சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,உலகநாயகர் கமலஹாசன்,இளையதளபதி விஜய்,'தல'அஜித்குமார்...இவர்கள் இன்றைய தமிழ் சமுதாயத்தில் மிகவும் பிரபலமானவர்கள்.
அவர்கள் பிரபலமாகக் காரணமாக இருந்த சமுதாயத்துக்கு நல்லது செய்யும் சமுதாய ஆர்வலர்களாக மாறும் போது மட்டுமே அவர்களின் பிரபலத்தன்மை நிலையானதும் உண்மையானதும்
மிரியம் மகேபா(1932–2008)- செல்லமாக 'மாமா ஆப்ரிக்கா' (‘Mama Africa’) என்று அழைக்கப்பட்ட இவர் புகழ்பெற்ற தென் ஆப்பிரிக்கப் பாடகி,நடிகை மட்டுமல்லாது சிவில் உரிமைகள் ஆர்வலர் என்பதே இன்றும் என்றும் இவர் புகழ் நீடிக்கிறது.
1960 களில் அவர் உலகம் முழுவதும் ஆப்பிரிக்க இசையைப் பிரபலப்படுத்திய முதல் ஆப்ரிக்க இசைக் கலைஞர் அவரது பாடல் "படா படா",(Pata Pata)அவருக்குப் பல விருதுகளோடு உலகப் பிரபலமாக்கியது.
பாடகியாக நடிகையாக பிரபலமான அவர் அத்தோடு நிற்காமல் தீவிரமாகத் தென்னாப்பிரிக்க நிறவெறிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து தென்னாப்பிரிக்கக் குடியுரிமையை இழந்தார்.ஆனால் உலகில் உள்ள பத்து நாடுகளுக்கு மேல் அவருக்குத் தங்கள் நாட்டுக் குடியுரிமை வழங்கி கவுரவித்தன..நெல்சன் மண்டேலா விடுதலைக்குப் பிறகே அவர் தனது தாய் நாடு திரும்பினார்
அவரது பாடல்கள் அத்தனையும் சிவில் உரிமைகளுக்காகவும் நிறவெறிக்கு எதிராகவும் இருந்தன கடைசிக் காலம் வரை அவர் சமுதாய விழிப்புணர்வு செய்து வாழ்ந்ததும் மட்டுமன்றி புரட்சி எழுத்தாளர் ராபர்ட்டோ சாவியானோவுக்கு ஆதரவாக இத்தாலியின் கொடிய மாஃபியா அமைப்பை எதிர்த்தார்.
இப்படி நிறைய பிரபலங்கள் உலகில் நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் பல நன்மைகள் செய்துள்ளனர் இன்றும் செய்து வருகின்றனர் சிலர் செய்யும் நல்லவைகள் வெளியே தெரியும் சிலர் செய்வது வெளியே தெரியாது.
நான் கல்லூரியில் படிக்கும் போது எனது பேராசிரியர் பாடம் நடத்தும் முன் தனது படிப்புக்கு உதவியதாக எம்.ஜி.ஆர் புகைப்படத்தை எடுத்து வணங்கியப் பிறகே பாடம் நடத்துவார்
இங்கே நிறைய நமது பிரபல பாடகர்கள் வயிற்றுப்பாட்டுக்குத்தான் பாடுகிறார்கள் பிரபல நடிகர்களோ ஆட்சியைப் பிடித்து கோட்டைக்குப் போகும் கனவிலேயே மிதக்கிறார்கள் இன்னும் சிலர் தேர்தல் காலங்களில் ஏதாவது அரசியல் கட்சிக்கு ஆதாயம் கிடைக்குமென்று....நேரிடையாகவோ மறைமுகமாகவோ அதரவு தெரிவிப்பார்கள்..
உள்நாட்டில் உள்ள பிரச்சனைகள் எதுவும் தெரியாதது போல் இருப்பார்கள்.அதே நேரம் டெல்லி கேங் ரேப் போன்று சமுக அவலங்கள் நடைபெறும் போது மட்டும் ஒருநாள் கருப்புச்சட்டை அணிவார்கள்....இன்னொருநாள் அழுதுகொண்டு ஊர்வலம் போவார்கள் இன்னும் சிலர் முகநூலிலும் ட்வீட்டரிலும் இரண்டு கீச்சு கீச்சுவார்கள்
காவேரியா? அப்படியென்றால் அது யார்? என்பார்கள்.
ஈழமா?..அது எங்கே இருக்கு?என்று கேட்பார்கள்.
டாஸ்மாக் போர்டை படிக்கக்கூட தெரியாது.
இந்த நாட்டு மக்களால் பிரபலமான இவர்கள் இந்த நாட்டுக்காக நல்லது எதுவும் செய்யாதது..?(என்னத்தச் சொல்வது...?)
சினிமாவில் குத்துப்பாட்டு பாடும் நீங்கள் ஒரேயொரு சமுதாய விழிப்புணர்வு மதுவிலக்குப் பிரச்சாரப் பாடல் பாடமாட்டீர்களா...?
திரைப்படங்களில் அதிரடியாகத் தீவிரவாதிகளை அழிக்கும் நீங்கள் இந்த நாட்டைச் சீரழிக்கும் ஊழல்வாதிகளின் தீவிரத்தன்மை உங்களுக்குத் தெரியவில்லையா.....?
சாதி,மத வேற்றுமைகள் களைய தங்கள் சக்தியை உபயோகிக்க மாட்டீர்களா...?
தமிழ் நாட்டில் இன்றைய சினிமா நட்சத்திரப் பிரபலங்களின் சமுதாய பங்களிப்பை பார்ப்போம் இங்கே இவர்களின் எனக்குத் தெரிந்த சமுதாய தொண்டுகளைக் காண்போம்..தெரியாதவைகளும் இருக்கலாம்............
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம் அதற்காக நிறைய திருத்தலங்களுக்கு திருப்பணிகள் செய்துள்ளார் அமைதி..தியானம்..பற்றி எடுத்துரைப்பார்.
அரசியலில் 1996-தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணி கட்சிக்கு ஆதரவாக பேசி அன்றைய அதிமுக ஆட்சிமாற்றம் நடந்திட காரணம் ஆனால்..அவரே 2004-பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியினருக்கு ஆதரவாக பேசினார்.
சமுதாய அக்கரை...2002-ல் கர்நாடக அரசுக்கு எதிராக காவேரி நீர் பிரச்சனை முன்னிட்டு சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்ததோடு..தேசிய நதி நீர் இணைப்பு திட்டம் பற்றியும் அதற்கு தன் பங்காக ஒரு கோடி தருவதாகவும் உறுதியளித்தார்.
2008-ல் ஒக்கனேக்கல் அருவி நீர் தகராறு செய்த கர்நாடகாவுக்கு எதிராக தென்னிந்திய சினிமா துறையினர் (SIFAA) உண்ணாவிரதத்தின் போது, அவர் கர்நாடக அரசியல்வாதிகள் மீது கண்டனம் அறிவிக்கை விட்டு...குசேலன் திரைப்படம் வெளியீட்டின் போது மீண்டும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.அதே ஆண்டு SIFAA-வினருடன் ஸ்ரீலங்கா உள்ளாட்டு யுத்தம் நிறுத்த வேண்டி ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார்.
2011-ல் ஊழலுக்கு எதிராக அன்னாஹஜாரே-வுக்கு ஆதரவு குரல் கொடுத்தார்.சென்னையில் அவரது ராகவேந்திரா திருமணமண்டபத்தை அவர்கள் உண்ணாவிரதத்திற்கு இலவசமாக கொடுத்தார்
உலகநாயகர் கமலஹாசன்
இவரது ஆன்மிகபார்வை..பிராமண குடும்பத்தில் பிறந்தாலும் தன்னை பகுத்தறிவாளராக காட்டிக்கொள்வார்..தனது படங்களில் அவ்வப்போது சாதிப் பிரச்சனைகள் மதப் பிரச்சனைகள் பற்றி பேசியும் எதிர்த்தும் விஸ்வரூபமாக படம்காட்டுவார்.ஹாசன் என்பது யாகோப் ஹாசன் என்ற அவரது தந்தையாரின் இஸ்லாமிய நண்பர் பெயர் என்று சிலரும் இல்லை அது சம்ஸ்கிருத வார்த்தை (ஹாசியம்)என்று சிலரும் குழப்பம்
இவரது அரசியல் பார்வை...அதுவும் அப்படியே...நிறைய அரசியல் வாதிகள் சினிமாவிலிருந்து வந்துள்ளதால் அவருக்கு ஈடுபாடு இல்லை என்பார்.ஆனால்வேட்டி கட்டியவர் பிரதமர் ஆகவேண்டும் என்பார் (காங்கிரஸ்க்கு ஆதரவாக...)
இவருடைய சமுதாய பங்கு...ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி ரசிகர்களை பதாகைகளுக்கு இரத்த தானம் செய்யக்கூடாது என்றும் உண்மையிலேயே ரத்ததானம்,கண்தானம் செய்யுங்கள் என்றும் அழைப்பார்.(யாரும் காதில் போட்டுக்கொண்டமாதிரி தெரியவில்லை)அனால்,அவர் தனது உடலை இறப்புக்கு பின் உடல்தானம் செய்துள்ளார்.
மனிதாபிமானம் மற்றும் மதச்சார்பின்மைக்காக Abraham Kovoor National Award வாங்கியவர்.இவர் Hridayaragam 2010-திட்டத்தின் எச்.ஐ. வி / எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவவும் அனாதை இல்லம் அமைக்க நிதி திரட்டவும் தூதராக உள்ளார்.போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்துடன் இணைந்து குழந்தைகள் புற்றுநோய் நிவாரண நிதி திரட்டுகிறார்
இளையதளபதி விஜய்
இவரது அரசயில ஈடுபாடு...2009-ல் ராகுல் காந்தியை சந்தித்தார் தி.மு.க.அபிமானியான இவர் 2011-தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவாக களம் இறங்கியது
நேரடியாக ராம்லீலா மைதானம் சென்று உழலுக்கு எதிராக தனது ஆதரவை அன்னாஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இவரது சமுதாய பங்கு... இவரது ரசிகர் மன்றம் அப்படியே விஜய் மக்கள் இயக்கமாக மாறி தானே புயலின் போதும் கடலூர் வெள்ளச்சேதாரத்தின் போதும் இவரது மக்கள் இயக்கம் அரிசி,மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கியது
பள்ளித்தேர்வில் முதல் நிலை பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்..ஹீரோவா?ஜீரோவா? கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்
'தல'அஜித்குமார்
நடிகர்களுக்கு சமுதாய கடமைகள் உள்ளது என்று அறைகூவல் விடும் இவரின் "மோகினி-மணி அறக்கட்டளை"என்று தனது பெற்றோர்கள் பெயரில் இலாப நோக்கமற்ற அமைப்பின் மூலம் பாதிப்பான இடங்களில் சுகாதாரம் போன்றவைகளை அமைத்துக்கொடுக்கிறது.இவரைப்பற்றி நிறைய தெரியவில்லை வெளியே தெரியாமல் நிறைய செய்கிறாரோ? என்னவோ?)
இவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல இவர்கள் விழி அசைந்தால் மாமலையையும் பிடுங்கி வரும் (ரசிகர்) பட்டாளங்கள் இவர்களிடம் உண்டு
இவர்கள் கை அசைவில்தான் தமிழ் நாட்டின் (அரசியல்) தலைவிதியே இருக்கு.
இந்த நான்கு நட்சத்திர பிரபலங்கள் தெரிந்தும் தெரியாமலும் நிறைய....இந்த நாட்டுக்கும் ...அவர்கள் வீட்டுக்கும் செய்துள்ளார்கள் அவைகள் உங்களுக்கு தெரியும் ...ஒரு ரசிகன் என்ற பார்வைக்கு அப்பாற்பட்டு இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளுங்கள்.... இந்தக் கருத்துக்கணிப்பில் வாக்களித்து இவர்கள் பிரபலமானதின் பலன் இவர்கள் வீட்டுக்கா? இல்லை இந்த நாட்டுக்கா? என்ற உண்மையை உலகுக்குச் சொல்லுங்கள்.
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.இவரது அரசியல் பார்வை...அதுவும் அப்படியே...நிறைய அரசியல் வாதிகள் சினிமாவிலிருந்து வந்துள்ளதால் அவருக்கு ஈடுபாடு இல்லை என்பார்.ஆனால்வேட்டி கட்டியவர் பிரதமர் ஆகவேண்டும் என்பார் (காங்கிரஸ்க்கு ஆதரவாக...)
இவருடைய சமுதாய பங்கு...ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி ரசிகர்களை பதாகைகளுக்கு இரத்த தானம் செய்யக்கூடாது என்றும் உண்மையிலேயே ரத்ததானம்,கண்தானம் செய்யுங்கள் என்றும் அழைப்பார்.(யாரும் காதில் போட்டுக்கொண்டமாதிரி தெரியவில்லை)அனால்,அவர் தனது உடலை இறப்புக்கு பின் உடல்தானம் செய்துள்ளார்.
மனிதாபிமானம் மற்றும் மதச்சார்பின்மைக்காக Abraham Kovoor National Award வாங்கியவர்.இவர் Hridayaragam 2010-திட்டத்தின் எச்.ஐ. வி / எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவவும் அனாதை இல்லம் அமைக்க நிதி திரட்டவும் தூதராக உள்ளார்.போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்துடன் இணைந்து குழந்தைகள் புற்றுநோய் நிவாரண நிதி திரட்டுகிறார்
இளையதளபதி விஜய்
இவரது அரசயில ஈடுபாடு...2009-ல் ராகுல் காந்தியை சந்தித்தார் தி.மு.க.அபிமானியான இவர் 2011-தேர்தலில் அதிமுக-வுக்கு ஆதரவாக களம் இறங்கியது
நேரடியாக ராம்லீலா மைதானம் சென்று உழலுக்கு எதிராக தனது ஆதரவை அன்னாஹஜாரேவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இவரது சமுதாய பங்கு... இவரது ரசிகர் மன்றம் அப்படியே விஜய் மக்கள் இயக்கமாக மாறி தானே புயலின் போதும் கடலூர் வெள்ளச்சேதாரத்தின் போதும் இவரது மக்கள் இயக்கம் அரிசி,மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கியது
பள்ளித்தேர்வில் முதல் நிலை பெறுபவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்..ஹீரோவா?ஜீரோவா? கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்
'தல'அஜித்குமார்
நடிகர்களுக்கு சமுதாய கடமைகள் உள்ளது என்று அறைகூவல் விடும் இவரின் "மோகினி-மணி அறக்கட்டளை"என்று தனது பெற்றோர்கள் பெயரில் இலாப நோக்கமற்ற அமைப்பின் மூலம் பாதிப்பான இடங்களில் சுகாதாரம் போன்றவைகளை அமைத்துக்கொடுக்கிறது.இவரைப்பற்றி நிறைய தெரியவில்லை வெளியே தெரியாமல் நிறைய செய்கிறாரோ? என்னவோ?)
இவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல இவர்கள் விழி அசைந்தால் மாமலையையும் பிடுங்கி வரும் (ரசிகர்) பட்டாளங்கள் இவர்களிடம் உண்டு
இவர்கள் கை அசைவில்தான் தமிழ் நாட்டின் (அரசியல்) தலைவிதியே இருக்கு.
இந்த நான்கு நட்சத்திர பிரபலங்கள் தெரிந்தும் தெரியாமலும் நிறைய....இந்த நாட்டுக்கும் ...அவர்கள் வீட்டுக்கும் செய்துள்ளார்கள் அவைகள் உங்களுக்கு தெரியும் ...ஒரு ரசிகன் என்ற பார்வைக்கு அப்பாற்பட்டு இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளுங்கள்.... இந்தக் கருத்துக்கணிப்பில் வாக்களித்து இவர்கள் பிரபலமானதின் பலன் இவர்கள் வீட்டுக்கா? இல்லை இந்த நாட்டுக்கா? என்ற உண்மையை உலகுக்குச் சொல்லுங்கள்.
இவர்கள் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் மட்டுமல்ல இவர்களில் எந்த நட்சத்திர நடிகர் உண்மையான சமுக ஆர்வலர்?என்பதை வாக்களித்து உலகுக்குச் சொல்லுங்கள்.....
இவர்களில் எந்த நட்சத்திர நடிகர் உண்மையான சமுக ஆர்வலர்?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |