google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வில்லா (பீட்சா 2) - சினிமா விமர்சனம்

Thursday, November 14, 2013

வில்லா (பீட்சா 2) - சினிமா விமர்சனம்




Made with .freeonlinephotoeditor.com









திகிலூட்டும் ஆங்கிலப்படத்திற்கு  இணையான இன்னுமோர்  ஆச்சரியமூட்டும்  தமிழ் திகில் திரைப்படம்... பில்லி,சூன்யம்...போன்ற அமானுஷ்ய சக்திகளைப் பற்றி சிறப்பான திரைக்கதை,இயக்கம்... போன்ற மனித சக்தியால் புதுமுக  இயக்குனர்  தீபனின்  திகில் படைப்பு.......... வில்லா (பீட்சா 2)

villa

சென்னையில் தொழிலில் நஷ்டமடைந்த ஜெபின் (அசோக் செல்வன்) என்ற எழுத்தாளர் தன் ஓவியர் தந்தையின் இறப்புக்குப் பிறகு தனது பெயரில் தனது தந்தை (நாசர்) பாண்டிச்சேரியில் ஒரு மிகப்பெரிய பங்களா வீடு (வில்லா) வாங்கி வைத்திருப்பதை அறிந்து தனது கடன்களை அடைக்க அதை விற்க.... அந்த வில்லாவுக்கு செல்கிறார் 



அங்கே பாழடைந்த அறையில் நிறைய ஓவியங்களைக் கண்டு தனது காதலி ஆர்த்தி (சஞ்சிதா ஷெட்டி) என்ற ஓவியக்கல்லூரி மாணவியுடன்ஆலோசனை செய்து.... அந்த ஓவியங்களில் உள்ளது போல் தனது வாழ்வில் பல நிகழ்வுகள் முன்பு நடந்ததையும் இனிமேல் நடக்கப் போவதாக ஆர்த்தியை தானே கொல்லப் போவதும் அவரும் மரணம் அடைவதும் என்று ஓவியங்கள் உணர்த்துவதாக    அறிந்து...... பிரமிப்படைந்த ஜெபின் அந்த வில்லாவை விற்க நினைக்கின்றார் 

villa



அதில் அவர் பல சங்கடங்களை சந்திக்க.....அதனால் அந்த ஓவியங்களை அழிக்க நினைக்கின்றார் 
ஜெபின் அந்த  திகில் பங்களாவை விற்றாரா....?
அந்த ஓவியங்களை அழித்தாரா....? 
ஆர்த்தி-ஜெபின் என்ன ஆனார்கள்...? என்பதை திரையில் பாருங்கள் 



திகிலூட்டும் படங்களுக்குரிய சிறந்த திரைக்கதையாக இயக்குனர் தீபன் திறம்பட தீட்டிய திகில் ஓவியம்.........வில்லா திரைப்படம்  என்றால் மிகையாகாது 

Made with .freeonlinephotoeditor.com

அந்த வில்லா-வுக்கு ஒரு பழங்கதையாக.....பிரெஞ்ச் மந்திரவாதி கட்டியதாகவும் அங்கே ஒரு குழந்தையை பலியிட்டதாகவும் என்று திகிலூட்டி...அதற்கு பல அற்புதமான காட்சிகள் அரங்கேற்றி...  அதற்குப்பிறகு....அந்த வீட்டை வாங்கிய ஒரு ஜமிந்தார் பைத்தியமாக அலைந்ததாகவும் அவரது மகன்கள் அண்ணன்-தம்பிகள்  சண்டை...கொலை என்று பல துனைக்கதைகளால் பலதிருப்பங்ககளைக் காட்டி.......அற்புதமாக படத்தை நகர்த்திச் செல்கின்றார் 





படத்தில் குறைவான வசனங்கள்...குறைவான கதாப்பாத்திரங்கள் என்று எழுத்து இயக்கம் தீபன்........திகில் படத்திற்குரிய கட்டமைப்பை பல காட்சிகளால் அஸ்திவாரமாக எழுப்பியுள்ளார்........


Made with .freeonlinephotoeditor.com

1-ஆரம்பத்தில் ஜமின்தார் மகன்கள் அடிபிடி சண்டைக்காட்சி.. அதுவே கடைசியில் படத்தின்  திருப்பமாக அமைவது...
2- வில்லாவில் அசைந்தாடும் கதவுகளில் வீட்டுப் புரோக்கர்  கை உடைவது......ஜெபின் நண்பனின் கால்கள் உடைவது....
3-ஆர்த்தி தனது தோழியுடன் ஜெபின் பற்றி உரையாடுவது 
4-கடைசியில் மர்ம கடிதம்....ஜெபினின்  இரண்டாவது புத்தகம் பார்சல் வருவது

..........இப்படி நிறையச் சொல்லிக்கொண்டுப் போகலாம் 
கொஞ்ச நேரமே நாசர் வந்தாலும் படத்தில் நிறைவாக நின்று திகிலூட்டுகின்றார்.நல்ல நடிப்பு அருமையான கதாப்பாத்திரம்  

Made with .freeonlinephotoeditor.com  

பாடல்கள் எதுவும் மனதில் லயிக்கவில்லை ஆயினும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படம் பார்ப்பவர்களை பயங்காட்டுகின்றது....அதேநேரம் காதைக் கிழிக்காதநளினமான மேல்நாட்டு வாத்தியங்களின் திகிலூட்டும் இசை......

                             thanks-YouTube_by ThirukumaranEnt

ஒளிப்பதிவில் தீபக் குமார் பதே......ஒரு புரட்சி செய்துள்லதுபோல் பல காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன.......வில்லா-வின் தோற்றத்தை அவர் காட்டுவதிலிருந்து அவரது பிரமிப்பூட்டும் கேமரா.பாண்டிச்சேரியின் பல இடங்களை அழகுபடக் காட்சிப் படுத்தி......இன்னும் அந்த மர்மப் பங்களாவில் பல திகிலூட்டும்   மந்திரக் காட்சிகள்....இப்படி தொடர்கின்றது 


Made with .freeonlinephotoeditor.com

ஆக........வில்லா (பீட்சா 2) திரைப்படம் திகில் படப் பிரியர்களுக்கு திகில் நாவல் படித்த திருப்தியைத் தரும் புதுமை விரும்பிகளையும் திருப்தி படுத்தும் மற்றபடி.......குத்துப்பாட்டு,கவர்ச்சி,மசாலா..பிரியர்களுக்கு கொஞ்சம் தலைவலி தரும். ஆனாலும் வில்லா-திகிலூட்டும் 



















 









 ஆங்கிலப்படத்திற்கு  இணையான இன்னுமோர்  ஆச்சரியமூட்டும்  தமிழ் திகில் திரைப்படம்...பிட்சா முதல் படத்தின் கதை தொடர்ச்சி இல்லை ....ஆனால் அதில் கடைசியில் உள்ள மர்ம திருப்பம் மட்டுமே பிட்சா-2 (வில்லா) வில்..........



பயப்படாதீங்க.........









படத்தில்............
பயம்காட்டும் பேய்களோ....இல்லை
கவர்ச்சிப் பூதங்களோ....இல்லை 
குடும்பத்தோடு பார்க்கலாம்...
தீம் பார்க் ரைட் போவதுபோல் இருக்கும்....




வில்லா-வில் இல்லை நயன்தாரா ஜொள்ளு... இல்லவே இல்லை சந்தானத்தின் லொல்லு  
வில்லா-வில் இருப்பது திகிலு....திகிலு....திகிலு 




பதிவுலக நியாயன்மார்களே!
 நீங்கள் ( படம் பார்த்தவராக இருந்தால்..........
இல்லையேல் படம் பார்த்துவிட்டு வாக்களித்து....
உங்கள்  கருத்தை பதிவு செய்யுங்கள்.
உங்கள் பார்வையில்....
 (பிட்சா-2 )வில்லா படம் எப்படியிருக்கு....?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-22/11/2013


villaa
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1