எங்க ஊரில் அன்று
காணுமிடமெல்லாம்
பனை மரங்கள் நிற்கும்
அவை பனை மரங்கள் அல்ல
பணம் காய்க்கும் பண மரங்கள்
கருப்பட்டி செய்வதே
தொழிலாக இருந்ததால்
வீட்டுக்கு இரண்டு
கருப்பட்டி பரண்கள் இருக்கும்
புது கருப்பட்டிகளை
பரண்களில் அடுக்கிவைத்து
புகையிட்டு பதப்படுத்திய
பழங்கருப்பட்டிக்கு
விலை அதிகம் சுவை அதிகம்
பனை மரங்கள்
நினைவு தெரிந்த
காலம் தொட்டு
நின்று கொண்டிருக்கும்
என் நினைவில்ல
என் தாத்தா நினைவு
யார் விதைத்தது?
நெடுமரமாய் வளர்ந்து நிற்க
யார் நீர்வார்த்தது?
யாருக்கும் தெறியாது.
ஆணி வேர் இல்லை
அய்ம்பது அடிக்கு மேல்
அண்ணாந்து பார்க்கும் உயரம்
அழகாய் வளர்ந்து நிற்கும்
நீர் பாய்க்க வேண்டாம்
களை எடுக்க வேண்டாம்
மருந்து அடிக்க வேண்டாம்
செலவு செய்யாமல்
வரவு தரும் பனை மரங்கள்
வருடத்துக்கு மூன்று மாதங்கள்
வந்து சேர்வார்கள்
பனை ஏறும் தொழிலாளிகள்
இடுப்பில் அருவாப் பெட்டி
அதனுள் கூர் அருவாள்கள்
பாளை இடுக்கும் கடுப்புகள்
தோளில் மூட்டுக்கட்டை
அதிகாலையிலேயே ஆரம்பம்
பதநீர் இறக்கும் லாவண்யம்
ஏறுவதும் இறங்குவதும்
தொழிலும் வாழ்க்கையும்
இரண்டும் ஒன்றுதான் இவர்களுக்கு
சிலநேரங்களில்
கை தவறி விழுந்தால்
முதுகெலும்பு முறிந்துவிடும்
சிலரின் வாழ்வும் முடிந்துவிடும்
ஆபத்தான தொழில்
அதனால்தான் என்னவோ
அடுத்த தலைமுறையில்
அப்படியே அழிந்து போனது
அறிவை புகட்டி
அழித்து வைத்தது
கர்ம வீரரின் கல்வித்தொண்டு
கற்ற தலைமுறை
கடும் தொழிலை கைவிட்டது
நெடு நெடுவேனே நின்ற
பனை மரங்களை காணவில்லை
பனை மரங்கள் இன்று
தென்னை மரங்களாக...
தென்னை மரங்களோ
வளர்ந்தும் வளராமலும்
காய்த்தும் காயக்காமலும்
உப்பு தண்ணீர் பாசனத்தில்
தலையை சொரிந்து கொண்டு....
*********************************
காணொளி-PALMYRA TREE
Tamil folk songs by Dhanaraj Ramesh
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |