அந்த கவிஞரைத்தேடி
அவர்
வீட்டுக்கு போனேன்
அவர்
ஒரு முழுக்கவிஞர்
(ஆயிரம்பேரைக்கொன்றவன்
அரை
வைத்தியன் என்றால்
இரண்டாயிரம்
கவிதை
எழுதிய
இவர் முழுக்கவிஞர்தானே)
அவர்
பேச்சு கவிதை
அவர்
பார்வை கவிதை
அவர்
நடை கவிதை
அவர்
உடை கவிதை
........................................
எல்லாமே
அவருக்கு
கவிதையோ
கவிதை
அவர்
வீட்டு வாசலில்
நாய்
ஜாக்கிரதை பலகை
வாசலில்
நின்றே
அழைத்தேன்
அவரை
கருப்பு
வெள்ளை கலந்த நிறத்தில்
திமிங்கலம்
போல் வந்ததே சீமை நாய்
தமிங்கலத்தில்
பாடிக்கொண்டு....
(கம்பர்
வீட்டு கட்டுத்தறி
கவி
பாடும்போது...
எம் கவிஞர்
வீட்டு சீமை நாய்
தமிங்கலத்தில்
பாடாதோ?)
பாட்டுனா
பாட்டு
கொலைவெறிப்
பாட்டு
உடனே
அதை(அவரை)
அழைத்துச்சென்று
திரைப்படத்தில்
பாடவைத்தேன்
பல
லட்சம்பேர்
பார்த்து
மகிழ்ந்தனர்
பரிசுகள்
குவிந்தன
பதக்கங்கள்
விழுந்தன
பெரிய
மனிதர்கள்
விருந்து
வைத்தனர்
(தமிழைவிட
தமிங்கலத்துக்கு
பவுசு அதிகம்தான்)
****************************
காணொளி-why this கொலைவெறி...
Thanks-YouTube-Uploaded by nayan987654321 on Dec 14, 2011
****************************
காணொளி-why this கொலைவெறி...
Thanks-YouTube-Uploaded by nayan987654321 on Dec 14, 2011
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |