google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சூர்யா...யார் வசூல்சக்ரவர்த்தி?

Sunday, July 14, 2013

ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சூர்யா...யார் வசூல்சக்ரவர்த்தி?


இப்போது சினிமாவும் பயிர் விவசாயம் போன்று....பணம் விவசாயம் ஆனது.இங்கே இப்படி நல்ல அறுவடை செய்த சமீபகால கோலிவுட் படங்களில்  முன்னணியில் இருக்கும் பத்து திரைப்படங்களைப் பார்ப்போம் அதில் அதிக அறுவடைக்கு காரணம் யார்...? நடிகர்களா? இயக்குனர்களா? என்பதையும் அறிவோம்

சிறந்த வலைதளங்களின் புள்ளிவிவரம் பட்டியல்படி இங்கே இந்தத் திரைப்படங்கள் வரிசை படுத்தப்பட்டுள்ளன.......
அதிக முதலிடும் அதிக விளைச்சலும் செய்த பத்து தமிழ் திரைப்படங்கள்.....

freeonlinephotoeditor
1-எந்திரன் 
இயக்குனர் ஷங்கர்+சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் ரூ.132 கோடி செலவில் ரூ.325 கோடி வசூல் செய்து 146% விழுக்காடு லாபம் ஈட்டிய இப்படம் சூப்பர் ஹிட் வரிசையில் முதல் இடத்தைப் பிடிக்கிறது. வித்தியாசமான கதை விருவிருப்பான அதேநேரம் நகைச்சுவை காட்சிகளாலும் படம் வெற்றிப்பெற்றது.

freeonlinephotoeditor
2-விஸ்வரூபம் 
இயக்குனரும் நடிகரும் உலகநாயகர் கமல்ஹாசன்   ரூ.95 கோடி விதைத்து ரூ.230 கோடி அறுவடை செய்து....137% விழுக்காடு லாபம் அடைந்தார் தமிழ்நாட்டில் இப்படத்தின் வெற்றிக்கு அந்த நேரம் எழுந்த மதப் பிரச்சனைகள் கூட காரணமாக இருந்திருக்கலாம் என்று நினைத்தால் அது தவறு...உலக அளவில் சிறந்த தொழில் நுட்பம் இயக்கம் நடிப்பு...காரணிகளாகச் சொல்லப்பட்டது.

freeonlinephotoeditor
3-தசாவதாரம் 
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உலகநாயகர் கமலஹாசன் பத்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரூ.60 கோடி முதலீட்டில் ரூ.189 கோடி விளைச்சல் கண்ட படம் 215% விழுக்காடு லாபம் கொடுத்தது.

freeonlinephotoeditor
4-துப்பாக்கி 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜயின் அதிரடி நடிப்பில் ரூ.70 கோடி  முதலீட்டில்  ரூ.180 கோடி வசூல் செய்து 157% விழுக்காடு  லாபம் கண்டது.

freeonlinephotoeditor
5-சிவாஜி 
இதுவும் இயக்குனர் ஷங்கர் + சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் கூட்டணியில்  ரூ.60 கோடி செலவில் ரூ.162 கோடி வசூலித்து 170% விழுக்காடு லாபம் ஈட்டியது.

freeonlinephotoeditor
6-நண்பன் 
இயக்குனர் ஷங்கருடன் இணைந்து இளைய தளபதி விஜய் நடித்த இந்த நகைச்சுவை திரைப்படம் ரூ.55 கோடி செலவு செய்து....ரூ.99.5 கோடி வசூலில்  81% விழுக்காடு லாபம்.

freeonlinephotoeditor
7-ஏழாம் அறிவு 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா வின் வித்தியாசமான நடிப்பில் ரூ.80 கோடி செலவு செய்து ரூ.98 கோடி வசூல் செய்த இப்படம் 23% விழுக்காடு லாபம் ஈட்டியது.

freeonlinephotoeditor
8-மங்காத்தா 
வெங்கட் பிரபு இயக்கத்தில் தல' அஜித்தின் யதார்த்தமான நடிப்பில் ரூ.35 கோடி விதைத்து ரூ.97 கோடி அறுவடை செய்து 177% விழுக்காடு லாபம் ஈட்டியது.

freeonlinephotoeditor
9-வேலாயுதம் 
எம்.ராஜா இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் ரூ.45 கோடி செலவு....ரூ.71 கோடி வசூல்.....57% விழுக்காடு லாபம் 

freeonlinephotoeditor
10-மாற்றான் 
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா உடல் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக  நடித்த இப்படம் ரூ.60 கோடி முதலீட்டில் ரூ.71 கோடி வசூல் செய்து 18% விழுக்காடு லாபம் ஈட்டியது.

இங்கே இப்படி நல்ல வசூல் அறுவடைசெய்த பத்து திரைப்படங்களையும் அதில் நடித்து அதிக அறுவடைக்கு  காரணமான நடிகர்களையும் பார்த்தோம்...இவர்களில் ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சூர்யா....இவர்களே மாறி மாறி முன்னணிக்கு வருகிறார்கள் 

உண்மையில் இதில் சில இயக்குனர்களின் திறமையும் ஈடுபாடும் வெளியே தெரியாமல் இருக்கின்றன அல்லது அவர்கள் இல்லாமல் இவர்கள் வசூல்மன்னர்கள் ஆகியிருக்க முடியாது...உண்மை.

அன்பர்களே! நண்பர்களே! இங்கே.... விருப்பு வெறுப்பு இன்றி உண்மையாக....வாக்களியுங்கள்  ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சூர்யா..இவர்களில் உண்மையான வசூல் சக்ரவர்த்தி யார்..? 
என்பதை வாக்களித்துச் சொல்லுங்கள்               

வாக்களிக்கும் அனைவருக்கும்.... நன்றி...16-07-2013 முடிவு       

(குறிப்பு-ஒரு பிரபல சினிமா வலைப்பதிவர் என்னிடம் கேட்டார் இப்படிப்பட்ட கருத்துகணிப்பு.. அவரவர் ரசிகர்கள் அவரவருக்குதானே வாக்களிப்பார்கள் என்று அப்படி பார்த்தால் கட்சி தொண்டர்கள் வாக்களிப்பதால் மட்டுமே எந்த அரசியல் கட்சியும் ஆட்சிக்கு வருவதில்லை..பொது வாக்குகள் இங்கேயும் உண்டு அது நியாமாக உண்மையை தெரியப்படுத்தும் ...நம்பிக்கைதான்) 

(வசூல் புள்ளிவிவரங்கள் மட்டுமே பல வலைதளங்கள் உதவின..... )
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1