google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அழியாதோ இவர்கள் கூத்து?

Friday, June 15, 2012

அழியாதோ இவர்கள் கூத்து?


 
பாலகன் வயதில் பார்த்தது
பாக்கூத்து....? பாவைக்கூத்து...?
உண்மையில் படக்கூத்து.
மாட்டு தோலில் உருவங்கள்
இயல்பாய் இயற்கை வர்ணங்கள்
பாவத்துக்கேற்று அசைந்த்திட
முடிச்சுபோட்ட மூங்கில் குச்சிகள்  

விளக்கு வெளிச்ச பின்னணியில்
வெண்சேலை திரையினிலே  
இரவில்தான் துவங்கும் இக்கூத்து
பாடுவது பேசுவது அசைப்பது
அத்தனையும் செய்வது ஒருவரே
அவரே சகலகலா வல்லவரே    

இராமாயணமே முதல் கூத்து
இடையில் நல்லதங்காள் கதை
இடையிடையே இரு கோமாளிகள்
சேட்டைசெய்து சிரிக்க வைக்க  
கடைசியில் ராமர் பட்டாபிசேகம்

இந்த கூத்து இப்போதில்லை
இதைவிட நல்லகூத்து
இப்போது நாட்டினிலே.....
நடத்துவதோ அரசியல்வாதிகள்
இப்போது மடங்களிலே.....
நடத்துவதோ மடாதிபதிகள்

பாக்கூத்தோ? பாவைக்கூத்தோ? 
அழிந்துபோனது அந்த கூத்து 
அழியாதோ இவர்கள் கூத்து? 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1