google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கல்லறையில் ஒரு காதல்ரோஜா!!!

Wednesday, March 06, 2013

கல்லறையில் ஒரு காதல்ரோஜா!!!


இதுவரை 
நீ கொடுத்த 
ரோஜா மலர்களை
சேர்த்து வைத்திருந்தேன்...



இன்று 
அவைகளை 













இன்று அவைகளை 
உன் கல்லறை மீது 
சமர்ப்பிக்கிறேன்...

அந்த மலர்கள்
காய்ந்து போயிருக்கலாம் 
அதன் இதழ்கள் 
வாடி வதந்கியிருக்கலாம் 
ஆனால்.....












































உன் அன்பு 
இன்று மலர்ந்த மலராகவே 
இதையத்தில் இருக்கிறது.....

இந்தப் பிரிவும் 
இன்றேக் கடைசி....
நாளைதான்
நாம் இணைந்துவிடுவோமே!
நாளும்தான் மகிழ்ந்திடுவோமே!  

  (அப்பாடா...காதல் இல்லாத வாழ்க்கையும்...காதலை எழுதாத எழுத்தாளனும் உப்பில்லாப் ப(பி)ண்டம்னு சொன்னாங்க..அதுதான் இப்படி ஒரு காதல் கவிதை...?)  

*************************************************************************
எனக்குப் பிடித்த சில காதல் கீச்சுக்கள்....
ஒரு பட்டாம்பூச்சியை கைகளுக்குள் மறைத்து எடுத்து செல்வது போல் சிரமமாக இருக்கிறது உனக்கான என் காதலை உலகம்அறியாமல் பாதுகாப்பது
காதல்ன்றது மாட்டு சாணி மாதிரி வெளியே வாசல் தெளிக்கலாம், டைனிங் டேபிள்ள வச்சி அழகு பாக்க முடியாது. #புரியுதாடாஆஆஆ
ஆண்கள் தங்கள் நினைவுகளில் இருந்து அழிக்க நினைப்பது தங்களின் முதல் காதலை, பெண்களோ தங்கள் கடைசி காதலை.!!!
கடற்கரை மணலில் எவ்வளவு பெயர்கள் எழுதி அழிக்கப்பட்டிருக்கின்றனவோ? கடலுக்குதான் தெரியும் அந்த ஒருதலைக் காதல்களையெல்லாம்!
அழகான பெண்ணை அன்பாக பார்ப்பது காதல் இல்லை ...... அன்பான பெண்ணை அழகாக பார்பதுதான் காதல் ....#ப பி
காதல்ங்குறது ரமணன் சொல்ற வானிலை அறிக்கை மாதிரி வரும்னு நெனச்சா வராது வராதுனு நெனச்சா வரவே வராது
காதலுக்கு கண் இல்லை ஆனால் மெரினாவிற்கு வருபவர்களுக்கும் கண்ணில்லை என நினைக்கிறார்கள் காதலர்கள்




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1