அம்பிகாபதி(தமிழ்)-ராஞ்சனா(இந்தி)
தனுஷ்-சோனம் கபூர் நடித்த ராஞ்சனா (இந்தி) படத்தின் தமிழ் மொழியாக்கம் அம்பிகாபதி... (இடையில் அரசியல் புகுந்து கொஞ்சம் தடம் மாறினாலும்) இயக்குனர் ஆனந்த் ராய் வண்ணத்தூரிகையால் திரையில் வரைந்த காதல் ஓவியம்
தனுஷ்-நடிப்பின் பரிணாமங்கள் நமக்கு தெரிந்ததே..அவரது அப்பாவித்தன முகமும் எளிமையான தோற்றமும் நாம் அறிந்ததே...ஆனால் அவர் இன்று பாலிவுட்டில் இந்த அளவுக்கு வெற்றி நட்சத்திரமாக வலம் வருவார் என்பது யாரும் அறியாததே...நாளை ஹாலிவுட் படங்களிலும் பட்டையக் கிளப்பினால் ஆச்சரியமில்லை
முதல் ஒரு வாரத்திலேயே இந்திய அளவிலும்(35 கோடி) உலக அளவிலும்(42 கோடி) ராஞ்சனா பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் அந்தப் படத்தை இந்த ஆண்டு பாலிவுட் வெற்றிப்படங்கள் வரிசையில் கொண்டு சேர்க்கின்றது...தனுஷையும் கைகோர்த்து அழைத்துக்கொண்டு....இனி அவரது தமிழ் படங்கள் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு
பாலிவுட்டில் ஊர்வலம் வரலாம்...
இவை எல்லாவற்றையும் விட...சோனம் கபூர்-அபய் தியோல் ஆகியோருடன் தனுஷ் இனனைந்து நடித்திருந்தாலும் அவரை பாராட்டாத பாலிவுட் நட்சத்திரங்கள் இல்லை பாலிவுட் இணைய தளங்கள் ராஞ்சனாவுக்கு Ratings: 8.1/10 கொடுத்து அழகு பார்க்கின்றன...
பாலிவுட்டில் என்றும் ஜொலிக்கும் நட்சத்திரம் Big B அமிதாப் பச்சன் தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ள செய்தி.....
"இன்றைய சினிமாவும் அதன் மகத்தான கலைநுணுக்கமும் மிளிரும் இளந்தலைமுறை நடிகர்களின் காதல் உலகம்-ராஞ்சனா படம் பார்த்ததில் மகிழ்சி...அதே நேரம் பொறாமையாகவும் புலம்பும் நிலையிலும் நான் இருக்கிறேன் ...அப்படியொரு படத்தில் நான் நடிக்கவில்லையே என்று.வருந்துகிறேன் "
நமது வலைப்பதிவில் ராஞ்சனா (இந்தி)-சினிமா விமர்சனம் எழுதியபோது அதன் தமிழாக்கம் அம்பிகாபதி இங்கு வெற்றி பெறுமா...? என்ற எண்ணம் எனக்கு இருந்தது...ஆனால் இங்கேயும் இணைய தளங்களும் பத்திரிகைகளும் பாராட்டுகின்றன..பார்த்தவர்களும் குறை சொல்லவில்லை
தென்னிந்தியாவிலிருந்து எத்தனையோ நட்சத்திர நடிகர்கள் பாலிவுட்டில் செய்யாத சாதனையை தன் ஒரே படத்தில் செய்துவிட்டார்..தனுஷ்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |