இந்திய தேர்தல் சினிமா வரலாற்றில் முதன் முறையாக அரங்கம் நிறைந்த காட்சியாக பாஜக பிலிம்ஸ் ராஜ்நாத் சிங் தயாரித்து இயக்கி நரேந்திர மோடி கதாநாயகனாக நடித்த அரசியல்-நையாண்டி-குடும்பம்-சென்டிமென்ட்-திகில் திருப்பங்கள் நிறைந்த ஆப் கீ பார் மோடி சர்க்கார் என்ற படம் பற்றிய.....
ஆப் கீ பார் மோடி சர்க்கார்-படத்தின் கதையாக........
RSS பொதுக்கூட்டங்களில் டீ விற்றுக் கொண்டிருந்த குஜாராத்தில் ஒரு கிராமத்தில் பிறந்த சாதாரனமான ஒருவர் இந்த நாட்டை ஆளும் பிரதமராக எப்படி மாறினார் என்பதே...
நாடாளுமன்ற தேர்தல்-2014 ல் பாஜக கட்சியால் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போட்டியிட குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி வடோதரா-வாரணாசி என்ற இரு இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்கின்றார் வேட்பு மனுவில் இதுவரை சிம்பு மாதிரி நான் சிங்கிள் எனக்கு குடும்பம் இல்லை என்றவர் திடீர் திருப்பமாக தனக்கு சிறு வயதில் பால்ய திருமணம் நடந்து மனைவியும் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்
மோடிக்கு திருமணம் ஆனது மற்றும் அவர் மனைவியை மறைத்தது நாடெங்கும் பெரும் பிரச்சனையாகிறது.மேலும் குஜராத் மதக் கலவரம் நடக்க அவர்தான் காரணம் என்றும் கூச்சல் குழப்பம்
இதற்கும் மேலாக அவரை எதிர்த்து குழந்தைத்தனமாக கை காட்டி சிரிக்கும் ஒர் அப்பாவி வில்லன் (ராகுல்) கையில் விளக்குமாறும் தலையில் வெள்ளைக் குல்லாவுமாக ஊ..ஊழல்...என்று ஊதிக்கொண்டு கோமாளித்தனமாய் அலையும் ஒரு காமெடி வில்லன் (அரவிந்த் கெஜ்ரிவால்)
இப்படி சதிகளையும் சதிகாரர்களையும் நேருக்கு நேர் சந்தித்து எப்படி நரேந்திரமோடி வெற்றி பெற்றார் என்பதை திகில் நிறைந்த அதிரடி திருப்பங்களுடன் படம் காட்டுவதே............ஆப் கீ பார் மோடி சர்க்கார்
படத்தின் சிறப்பான காட்சிகள் என்று நிறைய சொல்லலாம்
பிளாஷ்-பேக் காட்சிகளாக வரும் ......
-1950 வாட்நகர் ரயில் நிலையத்தில் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த ஒரு சிறுவன் (நரேந்திர மோடி) தன் தந்தை தாமோதர்தாஸ் மூல்சாந்த் மோடிக்கு தேனீர் விற்க உதவுவது போன்று துவங்கும் காட்சி......
-பிறகு பள்ளிப் படிப்பை விட சினிமாவில் ஆர்வம் கொண்ட வாலிபரான நரேந்திர மோடி தனது தமையனார் உதவியுடன் பேருந்து நிலையம் அருகில் தேனீர் கடை வைத்து சிறப்பாக நடத்தும் காட்சி..........
-இமயமலையில் இரண்டாண்டுகளாக அலைந்து திரிந்த மோடி மீண்டும் மனதில் வைராக்கியத்துடன் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகர் ஆகும் காட்சி
- பரிவார் சங் மாணவப் பொறுப்பாளரான மோடி எமெர்ஜென்சி காலத்தில் துண்டு பிரச்சாரங்கள் விநியோகித்த வீர தீர காட்சிகள்....
-அரசியல் பாடத்தில் டில்லி தொலை தூர பல்கலை கழகத்தில் இளநிலையும் குஜாராத் பல்கலை கழகத்தில் முது நிலை பட்டங்கள் பெற்று தன் படிப்பறிவை வளர்த்துக்கொண்ட மோடி தான் முதல்வராக இருக்கும் குஜாராத் மாநிலத்தில் படித்தவர்களைக் கொண்டு தொழில் புரட்சி செய்யும் காட்சி......
-பிரச்சாரக் கூட்டங்களில் தினம் பல லட்சம் செலவு செய்து வித விதமான தோற்றங்களிலும் உடைகளிலும் மேடைகளில் கவர்ச்சியாக தோன்றியது....
-அந்த அந்த மாநிலங்களில் உள்ள உண்மையான சினிமா பிரபலங்களை அதிலும் தமிழ் நாட்டில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து குடும்பத்தில் ஒருவராய் மாறியது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது
- தமிழ்நாட்டில் படைவீரர்கள் போன்று ரசிகர்களை வைத்துள்ள இளைய தளபதி விஜய் என்ற நட்சத்திர நடிகரை அழைத்து அருகில் அமர வைத்து அவருடன் பவ்வியமாக பழகி நண்பர்களாக்கிக் கொண்டது.....
-இன்னும் அத்துப்போன இத்துப்போன குட்டி தாதா கட்சியினர் கேப்டன்,மருத்துவர் ஐயாக்கள், நடை புயல் வைகோ..போன்றவர்களின் தோள் மீது கை போட்டு அவர்களை ஒண்ணுமில்லாத ஒட்டாண்டிகள் என்று உலகுக்கு காட்டியது.....
இப்படி நிறைய அதிரடி....நகைச்சுவை காட்சிகள் நிறைந்த....ஆப் கீ பார் மோடி சர்க்கார் படம் பாக்ஸ் ஆபீஸ் பிளாக் பஸ்டர் பட வரிசையில் சேர்ந்தது
இப்படம் எடுத்த காலக்கட்டத்தில் யார் கதாநாயகன் என்று சொல்லாமலே படத்தில் நடித்த அனைவரும் நாயகர்களே என்று வந்த காங்கிரஸ் புரோடக்சனில் சோனியாஜி இயக்கிய கை (HAND) திரைப்படமும் அரவிந்த் கெஜ்ரிவால் &கோ என்ற கோமாளி நடிகர்களால் இயக்கி நடிக்கப்பட்ட விளக்குமாறு திரைப்படமும் படுதோல்வி அடைந்தது இப்படி மொக்கைப் படங்கள் எடுத்ததாலேயே பாஜகவின் ஆப் கீ பார் மோடி சர்க்கார் மாபெரும் வெற்றியை பெற்றது என்றுஅரசியல் விமர்சகர்களும் ஊடகங்களும் கணிக்கிறார்கள்
அதேநேரம் தமிழ் நாட்டில் முதல்வர் அம்மா அவர்களே திரைக்கதை-வசனம்-பாடல்கள் எழுதி இயக்கிய இரட்டை இலை படம் அமோக வரவேற்பைப் பெற்றது ஆவலுடன் எதிர்பார்த்த குடும்பப்படம் உதய சூரியன் படு தோல்வி அடைந்தது
ஆப் கீ பார் மோடி சர்க்கார் படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து விரைவில் இரண்டாம் பாகம் வரும் என்றும் அதன் பெயர் ஆப் கீ பார் மோடி சர்வாதிகாரியாக இருக்கும் அல்லது ஆப் கீ பார் மோடி சக்கரவர்த்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது
நண்பர்களே! உங்கள் பார்வையில்......
நரேந்திர மோடியின் ஆப் கீ சர்க்கார் வெற்றியைப் பற்றிய தங்கள் கருத்து என்ன...?
அடப்பாவிகளா........... pic.twitter.com/yNrlncJtOn
— ட்விட்டர் SUN (@PARITHITAMIL) May 16, 2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |