Drink and Dance by Sourcecode
காலையில்
எழுந்ததும்
கால்வலிக்க
காத்திருந்து
கடை திறந்ததும்
ஒரு முடக்கு
வாயினில் உற்றியே
நேற்றடித்த
சரக்கால் வந்த
தலைவலி தீர்த்து
வைத்து
சோம்பிக்கிடக்காமல்
சுறு சுறுப்பாய்
இருந்திடவே
‘குடி’மக்கள் குறை தீர்க்க வந்த
டாஸ்மாக் கடையே போற்றி!
திராட்சை கனியிலிருந்து
திரட்டி எடுத்த
ரசமோ?
வயிற்றை புரட்டி
வாந்தி எடுக்கும்
விஷமோ?
உடலினில் புகுந்திடவே
உலகமே மறப்பதாய்
கல்லீரல்
சிதைந்தாலும்
கட்டிய வேட்டியுடன்
கவலை நோயும் கலைந்திடவே
களிப்புடன்
தள்ளாடும்
‘குடி’மக்கள் குறை தீர்க்க வந்த
டாஸ்மாக் கடையே போற்றி!
கள்ளச் சாராயமோ?
காய்ச்சிய சாராயமோ?
மக்கள் உயிரை
மாயத்திடக் கூடாதென்று...
நம்ம அரசாங்கமே
நல்ல அக்கறையுடன்
நல்ல சரக்குகளை
நியாய விலையில் விற்றிட
குடி’மக்கள் குறை தீர்க்க வந்த
டாஸ்மாக் கடையே போற்றி!
*******************************
காணொளி-tasmac anthem Thanks-YouTube-Published on Jun 9, 2012 by madhubaanakadai
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |