google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பலுபு (தெலுங்கு)-சினிமா விமர்சனம்

Friday, June 28, 2013

பலுபு (தெலுங்கு)-சினிமா விமர்சனம்


பலுபு (தெலுங்கு)-படம் ஆரம்பமே பகீர் என்று படம் பார்ப்பவர்களின் வயிற்றைக் கலக்கும் அடிப்புடன் ரவி தேஜா கையில் கிரிக்கெட் மட்டையால் அடி அடியென்று ...பந்தையல்ல...பொறுக்கிகளை அடித்து லட்சுமி ராயைக் காப்பாற்றும் அதிரடிக்காட்சி...அப்படியே லட்சுமி ராய்-ரவி தேஜா குத்துப்பாட்டு  என்று கலக்கலாக...  

freeonlinephotoeditor

அதிரடி அடிப்புக்கு சாரி நடிப்புக்கு தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜ்  ரவி தேஜாவுடன்  போட்டி போட்டு கவர்ச்சி காட்ட ஸ்ருதி ஹாசனும் அஞ்சலியும் அப்புறம் பலுபு (BALUPU) படம் பார்க்க...கசக்குமா? அதிலும் இது இயக்குனர்  கோபிசந்த் மலினேனி,  ரவி தேஜாவுக்காக உருவாக்கிய ஸ்பெசல் அடிதடி காதல் த்திரிலர் காமெடிப் படம் 

freeonlinephotoeditor

கதை - ஸ்ருதி(சுருதி ஹாசன்) தனது உறவினர் கிரேசி மோகன்(பிரமானந்தம்)  னுடன் சேர்ந்து காதலிப்பது போல் எல்லோரையும் ஏமாற்றிக்கொண்டிருக்க    ரவி (ரவிதேஜா)வும் ஸ்ருதியை காதலிப்பதுபோல் நடிக்க ரவியின் தந்தை பிரகாஷ்ராஜ் இருவருக்கும் திருமணம்செய்து வைக்கும் கட்டத்தில்.. கதையின் மிகப்பெரிய திருப்பமாக வில்லன் அசுதோஷ் ரானா நுழைகிறார்...
ரவிதான் பலுபு சங்கர் தாதா என்பதையும் பிரகாஷ் ராஜ்தான் தாதா நானாஜி என்பதையும் தெரிந்து ஸ்ருதியைக் கடத்திச் செல்கிறார்.
ரவிதேஜாவுக்கும் பிரகாஷ்ராஜ்-க்கும் என்ன உறவு..? ரவிதேஜா ஸ்ருதியை மீட்டாரா? டாக்டர் அஞ்சலி(அஞ்சலி)யின் கதை என்ன? என்பதுதான் கதை..சஸ்பென்ஸ் நிறைந்த அடிதடி காமெடியாக சொல்லப்பட்டுள்ளது.

raviteja

ரவிதேஜா- இரு மாறுபட்ட அமைதி-ஆக்ரோஷம் நடிப்பையும் அடிதடி-காதல் நடனம் துடிப்பையும் நல்லாவே வெளிப்படுத்துகிறார்.அவர் வாயைத்திறந்தாலே பஞ்ச் வசனம்தான்...அரங்கம் கைதட்டும் ஓசையில் அதிர்கிறது அவர் "கோட்டாலா...மிம்மாலினி கோட்டாலா... ரெண்டிநின்டிலோனோ பஞ்ச் உண்டுன்டிறாய்.." என்று தொடங்கும் பஞ்ச் மிகப் பிரபலமாகும் என்று பஞ்ச் ஆருடம் சொல்கிறது. அவருக்கும் ஸ்ருதி ஹாசனுக்கும் பிசிக்ஸ்-கெமிஸ்ட்ரி நல்லாவே பொருந்துது...அதிலும் அவர் டவலுடன் வரும் அம்மணிக்கு சூப்பர் ஆடை கட்டிவிடுவது நல்ல கிளுகிளுப்பு...இருவரும் இன்னும் நிறையப்படங்கள் நடிக்கலாம் 

freeonlinephotoeditor

ஸ்ருதி ஹாசன்- கதைக்கு ஏற்ற நல்ல நடிப்பு....பாடலுக்கேற்ற நல்ல கவர்ச்சி அவரது நடிப்பு தெலுங்கு படங்களில் நன்றாகவே.... தெரிகிறது.போட்டிக்கு அஞ்சலி இருந்தாலும் இவரே முக்கிய வேடத்தில் ரவி தேஜாவுடன் இணைந்து கலகலப்பாக நடித்துள்ளார்.

freeonlinephotoeditor

அஞ்சலி- இடைவேளைக்குப் பிறகு வரும் டாக்டர் அஞ்சலி ஒரு பாட்டு கொஞ்சம் காதல் என்று ரவி தேஜாவுடன் ஆட்டம் போட்டாலும் பாதியிலையே பொசுக்கென்று போட்டுத் தள்ளிவிடுகிறார்கள்  

freeonlinephotoeditor

பிரகாஷ் ராஜ்- இரு மாறுபட்ட நடிப்பு- ரவியின் தந்தையாகவும் நானாஜி தாதாவாகவும்...கதைக்கு அருமையாகப் பொருந்துகிறார்.ஈவ்-டீஸிங் கேஸில் போலிஸ் நிலையத்திலிருந்து வெளிவரும் காட்சி சூப்பர் நாசர் ஸ்ருதியின் தந்தையாக வந்துப் போகிறார்.
பிரமானந்தம்தான் படத்தின் முக்கிய பாத்திரம்...படம் தொய்யும் போதெல்லாம் கங்கணம் ஸ்டைல் பாட்டுப்பாடி கலகலப்பு ஊட்டுகிறார்.

freeonlinephotoeditor

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பயங்கர சண்டைகாட்சிகள் இருக்கும் என்று பார்த்தால்...அப்படியே உல்டாவாக தமாஷ்...பாட்டுப்பாடியே படத்தை முடித்துவிட்டார். இயக்குனர் கோபிசந்த் மலினேனி பிளாஷ் பேக் உத்தியுடன் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் வெளிப்படுத்துகிறார் அஞ்சலி மீது ஆசிட் வீச விரட்டும் காட்சி அசத்தல் ஒளிப்பதிவாளர் ஜெயணன் வின்சென்ட்...போர்ச்சுகல் நாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியில்...ஒளிப்பதிவு அருமை அதேப்போல் எஸ்.தமன் இசையமைப்பில் அடிதடி காட்சிகளும் அத்தனை பாடல்களும் இனிமை...அதிலும் லக்கி லக்கி சூப்பர் ஹிட்...
ஆக மொத்தத்தில் படம் நல்ல பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் 

                                          thanks-YouTube-by FilmyTime

தமிழில் விரைவில் வரலாம் வந்தால் மிகப்பெரிய வெற்றி நிச்சயம் 
படம் பார்க்க நினைப்பவர்கள் படத்தில் ரவி தேஜாவின் கிரிகெட் மட்டையால் விளாசும் முதல் அதிரடி சண்டைக்காட்சியையும் லட்சுமி ராயுடன் குத்துப்பாட்டையும் காணத்தவறாதீர்கள்... 

பரிதி.முத்துராசன் ‏@PARITHITAMIL
 பலுபு-படம் பார்க்க
மொழி தெரிந்திருக்க தேவையில்லை
காதலும் சண்டையும் மொழிக்கு அப்பாற்பட்டவை        
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1