google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கூட்டம் கூட்டும் கூட்டம்

Friday, August 10, 2012

கூட்டம் கூட்டும் கூட்டம்



இது
என் தொலைந்து போகாத
நெஞ்சை வருடும்
நினைவுத் துளிகள்  

வடுகபட்டி 1971
பேருந்து நிற்க்குமிடம்
நான்கு கம்புகள்
தாங்கி பிடித்த
ஒரு சின்ன மேடை
வந்து சேர்ந்தார்
பெருந்தலைவர்

பேசுவதற்காக
மேடை ஏறினார்
ஆவலுடன் அனைவரும்
கதர் துண்டுகள்
நூல் மாலைகளுடன்
அவருக்கு அணிவிக்க
அந்த மேடையில் ஏறினர்

அடுத்த நிமிடம்
அந்த மேடை சரிந்தது
அந்த கர்ம வீரரை
தாங்கிப்பிடித்து
கீழே இறக்கினர்

முகத்தில்
கோப சலனம்
எதுவுமின்றி..

வேறு நல்ல இடம்
இல்லையானேன்?

என்றவரை
அழைத்துக்கொண்டு
அருகிலுள்ள
பஞ்சாயத்து அலுவலகத்தில்
பேச வைத்தனர்

பெரும் திரள் கூட்டமில்லை
அய்ம்பதிலிருந்து நூறுக்குள்
அங்கே கூட்டம்.....   
பெருந்தன்மையுடன்
பெருந்தலைவர்
பேசிச் சென்றார்....... 

இன்று போல்
கூட்டம் சேர்க்கும்
கோமாளிகளோ
கொள்கை பரப்பும்
கனவுக் கன்னிகளோ
அவர் கூட வரவில்லை
அதனால் கூட்டமில்லை

அடுத்து சில நாட்களில்
அங்கே வந்தார்....
புரட்சிகரமான நடிகர்

காலையிலிருந்து
சாலை இருபுறமும்
கட்டுக்கடங்காத கூட்டம்
கண்ணுக்கெட்டிய தூரம்
கணக்கில்லா கூட்டம்

மாலையில் அவரும் வந்தார்
மின்னல் வேகத்தில்
புழுதி பறக்கும் சாலையில்
கார் கண்ணாடி கூட திறக்காமல்
பறந்து போனார் அவர்

அருகிலுள்ள
பெரிய குளத்தில் பேசுவதாக
புரளி கிளப்பி விட்டார்கள்

மணல் ஏற்றும் லாரியில்
மக்கள் ஏறிப் போனார்கள்
கடைசி லாரியில்
அளவுக்குமீறி கூட்டம்
அறுந்தது பின் கதவுக் கயிறு
அன்று விழுந்து மாண்டனர்
அப்பாவி மக்கள் ஏழு பேர்.

இதுதான் இந்திய அரசியல்
இதுதான் இந்திய ஜனநாயகம்
அன்றும் அப்படித்தான்
இன்றும் அப்படித்தான்   
கூட்டம் கூட்டும் கூட்டம் 
கூட்டம் கூட்டமாக என்றும் 
நாட்டை கெடுக்கும் கூட்டம் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1