google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ட்வீட் குருவியும் கலைஞரும்

Wednesday, August 15, 2012

ட்வீட் குருவியும் கலைஞரும்


இணையதளத்தில்
என்னை
கொத்திக் குதறும்
ட்வீட் பறவையே!
வந்துவிட்டேன் நானும்
வலையுகத்துக்கு....

இனி இங்கே
என்னை வசைபாடுவோர்
எவரென்று பார்ப்போம்?

இந்த ட்வீட் 65
எங்கே கிடைக்கும்
உடனே வாங்குங்கப்பா?

அய்...ய....யோ...
ட்வீட்-டில்
வாலிபர்களுக்கு
இடமில்லை என்று
வயது வரம்பு
வைக்க வேண்டும்....

பெரிய இடத்து
வம்பு எதற்கு?
பாடிவிடுவோம்
வாழ்த்துப்பா.....

வருக!..வருகவே!
ட்வீட் குழுமத்துக்கு  
கலைஞரே! இளைஞரே!
வாழ்த்த வயதில்லை
வணங்குகிறேன்

எங்கும் வெற்றி
எதிலும் வெற்றி
அடுத்த தேர்தலில்
அதிரடி வெற்றி
-ஒரு ட்வீட் குருவி

(இது
விற்பனைக்கு அல்ல)  
*************************

இதோ
தலைவருக்கு வந்த
ஒரு (வில்லன்?)இனிக்கும் 
இளமையான ட்வீட்-
நம்பியாரு @Nambiyaaru @kalaignar89
 தலீவா கண்டுபிடிச்சிட்டேன்...
நமீதா என்றால்
உதடுகள் எக்ஸ்ட்ராவா ஒட்டுது!!
********************************
அய்யா...
கடுப்பேற்றுவதும்  
களிப்பூட்டுவதும் 
(அரசியல் உலகம் போல்)
வலையுகத்திலும் 
சகஜமையா! 
(மம்தாஜி-அம்மையார் மாதிரி 
உள்ளத்தூக்கி போடாமலும்
வழக்கு தொடுக்காமலும் 
இருந்தால் சரி)  
எதற்கும் உசார் ட்வீட்டர்களே!   
****************************
காணொளி-கலைஞரின் முகநூலில்..
தென் சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் பகுதியில் எனது 89 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் எனது உரை...கலைஞர் 


Thanks-YouTube-Published on Aug 15, 2012 by Thalaivar Kalaignar


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1