google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காமராஜர் வரைந்த ஓவியங்கள்!

Monday, July 15, 2013

காமராஜர் வரைந்த ஓவியங்கள்!


பெருந்தலைவர் காமராஜர் ஓவியம் வரைந்தாரா...? என்ன ஓவியம் என்று காணத்தோன்றுகிறதா....? இதோ அவர் பிறந்த 15 ஜூலை அன்று பிறந்த உலகின் தலைசிறந்த ஓவியரும் அவரால் உருவான பொற்காலத்தையும் முதலில் காண்போம்

இன்று   ரெம்பிரான்ட் எனப்படும் ரெம்பிரான்ட் ஹார்மென்சூன் வான் ரீய்ன் (Rembrandt Harmenszoon van Rijn) டச்சு ஓவியரின் 407-வது பிறந்தநாள்

ரெம்பிரான்ட் (15 ஜூலை 1606-4 அக்டோபர் 1669)- மிக பெரிய டச்சு ஓவியரும் அச்சுஅமைப்பாளரும் ஆவார் இவர்  வரைந்த காலத்தை வென்ற சில கலை படைப்புகளை இங்கே காண்போம்...

freeonlinephotoeditor

 இது ரெம்பிரான்ட் வரைந்த அப்டக்சன் ஆப் யுரோபா (The Abduction of Europa-1632).பரோக் ஓவியம். கி.பி.1600-காலகட்டங்களில் ரோம்,இத்தாலி நாடுகளில் பிரபலமாக இருந்த பரோக் கலைப்பாணி ஓவியம் என்பது நாடகத்தன்மை,பதற்றம்,களிப்பு,சிற்பத்தின் மகிமை... போன்றவைகளை தெளிவாக,எளிதில் புரிந்துகொள்ளும் தன்மையுடன் ஓவியமாக வெளிப்படுத்துவதாகும்   

freeonlinephotoeditor  

இவர் வரைந்த பைபிள் புதிய ஏற்பாட்டில் மார்க் நற்செய்தி நான்காவது அத்தியாயத்தை சித்தரிக்கும் கலிலீ கடல் மீது புயல்(The Storm on the Sea of Galilee-1633) என்ற இந்த ஓவியம்  அமெரிக்காவில்இஸபெல்லா ஸ்டீவர்ட் கார்ட்னர் அருங்காட்சியகத்திலிருந்து மார்ச் 18, 1990 அன்று திருடப்பட்டது....இன்றுவரை இது மர்மமாக உள்ளது..இந்த ஓவியம் இருந்த இடத்தில் இன்று வெறும் சட்டம் மட்டுமே உள்ளது.    

freeonlinephotoeditor

இவரது  நைட் வாட்ச்(The Night Watch-1642) உலகின் மிக பிரபலமான ஓவியங்களில் ஒன்றாகும்.இது நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாமில் ரிஜிக்ஸ் அருங்காட்சியகத்தை இன்றும் அழகு செய்கிறது.


ரெம்பிரான்ட்- இவரது காலம் டச்சு வரலாற்றில் ஓவியக்கலையின் பொற்காலம் என்று போற்றப்பட்டது.    
K-காமராஜர்-இவரது காலம் தமிழக வரலாற்றில் கல்வி மறுமலர்ச்சி பொற்காலம் 

freeonlinephotoeditor
 
அவரால் அன்று கல்வித்துறையில் வரையப்பட்ட ஓவியங்கள் நிறைய....அவைகளில் சில காண்போம்...........

freeonlinephotoeditor
K.காமராஜர் (15 ஜூலை 1903 - 2 அக்டோபர் 1975)  
இவரால் குலத்தொழில் கல்விமுறை என்ற பெயரில் ராஜாஜி அரசாங்கம் மூடிய 6000 பள்ளிகூடங்கள் மீண்டும் இலவசகல்வி என்று புது வர்ணம் பூசப்பட்டு புதுப் பொலிவுடன் திறக்கப்பட்டன இன்னும் புதியதாக 12000 பள்ளிகூடங்கள் புத்தம் புது ஓவியங்களாக வரையப்பட்டன..

freeonlinephotoeditor

ஆரம்பப்பள்ளிகள் இல்லாத கிராமங்கள் இல்லை உயர்நிலைப் பள்ளி இல்லாத பஞ்சாயத்து இல்லை ஏழைக்குழந்தைகளுக்கு ஒருவேளை பகல் உணவு அளித்து இலவச கட்டாய தரமான கல்விமுறை வழங்கினார்....   freeonlinephotoeditor  
இதுவும் அவர் வரைந்த வைகை அணை ஓவியம் இப்படி நிறைய வரைஞ்சியிருக்காரு...
இப்படி இவர் வரைந்த காலத்தால் அழியாத ஓவியங்கள் நிறைய.. 
என்ன நண்பர்களே ஒரே நாளில் பிறந்த இவரையும் ஓவியராக பார்த்தது சரிதானே....?

            thanks-YouTube-bySamuel Maniraj Samuel Maniraj


இந்தப் பதிவு எழுதக் காரணமாக இருந்த ட்வீட்டர்..... 
ஈரோடு கதிர்@erode_kathir-க்கு நன்றி.
காமராஜர் குறித்து எது படித்தாலும் ஒரு கணம் மனசு குளிர்கிறது, கனக்கிறது, நெகிழ்கிறது, தளும்புகிறது. உச்சமாய் கண்களில் கூடுதல் ஈரம் படிகிறது

கர்மவீரரைப் பற்றி நிறையப் பதிவுகள் எழுதிவிட்டேன் 
அதனால் இந்தப்பதிவில் காலத்தை வென்ற ஒரு ஓவியரோடு 
அவரை ஒப்பிட்டுப் பார்த்தேன்.....
காமராஜ் பற்றிய எனக்குப் பிடித்த சில பதிவுகள்.......
ஓட்டுக்காக ஒட்டடை அடிக்கிறார்கள் 
எமனும் படிக்கவில்லையோ? 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1