google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மாரி-சினிமா விமர்சனம்

Friday, July 17, 2015

மாரி-சினிமா விமர்சனம்



இதுவரை பல காதல் படங்களைத் தந்துள்ள இயக்குனர் பாலாஜி மோகன் முதல்முதலாக நடிகர் தனுஷை வைத்து லோக்கல் ரவுடிசமாக படம் காட்டுவதே.....மாரி -அதிரடி காமெடி திரைப்படம் 

புறாக்கள்  வளர்த்து ரேஸ் பந்தயம் கட்டி பணம் சம்பாதிக்கும் சென்னை திருவல்லிக்கேணி குடிசை பகுதியில் வாழும் தனுஷ்....
அந்தப் பகுதியில் உள்ள  ஒரு ரவுடியிடம் ஏற்பட்ட மோதலால் லோக்கல் தாதாவாகிவிடுகிறார்
 

ஒரு கொலை வழக்கில் தனுஷை கைது செய்ய சாட்சியங்கள் தேடி அலைகிறார் அப்பகுதிக்கு புதுசாக வந்த போலிஸ் அதிகாரி விஜய் யேசுதாஸ்
 

மேலும் அப்பகுதியில்  புதுசாய்  துணிக்கடை துவங்கி குடிவரும் பேசன் டிசைனர் காஜலிடம் முதலில் மோதலும் பின்னர் காதலும் செய்யும் தனுஷ் போதையில் தான் செய்த கொலையை உளறிவிட....
தனுஷ் கைது செய்யப்படுகிறார்
 

தனுஷ் நல்லவரா? ஏன் காதலி காஜல் அவரை போலிசிடம் மாட்டிவிடுகிறார்...? என்பதை ஒரு ட்விஸ்ட் உடன் இயக்குனர் பாலாஜி மோகன் படம்காட்டுவதே........மாரி
 

தனுஷ்......மாரி படத்தை முழுவதும் தாங்கும் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை அவரது உடல்மொழி,லோக்கல் வாய்மொழி...எல்லாமே பிரமாதம்
 

மிகக் குறைந்தக் காட்சிகள் மட்டுமே  தோன்றினாலும்   காஜல் அகர்வால் பளிச்சிடுகிறார்
 

போலிஸ் அதிகாரியாக வரும் விஜய் யேசுதாசிடம் அதற்குரிய கம்பீரம் குறைவு என்றாலும் அறிமுக நடிகர் என்பதில் ஒகே
 

ரோபோ சங்கர் படத்தின் முக்கிய காமெடியனாக பல வேடிக்கையான வசனங்களாலும் நையாண்டி கவுண்டர் அட்டாக் பேச்சுக்களாலும் படத்தை தாங்கி நிற்கிறார்
 

இதுவரை உணர்வுப்பூர்வமான காதல் படங்களை தந்த இயக்குனர் பாலாஜி மோகன்  மாரியில் தந்தது வலுவற்ற திரைக்கதை அதிலும் இரண்டாம் பகுதியில் நெஞ்சை வருடும் எந்தக்  காட்சிகள் இல்லாதது ஏமாற்றமே
 

ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் மாரி படத்தின் கதைக்கேற்ற வண்ணம் வெளிப்படுகிறது  

அனிருத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் கதையுடன் ஒன்றிடச் செய்கிறது தனுஷ் வரிகளில் டானு டானு டானு......செம கலக்கல்  
 

ஆக  மொத்தத்தில்......
 

ஆரம்பக்கால திரைப்படங்களில் தோன்றிய  சூப்பர் ஸ்டார் ரஜினியின் உருவம் மேனரிசத்தில் இளைஞர்களை கவரும் தரலொக்கல் ஜித்து விளையாட்டு காட்சிகளுடன் வந்துள்ள மாரி முழுக்க முழுக்க தனுஷ் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம் தனுஷ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் 


Note- ரஜினியைப் பின் தொடர்ந்து ரசிகர்களின் உயிரைப் பறிக்கும் சிகரெட்டுக்கு விலைபோகியிருக்கிறார் தனுஷ் என்று பல எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. 

சினிமா நடிகர்களை கடவுளாக பாவிக்கும் இந்த சினிமா நாட்டில்
தனுஷ் போன்ற  பிரபல நடிகர்கள் இது போன்ற புகைபிடிக்கும் மது அருந்தும் காட்சிகளில்  நடிப்பதையும்   தவிர்க்கலாம் 



படம் பார்த்த பார்வையாளர்களின் மதிப்பீடு.....




மாரி படம் எப்படியிருக்கு....?





படம் பார்த்து வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...... 





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1