google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குப்பைத்தொட்டியின் குமுறல்

Sunday, June 24, 2012

குப்பைத்தொட்டியின் குமுறல்





செத்த எலியையும் பூனையையும்  
என் தலையில் போட்டீர்கள்
பொறுத்துக்கொண்டேன்

நாற்றமெடுக்கும் குப்பைகளையும்
என் முகத்தில் எறிந்தீர்கள்
அதையும் சகித்துக்கொண்டேன்  

கள்ளகாதல் குழந்தையை 
என் மடியில் போட்டீர்கள்
பாவத்தையும் தாங்கிக்கொண்டேன் 

செல்லாத ரூபாய் நோட்டுகளால்  
என் வயிற்றை நிறைத்தீர்கள்
அதையும் பொறுத்துக்கொண்டேன்

எங்கோ நடக்கும் கட்சி கூட்டத்துக்கு
என் உடம்பு முழுவதும் சுவரொட்டிகள்
இனியும் பொறுக்க முடியாது

இனிமேல் உங்கள் வீதியிலே
இருக்க எனக்கு தலைவிதியா?
*************************************
காணொளி-சிரிப்பு வருது......


Thanks-YouTube-Uploaded by msenthil28788 on Jun 9, 2011

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1