google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நகரத்து எலிகள

Tuesday, May 01, 2012

நகரத்து எலிகள





ஹமேலின்(Hamelin)நகரத்து
மாயவியே!
நகரத்தில் தொல்லை தந்த
எலிகளையெல்லாம்
உன் குழலிசையால்
எங்கோ அழைத்துச்சென்று
தொலைத்தாயே!    

ஒ..பைடு பைப்பர்(Pied Piper)ரே! நீ
மறுபிறவி எடுபாயா?  
உன் குழல் எடுத்து
மாய இசையை   
மீண்டும் இசைப்பாயா?

சென்னை நகரத்து
‘குடிமகன்கள் தொல்லை
தாங்க முடியவில்லை

நடுரோட்டில் நின்று
நாய்கள் போல
சிறுநீர் கழிப்பதும்

பெண்களைக்கண்டால்
கானா பாடகர்கள் போல் 
குத்துப்பாட்டு பாடுவதும்

போவோர் வருவோரிடம் 
கேடிகள் போல் அதட்டி
பிச்சை கேட்பதும்

அளவுக்கு மீறி அருந்திவிட்டு
ஆடைகளை களைந்துவிட்டு
நடைபாதை நடுவில்
கிடை பிணமாய் கிடப்பதும்

ஏழை “குடிமக்கள்
இப்படி என்றால்
பணக்கார “குடிமக்கள்
எப்படி தெரியுமா?

எருமை மீது அமர்ந்து
எமன் வருவது போல்
தாறு மாறாய் தறிகெட்டு 
காரை ஓட்டி வருவதும்
...........................................
................................................
சென்னை நகரத்து
‘குடிமகன்கள் தொல்லை
தாங்க முடியவில்லை
மாயாவியே!
இந்த எலிகளையெல்லாம்
அழைத்துச்செல்ல வரமாட்டாயா? 
*********************************
காணொளி-Walt Disney's Fables - Pied Pip


Thanks-YouTube-Uploaded by HomoLibero on Nov 17, 2010

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1