google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிரதமர் மோடியை சந்திக்கப் போன ரஜினி,விஜய்,கேப்டன்...?

Thursday, May 15, 2014

பிரதமர் மோடியை சந்திக்கப் போன ரஜினி,விஜய்,கேப்டன்...?


அமோக வெற்றியில் மோடி பிரதமரானதும்  நம்ம ரஜினி,விஜய்,கேப்டன், வைகோ... இவர்கள் சந்திக்கப் போனால்  என்ன நடக்கும்...? என்று கற்பனை நகைச்சுவை பதிவு... (அவர்களது அதீத ரசிகர்களும் அதீத தொண்டர்களும் மேற்கொண்டு படிக்க வேண்டாம்)

லோக் சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மோடி வீட்டு வாசலில் பெரும் திரளாக காவி உடையில் பரதேசி,பண்டாரங்களின் கூட்டம்.....வான் அதிரும் கோசம்...........
ஹர...ஹர..மோடி
நமோ நமோ நரேந்திர மோடி.....

வெள்ளை வேஷ்டி சட்டையில் முதலில் கேப்டன்,அன்புமணி,வைகோ மூவரும் மோடி வீட்டுக்குள் நுழைய முயன்றபோது பரதேசி கூட்டம் ஓன்று இது ஆப் கி பார் காவி மோடி சர்க்கார் என்றும் இங்கே காவி உடை அணிந்தவர்களே உள்ளே போக முடியும் என்று இந்தியிலும் பேசி  அவர்களை உள்ளே விடாமல் தடுக்கின்றது

கோபத்தில் கண்கள் சிவக்க......ஏய்...என்று சீரிய கேப்டனை வைகோ சமாதனம் படுத்த குட்டி  மருத்துவர் அய்யாவோ.........

"ஏம்பா..கலிங்கப்பட்டிகாரரே..அதுதான் இந்த குவாட்டாரு கோவிந்தனலாம்  கூப்பிட்டு கிட்டு வராதனு சொன்னே...கேட்டிங்களா?....

அங்க பாருங்க....நம்ம பொன்னு (பொன்.ராதாகிருஷ்ணன்) அப்புறம் இலந்தையாரும் (இல.கணேஷன்) உள்ளே போறாயிங்க....அவ்யிங்க கூட நாமும் உள்ளே போயிடலாம்"

.ராதாகிருஷ்ணன் அண்ணேன்...இல கணேசன் அண்ணேன்.. என்று மூவரும் கூச்சலிட்டு கூப்பிட திரும்பிப் பார்த்த பொன்.ராதாகிருஷ்ணன்

"யாரு  நீங்க.....உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே..?". என்று நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம் விஜய் சேதுபதியாட்டம் முழிக்க........

இல.கணேசன் மட்டும் கொஞ்சம் இறக்கப்பட்டு...
"அடேடே...நீங்களா எப்ப வந்திங்க டெல்லிக்கு....
.என்ன வேணும் உங்களுக்கு?" என்று நக்கலாய் கேட்டு அணு குண்டு போட......

மோடி அய்யாவ பார்க்க வந்திருக்கோம் என்று காலில் விழாத குறையா  மூவேந்தர்களும் கொஞ்சமே அல்ல நிறையவே கெஞ்ச......இளகிய மணம் கொண்ட இல.கணேசன்.......
"அட..கொஞ்சம் பொறுங்கப்பா.... நாங்க உள்ளே போயி மோடிஜிய பார்த்து உங்களைப் பற்றி சொல்றோம் அதுக்கு முன்னாடி நீங்க மூவரும் உங்க வேஷ்டிய அவ்ருங்க...."

"அய்யோ நா ஜட்டி போடல" என்று கேப்டன் அலற.........
"அப்பாடா நா கோவணம் கட்டியிருக்கிறேன்" என்று கலிங்கபட்டியார் பெருமையுடன் மனதுக்குள் சிரித்துக்கொள்ள.........
ஆ...என்று வாயைப் பிளந்த அய்யாக்குட்டி அன்புமணி தைரியமாக ஏன்? எதற்கு? என்று ஆவேசமாக கேட்க........

"அட...உங்க நன்மைக்குத்தாம்பா....வெள்ள வேஷ்டி மோடிஜிக்கு புடிக்காது அதனால உங்க வேஷ்டிய அவுத்துப்புட்டு எங்கள மாதிரி காவிக்கு மாறுங்க அப்படியே....எதுக்கு வந்திருக்கிறீங்கனு ஒரு மனு எழுதுங்க" ........என்று இலந்தையார் சொல்லி உள்ளே போனார்.......

தமிழ்நாட்டின் மூவேந்தர்களும் என்ன செய்வது என்று வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்க.......

அங்கே பயங்கர ஆரவாங்களுடன் பரதேசிகள் எல்லோரும் ஒருவரை தோளில் சுமந்து ஆடிப் பாடிய வண்ணம் வந்தார்கள்  அவர்தான் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி  அப்படியே கோச்சடையான் வேசத்தில் ஹர...ஹர...மோடி...   திருமந்திரத்தை முனுமுனுத்த படி வந்துக் கொண்டிருந்தார் 

அய்...நம்ம ரஜினிஜி.....என்று  வைகோ அவரை நோக்கிச் செல்ல......
பழைய  பாபா படப்பெட்டி நியாபகம் வந்ததால் குட்டி மருத்துவர்  ச்சே...இந்தப் பழம் புளிக்கும் என்று முகத்தை திருப்பிக்கொண்டார்  முன்னாள் நடிகர் கேப்டனோ என்ன செய்வது...? என்று அப்படியே ஓரமாக ஒதுங்கி பையில் கொண்டுவந்திருந்த  தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்தார்.

வைகோவை பார்த்த கோச்சடையான் வேசத்திலிருந்த ரஜினி கவலைப்படாதீங்க வைகோஜி உங்களுக்கு காவி வேஷ்டிதானே வேணும் என்று கண்ணை மூடி பாபா மந்திரம்  சொல்ல...அவரது கையில் ஒரு காவி துண்டு வந்தது அதை வைகோவிடம் கொடுத்து இப்ப இத இடுப்புல சுத்திக்கொள்ளுங்க என்று கொடுத்தார்

அந்த நேரம் அங்கே தன் படை வீரர்களுடன் வந்த இளைய தளபதி விஜய் தன் உடன்பிறவாத அண்ணன் கேப்டன் இப்படி ஓரமாய் ஒதுங்கி நிற்பதைபார்த்து
கண்கலங்கியபடி.......என்ன அண்ணேன்...இங்க நிற்கிறீங்க...என்று சோகமாக கேட்க......
"ஏம்பா...விஜய் தம்பி காவி வேஷ்டி கட்டுனாத்தான் மோடிய பார்க்க விடுவாங்களாம்...என்று சொல்ல....தளபதி தன் வீரர்களை ஓரக்கண்ணால் பார்க்க.......
அவர்கள் பாய்ந்து சென்று அங்கே ஆடிக்கொண்டிருந்த பரதேசிகளிடம் இரண்டு வேஷ்டிகளை உருவிக் கொண்டு வந்தார்கள்   அதில் ஒன்றை அவர் கட்டிக்கொள்ள இன்னொன்றை அண்ணன் கேப்டனுக்கு கொடுத்தார்
  
குட்டி மருத்துவரைத் தவிர ரஜினி,விஜய்,கேப்டன்,வைகோ அனைவரும் காவி உடையுடன் மோடியைப் பார்க்க  மோடி வீட்டு வாசலில் காத்து நிற்க.....

உள்ளே........மோடி வீட்டு ஹாலில் கம்பீரமாக மோடி அமர்ந்திருக்க அவரது காதில்  இல. கணேசன்....... 
"கேப்டன்,வைகோ,குட்டி மருத்துவர்,ரஜினி, விஜய் இவியிங்கலாம் இப்ப உங்கள பார்க்க வெளியே காத்து நிற்கிறார்கள்".....என்று சொல்ல....


அவர்களை சந்திக்க ஆவலுடன்  எழுந்த மோடியை...

"மோடிஜி....இவிங்கள சந்தித்தால் தமிழ்நாட்டு அம்மா அகிலாண்டேஸ்வரிக்கு கோபம் வந்துவிடும் அப்புறம் அவர்கள் ஆதரவு இல்லாமல் போய்விடும்"
......... என்று .பொன் ராதாகிருஷ்ணன் தடுத்து மோடியின் காதில் மெதுவாக கிசு கிசுத்தார்

மோடி  ஓரக்கண்ணால் இல.கணேசனை பார்க்க........ உடன்  இல.கணேசன் ஆளுயர மோடியின்  கட்டவுட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்து வாசலில் காத்திருந்த கேப்டன், வைகோ, குட்டி மருத்துவர்,ரஜினி, விஜய்...எல்லோர் முன்பும்  காண்பித்துவிட்டு..

 "நண்பர்களே எல்லோரும் பார்த்துக்குங்க....
இதுதான் ஆப் கி மோடி சர்க்கார்" 

என்று சொல்லி உள்ளே சென்றுவிட்டார்

அடுத்த நாள்..........
சென்னை விமான நிலையத்தில் ஊடகங்கள் முன்பு கேப்டன்,வைகோ,குட்டி மருத்துவர்,ரஜினி, விஜய்...ஓன்று சேர்ந்து பேட்டி கொடுத்தார்கள்

"மோடி...எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவரை நாங்கள் சந்தித்தப் போது அவர் எங்களை ஆரத் தழுவிக்கொண்டார்....அப்படியே அவரே கிண்டிய குஜாராத்தி அல்வாவை எங்கள் வாயில் திணித்து....வழியனுப்பி வைத்தார்  "

எச்சரிக்கை-இது ஒர் கற்பனை நகைச்சுவை பதிவு...ரசிகர்களும் தொண்டர்களும் என் மேல் பாய்ந்து விடாதீர்கள் இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1