google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இளமைக்கு இன்று வயது 150

Saturday, September 08, 2012

இளமைக்கு இன்று வயது 150



இன்று சட்டத்தை ஏய்க்கும்
எம்டன்களுக்கெல்லாம்
எம்டனாக இருக்கும் இது
அன்று சேதாரமானது
உண்மையான எம்டனால்.

அன்றைய கதாநாயகர்களையும்
கதற வைத்த கதையுண்டு
சுகம் பாடிய பாகவதரை  
சோகம் பாட வைத்ததுண்டு
சிரிக்க வைத்த கலைவானரை
சிறையில் அடைத்ததுமுண்டு

விசித்திர வழக்குகள் நிறைய உண்டு
சரித்திர வழக்குகள் பல உண்டு
அதில் ஓன்று
வெண்தாடி வேந்தர் மீது
நெருஜியால் போடப்பட்ட
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

ஆட்சிகள் மாறும்
அரசுகள் மாறும்
ஆனாலும் இதுவோ
யாரிடமும் ஏமாறாது

தூங்குவது போல் தெரியும்
வழக்குகள் தேங்கும்
ஆனாலும் இதுவோ
தூக்கத்திலும் விழித்தே இருக்கும்

துஞ்சு புலி இடறியது போல்
சமுதாய துரோகிகள்
துடி துடித்து போவார்   

உலகின் இரண்டாவது
இந்தியாவின் முதலாவது 
மிகப்பெரிய நீதிமன்ற வளாகம்

வளாகத்தின் உள்ளே
மனு நீதி சோழன் சிலை
பாரபட்ச மற்ற தீர்ப்புக்கு
பறை சாற்றி நிற்கும்

ஒரு வழக்கறிஞரால்தான்
இந்த நாட்டுக்கு விடுதலை
வாங்கித்தர முடிந்தது

வளாகத்தின் கட்டிடங்களுக்கு
வயதாகி இருக்கலாம்
வளாகத்தின் மரங்களுக்கு
வயதாகி இருக்கலாம்

நீதி என்றும் இளமையானது.  
இளமைக்கு இன்று வயது 150
***************************************

Thanks-YouTube-Uploaded by bizhat1 on Jul 26, 2010


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1