google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சாகசம்(தெலுங்கு)-சினிமா விமர்சனம்

Saturday, July 13, 2013

சாகசம்(தெலுங்கு)-சினிமா விமர்சனம்


சாகசம்- 
ஆங்கிலப்படங்கள் மெக்னாஸ் கோல்ட் (macanas gold ), இன்டியானா ஜோன்ஸ்(Indiana Jones) வரிசையில்...புல்லரிக்கும் சாகசக்காட்சிகள் நிறைந்த  வித்தியாசமான அட்வெஞ்சர் திரைப்படம் காதல் இல்லை கவர்ச்சி இல்லை திகில்-மர்மம்-திடுக்கிடும் திருப்பங்களுடனும் விறுவிறுப்பான மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகளுடனும் புதையல் வேட்டை பயணம் பற்றியத் திரைப்படம்

கதை-கோடிஸ்வரன் கனவில் மிதக்கும்  ATM செக்கியுரிட்டி கவுதம் (கோபிசந்த்) கையில் பாக்கிஸ்தானில் புதைந்திருக்கும் அவரது செல்வந்தர் வர்மா (சுமன்) தாத்தாவின் குடும்பப் பொக்கிஷம்  பற்றிய  வரைபடம் கிடைக்க... இளம் பக்தை ஸ்ரீநிதி (டாப்ஸி)யின் உதவியுடன் புதையல் தேடிச் செல்கிறார்...அங்கே உள்ள பாக்கிஸ்தானிய லோக்கல் தீவிரவாதி (சக்தி கபூர்) சுல்தானும் அவரது ஆட்களின் தொல்லைகள் கடந்து பல சிலிர்க்கச் செய்யும் சாகசங்களுடன்.....புதையலை அடைந்தாரா?  அவரது சாகசப் பயணம் வென்றதா?

ஆரம்பத்தில் படம் ஆமை வேகத்தில் பயணித்தாலும் அப்படியே முயல் வேகத்தில் விறுவிறுப்பாக செல்கிறது....சில நேரங்களில் பூனை போன்று பதுங்கினாலும் புலிப்பாச்சல் பாய்கிறது.இந்தியா-பாக்கிஸ்தான் எல்லையில் பயணம்..பாக்கிஸ்தான்  மரங்கள் இல்லாத மலைப்பகுதியில் குதிரை சவாரி..பாழடைந்த கோயில்...குகையில் தொங்கும் பாலம்...வாயிலிருந்து அம்புகள் பாயும் சிலைகள்...சுழலும் கொடுவாள் சங்கிலி...நீர் ஏறி இறங்கும் பாதாளக்கிணறு.. இப்படி நிறைய காட்சிகளால் இயக்குனர் படம் பார்க்கும் நம்மையும் மர்ம தேசத்துக்கு அழைத்துச் செல்கிறார்.



beach



கோபிசந்த்-ஆரம்பத்தில் சாதாரணமாக தோன்றினாலும் கதை நகரும் போது...அப்படியே மனிதர் சூப்பர் மேனாக மாறிவிடுகிறார்..இந்தியாவில் ATM கொள்ளையர்களிடம் போடும் காமெடி சண்டையாகட்டும் பாகிஸ்தானில் சுல்தான் ஆட்களிடம் போடும் துப்பாக்கிச் சண்டையாகட்டும் சுழலும் சங்கலியில் சுற்றுவதிலாகட்டும் நடிப்பில்  அந்தனை சுறுசுறுப்பு (ஆக்சன்) காட்டுகிறார்.அதேநேரம் சுல்தான் ஆட்களால் கைவிரல் நறுக்கப்ப்படும்போதும் நககண்ணில் ஊசி ஏற்றப்படும்போதும் பார்வையாளர்களிடம் பரிதாபம் பெறுகிறார்...வெடிகுண்டு சட்டையை அகற்றும் காட்சி விவேகம்



டாப்ஸி-சும்மா...ஒரு டூயட் பாடலில் கலக்குகிறார்...கோபிசந்த் பயணத்துக்கு துணையாக உதவுகிறார்.. கதாநாயகன் ஆபத்தில் சிக்கும் போதெல்லாம் காப்பாற்றும் அவர் சுல்தான்களிடம் மாட்டிக்கொண்டு சித்ரவதை படும் காட்சிகளில் நன்றாகவே நடித்துள்ளார்..கதையிலும் கவர்ச்சியில்லை அவர் உடம்பிலும் உடையிலும் கவர்சி இல்லை 

cricket

சக்திகபூர்-தீவிரவாதி சுல்தான் வேடத்தில் கம்பீரம் பாக்கிஸ்தானில் நடக்கும் கதைஎன்பதாலும் வெடிகுண்டு காட்சிகள் சித்ரவதைகாட்சிகள் நமக்கு  நிறைய நேரம் உலகநாயகரின் விஸ்வரூபம் தாலிபான் கதாப்பாத்திரங்களை  நினைவுப்படுத்துகிறது தொல்பொருள் ஆய்வாளர் உடம்பில் வெடிகுண்டு கட்டி கொல்லும் விதம் கொடுமை

அலி-காமெடிக்கு என்று உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரம் ஆயினும் படத்தில் விருவிருப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் டம்மியாகிவிட்டார் 

எழுத்தும் இயக்கமும் சந்திரசேகர் எளேடி பாராட்டுக்குரியவர்....மர்மம் நிரந்த பயனக்கதைக்கு ஏற்ற நிறைய தொழில் நுட்பங்களை புகுத்தியுள்ளார்...அம்மன் லாக்கெட்,வாயிலிருந்து அம்பு பாயும் சிலைகள்,திருக்கும் தலையுடன் அன்னபட்சி பொம்மை,பாதாளக் கிணறு ...இப்படி அவரது கதைக்கேற்ற தொழில் நுட்பங்கள் அருமை 

                                   thanks-YouTube-by telugufilmnagar

ஸ்ரீயின் இசையில் ஒ...காணு..பாபா..  பாடல் இனிமை அதைவிட காதல் டூயட்-நேனு நேனே கா....அருமையோ அருமை இப்படி திகில் படத்துக்கு ஏற்ற சிலிர்க்கவைக்கும் பின்னணி இசை சூப்பர் 

                                       thanks-YouTube-by telugufilmnagar
ஒளிப்பதிவாளர் ஷியாம்தத் பாடல் காட்சிகள் மட்டுமின்றி லடாக் மலைப்பகுதி காட்சிகளையும் களையும் தெள்ளத் தெளிவாகா கேமராவில் சுட்டு சபாஷ் பெறுகிறார். பரபரப்பான திரைக்கதைக்கு விருவிருப்பான காட்சிகளின்  படையல்

                                 thanks-YouTube-by studiooneonline

இந்திய திரைவானில் அதிலும் டோலிவுட்டில் சாகசம் ஒரு புது வழிகாட்டி... இந்தப் புதையல் வேட்டை திரைப்படம் ஹோலிவுட் ரேஞ்சில் புதுமைப் புரட்சி..மாமுலான காதல்-குத்துப்பாட்டு-அதிரடி-காட்டுக்கூச்சல் படங்களாக வந்துகொண்டிருக்கும் கோலிவுட்-பாலிவுட் பட ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்து..........இன்னொரு மர்ம உலகுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும் சாகசம் திரைப்படத்தைக்   காணத்தவறாதீர்கள்.(இதுமட்டும் 3-D யில்வந்திருந்தால் இன்னும் அதிகமாக  நம் இதையத்தை திருடிஇருக்கும்)

டாப்...கவர்ச்....சீ......டாப்ஸி

climb


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1