங்கிவிட்டாள்
அழகு தமிழ் நிலத்துக்கு வர மறுத்தாள்-தமிழ்
நிலமெல்லாம் வறண்டு போகவைத்தாள்
அசைந்து வளைந்து நெளிந்து வரமுடியாமல்
அடைந்து கிடந்தாள் காவேரி!-சிறைபட்டு
கிடந்தாள் வாடி காவேரி!
உணவளிக்கும் உழவருக்கெல்லாம் கண்ணாக-பண்பு
உயர்ந்த தமிழ் நாட்டு செல்லப்பென்னாக
புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக-அன்று
பொங்கிவந்த காவேரி கனவானதே!
கிடந்தாள் வாடி காவேரி!-சிறைபட்டு
கிடந்தாள் வாடி காவேரி!
Thanks-YouTube-Uploaded by sirkalis
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |