google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சிரிக்கச் சில ஒரு வரிக்கதைகள்

Tuesday, March 05, 2013

சிரிக்கச் சில ஒரு வரிக்கதைகள்



எமனின் கவலை (கதை-1)
அடேய்...மாய(ன்)ப்பதரே! 12-12-2012-ல் உலகம் அழியும் என்று நீ சொன்னதை நம்பி நானும் நிறைய அங்கதர்களை(வேலையாட்கள்) புதிதாக வேலைக்குச் சேர்த்து அவர்களுக்கு OT-யும் கொடுத்து எமலோகமே திவாலாகிப் போச்சடா!பெரியார் சொன்னதைக் கேட்காதது தப்பாகப் போச்சடா!    

************************************************************************************



(குடும்பத்)தலைவர் குரல் (கதை-2)

 பிள்ளைகள்  ஒன்றுக்கு மேல் பெற்றால்  அப்பாக்(டக்கர்)களே!....கடைசிக் காலத்தில் நீங்கள் (வாரிசு)விளையாட்டு போட்டி நடுவராக விழிபிதுங்கி வாழ(ட)வேண்டியதுதான்.

*******************************************************************************



கேப்டனின் தாகம் (கதை-3)
கோர்ட்டு கோர்ட்டாக அலைந்து மூணு நாளா தண்ணியே குடிக்காமல் தாகம் தொண்டையை வரட்டுது படுபாவிப்பயலுக...தண்ணிப்பாட்டலை கையில எடுத்தாலே மேலும் கீழும் பார்க்கிரானுங்க...ஆங்...எங்கேயாவது டாஸ்மாக் இல்லாத ஊராப் பார்த்து அவதூறு வழக்கு போடுங்கப்பா... 

*********************************************************************************

சனிக்கிழமை டாஸ்மாக்  (கதை-4) 
சென்னையில சனிக்கிழமை இரவு பத்துமணிக்கு மேல ரோட்டுல வண்டி ஒட்டுனா   கழுத்துல "நான் குடிகாரன் இல்லை"-னு எழுதி மாட்டிகனுமோ...?காவல்துறை கடமை வீரர்களுக்கு "எங்க இருந்து சார் வாருறீங்க?"-என்ற அன்பு முத்தமிடும் (மோப்பம் பிடிக்கிறார்களாம்)விசாரிப்பு வீடு போய்ச் சேருவதற்குள் அய்ம்பது பேரிடமாவது சொல்லுவது மிச்சமாகும்   

************************************************************************



(வை)கோபம் ((கதை-5)
சீறி லங்காவிலிருந்து சீறிப் பாய்ந்துவரும் ராஜபக்சே ராக்கெட்டே!நீ இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் கறுப்புக் கொடி காட்டி கை வலிப்பதால் இங்கேயே நீ இந்திய ஜனாதிபதி மாளிகை அருகில் குடியேறி விடு...அலைச்சல் மிச்சம் உனக்கும் எனக்கும்


*********************************************************************************

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1