பழைய குறிப்பேடுகளை
புரட்டியபோது...
அன்று
பள்ளியில் படிக்கும்போது
கல்லுரியில் படிக்கும்போது
எனக்குத்தான்
எத்தனை நண்பர்கள்!
எனக்குத்தான்
எத்தனை நண்பர்கள்!
எல்லோரும்தான்
எங்கே போனார்கள்?
வாழ்க்கைதேடி
அலைந்தபோது
அவர்களை நான்
தொலைத்துவிட்டேனோ?
இப்போதும்
நிறைய நண்பர்கள்
வேலைபார்க்குமிடத்தில்...
வாய்ப்பு கிடைத்தால்
என்னை மிதித்து
ஏறிச்செல்லும் நண்பர்கள்.
தெருவில் சில நண்பர்கள்
போட்டி நடத்தவும்
விழா நடத்தவும்
வந்துசேர்ந்த நண்பர்கள்
இதுபோல் நிறைய நண்பர்கள்
காரியம் ஆகவில்லை என்றால்
காயப்படுத்தும் நண்பர்கள்
அய்யா வள்ளுவரே!
உமது நட்பியலை
எத்தனைமுறை படிப்பது?
எனக்கு மட்டும்
எதுவும் புரியவில்லையே!.
நேரில் காணும்
நிஜநன்பர்களின்
நிஜ முகங்கள்
தெரியவாதில்லையே!
தெரியவாதில்லையே!
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |