சொன்னது-
நான் பிறரைப் போன்று பதவிக்காக வாழவில்லை. தமிழீழ விடுதலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக போராடுவேனே தவிர பதவிக்காக எப்போதும் உயிர் வாழ மாட்டேன் என்றார் வைகோ.
சொல்லாதது-
யாரும் பதவிதான் தரமாட்டேன் என்கிறார்கள்.கூட்டணியில் கூடவா சேர்க்கக்கூடாது?.
****************************************
சொன்னது-
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் குழு கூட்டம் பிரதமரின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் கட்சி
சார்பாக ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது.
சொல்லாதது-
எனவே எதிர்கட்சிகளும் ஒரு மனதாவோ இரு
மனதாவோ ஆதரவு கொடுத்தால் நன்றாக இருக்கும்.
**************************************
சொன்னது-
அணு உலை
எதிர்ப்பாளர்கள் கூடங்குளம், இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்புளி, பெருமணலில் உள்ள கல்லறை தோட்டங்களுக்கு திரண்டு சென்றனர். பின்பு அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னோர்களின்
கல்லறைகளின் முன் நின்று ஜெபம் செய்து
தங்களின் கோரிக்கைகளை முறையிட்டனர்.
சொல்லாதது-
உயிரோடு இருக்கிறவங்க கிட்ட முறையிட்டால் பிரயோசனமில்லைனு
முடிவுபன்னிட்டாங்களா?
***********************************
சொன்னது-
திமுக தலைவரான கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத
ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று
திமுகவே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் விண்ணப்பித்திருக்கிறது.
சொல்லாதது-
இதைவிடப் பெரிய விருது இல்லையா? உலக ரத்னா.....?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |