google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: குழம்பி கேட்டு குழம்பியவர்

Monday, September 03, 2012

குழம்பி கேட்டு குழம்பியவர்




காலையில் கண் விழித்ததும்
அவருக்கு கடும் பசி....

அங்கே யாரும் இல்லாததால்
அடுப்பாங்கரைக்கு அவரே சென்றார்....

தேநீர் குடிக்க தேயிலை தேடினார்
கிடைக்க வில்லை

குழம்பி குடிக்கலாமென்று....
குழம்பித் தூள் டப்பாவை 
திறந்தும் அவர்
குழம்பித்தான் போனார்

காயமே இது பொய்யடா
காற்றடைத்த காலி டப்பாடா!

யாரங்கே? என்று சீறினார்

தலையில் கொம்பு முளைத்த
பணியாட்கள் வந்தனர்.

அடுமனை ஏன் 
வடு மனையாக உள்ளது?
நாம் படைத்த உலகங்கள்
கப்பம் கட்ட வில்லையா?

அய்யா!
மற்ற உலகங்கள் பற்றி
எனக்கு தெரியாது.

போன வாரம்போயிருந்தேன்
பூமி உலகத்துக்கு

அங்கே மனிதர்கள்
மலைகளில்
காடுகளை வெட்டி
மொட்டை அடிக்கிறார்கள்.

மொட்டை மலையில்
பாறைகளை வெட்டி
மலையையே
விழுங்கி விடுகிறார்கள்

மலையுமில்லை
அதனால்
மழையும் இல்லை

இருக்கும் மலையில்
விளையும் பொருட்கள்
அவர்களுக்கே போதவில்லை

பாதாளம் வரை
பள்ளம தோண்டி
பூமாதேவி முகத்தை
வடுக்களாக்கி விட்டார்கள்

இன்னும்
சுரங்கம் தோண்டுவதிலும்
சுரண்டி விட்டதாக
சண்டை போடுகிறார்கள்

அய்யா!
இன்னொரு உலகம்
படையுங்கள்
அதில் 
உழல் செய்யாத 
அரசியல்வாதிகள்
கொலை வெறியற்ற 
மதவாதிகள் 
இவர்கள் இல்லாத
இன்னொரு உலகம்
படையுங்கள்

ஏய் நிறுத்து நிறுத்து
யாரடா இது
புதுக்குரலாக இருக்கிறது?

இவன் பெயர் பரிதி
இவன் தொல்லை
தாங்க முடியவில்லை

எப்போதும் இவன்
நம்மை பற்றித்தான்
பேசுவான் எழுதுவான்

பூலோகத்தில்
நம்மைப்பற்றி
அதிகம் நினைப்பது
இவனாகத்தான் இருக்கும்

இன்று இவன்
தலையில்
கொம்பு வைத்துக் கொண்டு
எங்கள் கூட்டத்தோடு
கலந்து விட்டான்

எண்ணைக் கொப்பரையில்
இவனைப் போட்டு
வதக்கி விடலாமா?

பாவம்
பிழைத்துப் போகட்டும்
உலகத்திலுள்ள
உண்மையைத்தான்
சொல்கிறான்...விட்டு விடுவோம்

நன்றி.........அய்யா!

அப்படியே நீங்கள்
எங்கள் பூமிக்கு வந்து
எல்லா மதமும் ஒன்றுதான்
எல்லோரும் என் பிள்ளைகள்தான்
என்று சொல்லிவிட்டுப் போங்கள்
குழம்பிக் கிடக்கிறார்கள் மக்கள்.  

(காதலுக்கும் எனக்கும்
ரொம்ப தூரம் போல்
என் காதல் கவிதைகளை
என்னைத்தவிர
யாரும் படிப்பதில்லை

குழப்பத்தில் எழுதிய
குழம்பிக் கவிதை இது
                                                                                                                                                                 
இங்கேயும் குழப்பம்
இது முழுக்க முழுக்க
தணிக்கை செய்யப்பட்டது
தணிக்கையாளர் நான்தான்
அரசியல்வாதிகளோ
மதவாதிகளோ அல்ல
இங்கே வரும் ‘அவர் யார்?
நீங்களே தீர்மானியுங்கள்)  


*****************************
காணொளி-கடவுள் ஒரு நாள்...


Thanks-YouTube-Published on Apr 23, 2012 by
  

Aariro_Deivathirumagal by Sainathdurai
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1