google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பரிதியின் கவிதைகள்.....ஒரு பார்வை -ரௌத்திரன்

Monday, April 23, 2012

பரிதியின் கவிதைகள்.....ஒரு பார்வை -ரௌத்திரன்


இந்த உலகத்தில் கொடுமையான விஷயமும்,
பல பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் விஷயமும் என்ன தெரியுமா?
பகைமை கூட அல்ல.
புரிந்துணர்வு இல்லாமை தான்!
இங்கே எழுத்தாளன் எப்படிச் சொல்கிறான்
என்பது பார்க்கப் பட்ட அளவுக்கு
எதைச் சொல்கிறான் என்பதும் எந்தச்
சூழ்நிலையில் நின்று கொண்டுச் சொல்கிறான்
என்பதும் புரிந்து கொள்ளப்பட வில்லை.
முதலில் ஒரு கவிஞனின் படைப்பை
எப்படிப் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையை
நாம் தெரிந்துகொண்டாக வேண்டும்.
ஒரு கவிஞன் ஒன்றை எப்படிச் சொல்கிறான்
என்பது "உத்தி". அது ரசிக்க வேண்டிய ஓர் அலங்காரம்! அந்த "உத்தி"யின் மூலம் எதைச் சொல்கிறான் என்பது "கருத்து" அல்லது "செய்தி".  அது கவனிக்க வேண்டிய ஒன்று!
அந்தக் "கருத்தை" எந்தச் சூழ்நிலையில்
நின்று சொல்கிறான் என்பது அந்தக் கருத்தின் அடித்தளம். அக்கருத்து உதிக்கக் காரணமாய் இருக்கும் "வேர்". இது சிந்திக்கப் பட வேண்டிய ஒன்று! இப்படித்தான் ஒரு படைப்பு பார்க்கப்பட வேண்டும் என்பது விதி.
இந்த விதி எங்கே எழுதப்பட்டுள்ளது?
என்ற கேள்வியைக் கேட்கவேண்டியதில்லை.
எழுதி வைத்ததை எல்லாம் சட்டம் என்று
மதிக்கவும் முடியாது.
எழுதி வைக்கப் படவில்லை என்பதற்காக
எல்லாவற்றையும் மீறவும் கூடாது.
பரிதி.முத்துராசன் அவர்களின்
எழுத்தும் சிந்தனையும் மிகச் சரியானவை.
நியாயத்தின் அடித்தளத்தில் நின்று
நியாயத்திற்காக நியாயமாக வெளிப்படும்
ஆதங்கங்கள்!
அவரது சிந்தனைகளும் எழுத்துகளும்
சரியாக மட்டுமல்ல, தெளிவாகவும் இருக்கின்றன. அதேநேரம், சரிவரப் புரிந்துகொள்ளப்படாமலும் இருக்கின்றன.
இந்த நேரத்தில் எனக்கு ஒரு மேலைநாட்டுக்
கவிஞனின் நினைவு வருகிறது.
அவன் பெயர் சரியாக நினைவுக்கு வரவில்லை.
அது அவ்வளவு அவசியமும் இல்லை!
அவன் ஒரு கவிதை எழுதினான்.
அந்தக் கவிதையின் தலைப்பை வைத்துப்
பல வாசகர்கள் ரசிகர்கள் அவனிடம்
கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார்கள்!
"உங்கள் தலைப்புக்கு இதுதானே அர்த்தம்?"
என்று சிலரும் "அது தானே அர்த்தம்?" என்று சிலரும் "இல்லை இல்லை. இதுதானே அர்த்தம்?
சொல்லுங்கள்" என்று சிலரும் கேட்டார்கள்!
ஆனால்,அத்தனை பேருமே அந்தக் கவிதையின்
தலைப்புக்கான அர்த்தத்தைச் சரியாகச் சொல்லவில்லை. முடிவில், சிரித்துக்கொண்டே அந்தக் கவிஞன் சொன்னான்:-
"என் கவிதையின் தலைப்புக்கு இத்தனை அர்த்தங்கள் இருக்கின்றனவா? நீங்கள் சொன்ன பிறகுதான் அந்தத் தலைப்புக்கு இத்தனை அர்த்தம் இருப்பது எனக்கே தெரியவருகிறது.
அட முட்டாள்களே!
உங்களையெல்லாம் நம்பி நான் கவிதை எழுதுகிறேனே என்னை முதலில் சொல்ல வேண்டும். நான் கொடுத்திருந்த தலைப்புக்கு அர்த்தம் சுவரில் ஒரு பல்லி என்பதுதான்."
என்று நொந்து சலித்துக்கொண்டான்.

பரிதி முதுரசனின் எழுத்துக்கள் எதார்த்தத்தில் பிறக்கின்றன.கண்களை மூடியபடி சிந்திக்கும் கற்பனைக் கிறுக்கல்கள் அல்ல!

.....நன்றி ..எழுத்தாளர் ரௌத்திரன்,எழுத்து தளம் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1