விரைவில் மாற்றி அமைக்கப்பட இருக்கும் மத்திய அமைச்சரவையில் தி.மு.க சார்பில் புதிதாக கேபினட் அமைச்சராகவோ, துணை அமைச்சராகவோ யாரும் இடம்பெற மாட்டார்கள் என்பதுதான் என் உறுதியான பதில் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அங்கேயே இன்றோ நாளையோ என்று இழுபறியில் இருக்கு....எனவே இதில் நாங்கள்
உறுதியாக இருக்கிறோம்
*********************************************
நாட்டுக்கு எது நல்லதோ அதை தொடர்ந்து செய்வோம். பொருளாதார சீர்திருத்தம் தொடரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கூறினார்.
விலையேற்றத்துக்கு இன்னொரு பெயரும் பொருளாதார சீர்திருத்தம்தான் என்று அதையும் தொடர்ந்து செய்யாமல் இருந்தால் சரிதான்.
******************************************
மதுரை ஆதின மடத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். என்று ஆதின மீட்பு குழுவினர் போலிஸ் கமிஷனரிடம் புகார்.
மடத்தை மட்டும் தானா? இல்லை மடாதிபதிகளையும் சேர்த்து தானா?
*************************************************************************
அரசியல் என்பது சாக்கடை போல் அழுக்கு நிறைந்தது என்று சமூக சேவகர் அண்ணா ஹசாரே விமர்சித்துள்ளார்.
நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் ...அரசியலில் சேராமல் நான் தப்பித்துக்கொண்டேன்
Thanks-SoundCloud-by KumarappanKumar
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |