google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சண்டி வீரன்-சினிமா விமர்சனம்

Saturday, August 08, 2015

சண்டி வீரன்-சினிமா விமர்சனம்



நய்யாண்டி படம் மூலம் பார்வையாளர்களை நையாண்டி செய்த விருது இயக்குனர் சற்குணம் அவரது  களவாணி,வாகை சூடவா...போன்று சமுக அக்கறையுடன் கிராமத்து காதலை கலந்து காட்டிய பொழுது போக்கு படம்...சண்டி வீரன் 
20 வருடங்களுக்கு முன் நடந்த இரண்டு கிராமங்களுக்கு இடையில் நடக்கும் குடி தண்ணீர் பிரச்சனை, ஊர் கலவரம் என்று தொடங்கும் சண்டி வீரன் படத்தின் கதையாக.......

சிங்கப்பூரிலிருந்து தன ஊருக்கு வரும் அதர்வா  தன சிறு வயது காதலி ஆனந்தியுடன் காதலை புதுப்பித்துக் கொண்டிருக்கும் போது...

ஆனந்தியின் அப்பா ஊர் பெரிய மனிதர் லால்  நயவஞ்சகமாக பக்கத்து கிராமத்துக்கு குடிநீர் வழங்கும் குளத்தைஏலம் எடுத்து மாசு படுத்துவதை அறிந்து போராடுகிறான்  

அதர்வா-ஆனந்தி காதலை மோப்பம் பிடித்த லால் மீண்டும் ஒரு ஊர் கலவரத்தை உண்டாக்கி அதர்வாவை போட்டுத் தள்ள திட்டமிடுகிறார் 

அதர்வா லாலின் திட்டத்தை முறியடித்து ஆனந்தியை கரம் பிடித்து பக்கத்து கிராமத்து மக்களின் குடிநீர் பிரச்னையை எப்படி   தீர்க்கிறார் என்பதை கொஞ்சும் காதலாகவும் கொஞ்சம் காமெடியாகவும் சொல்கிறார் இயக்குனர் சற்குணம் 

அதர்வாவின் நடிப்பில் இளமையும் வீரமும் வெளிப்படுகிறது 
ஆனந்தி-இன்னொரு சினேகாவாக புன்னகையும் காதலுமாக வருகிறார் 
லாலின் வீராப்பும் கோமாளித்தனமும் வருத்தப்படாத வாலிபர்  சங்கம் சத்யராஜை நினைவுப்படுத்துகிறது 

80-களின்  இளையராஜாவை நினைவூட்டும் கிராமத்து  இசையில்  சில துண்டுப்பாடல்களும் அதன் சிலிர்ப்பூட்டும் வார்த்தைகளும் நெஞ்சை நெருடுகின்றன  அலுந்குறேன் குலுங்குறேன்....பாடல் இனிமை 

கிராமத்து இயற்கை  காட்சிகளைஉயிரோட்டமான ஓவியமாக படைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் முத்தையா 


ஆக மொத்தத்தில்..........

காதலும் காமெடியும் கலந்து குடிநீர் மாசு பற்றிய சமுக விழிப்புணர்வு படம் காட்டும் சண்டி வீரன் திரைப்படம்...
கிராமத்து கதைக்களம் விரும்பும் நகரத்து சினிமாவாசிகளுக்கு பிடித்தமான வீரன்


 
    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1