அரசே.....
இது நியாயமா?
இது நியாயமா?
மண்ணைத் தோண்டி
கல்லை எடுக்க
கோடிகள் பல
கொடுத்துதானே
அனுமதி வாங்கினோம்
ஆழத் தோண்டியபோது
ஆர்வக் கோளாறில்
அளவு தெரியாமல்
அதிகமாக
தோண்டிவிட்டோம்
அது எப்படி குற்றமாகும்?
அதற்கு போய் (சகாயம்)
சகாயம் காட்டாமல்
சங்கடம்
செய்கிறீர்களே!
டுர்ர்ர்ர்ர்ர்....டமாரம்
மலை விழுங்கி மகாதேவன்களே!
அதுவும் சரிதான்
பொந்து தோண்டும்போது
பெருச்சாளி
அளவுகோல் வைத்து
அளந்து கொண்டா
தோண்டமுடியும்?
மக்களுக்கு கேடு
தரும்
மதுக்கடைகள் இங்கே
அரசுடமை ஆனது
அரசுக்கு ஆதாயம்
தரும்
மண்ணும் கல்லும்.............
மயமானது
தனியார்களிடம்
மாயமானது
தருதலைகளிடம்.வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
