google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதல் செய்ய வாரீகளா?

Sunday, September 02, 2012

காதல் செய்ய வாரீகளா?






ஆசையோடு உயர எழும்பி
அப்படியே கீழே விழுந்து
அடங்கிப்போகும்
அழிந்துபோகும்
அலைகளைப் பார்த்துகொண்டு...   

அந்த அலை கடலோரம்
நின்று கொண்டிருந்தேன்

அப்போது
என்னைப் பார்த்து
சிர்த்துக்கொண்டு
துள்ளி துள்ளி
மீனொன்று...

கடற்கன்னியாக
இருக்குமோ?

காதல் செய்ய வாரீகளா?

கண்ணடித்து
கேட்பத்து போலிருந்தது  

களங்கமானது மனது.

காதலனுக்கு
மா மலையும்
கடுகா? மடுவா?

அருகில் இருந்த ஓடத்தை
ஒரே தள்ளு தள்ளி...

கையில் கிடைத்த வலையுடன்
கடலுக்குள் பாய்ந்தேன்

அப்படியே
அள்ளி வர வேண்டும்
அந்த கடற்கன்னியை என்று.

எங்கேயோ போய்
ஒளிந்து கொண்டாள்
ஏமாற்றுக்காரி...
இந்த வயதில்
இவனுக்கு எதுக்கு
காதல் கீதல்
என்று நினைத்தாளோ?

காதலுக்குத்தான்
கண்ணில்லை காதில்லை  
மூக்கில்லை நாக்கில்லை
வயதில்லை அழகில்லை 
என்று பாடுவார்களே
எங்கள் கவிஞர்கள்!  

கடைசி வரை
காணவில்லை அவளை



கரை திரும்பினேன்                              
கையில் வெறும் வலை
மனதிலோ பெரும் கவலை

அப்படியே வீடு திரும்பி
பொத்தென்று விழுந்தேன்
மெத்தை மீது.....

காதில் விழுந்தது
மனைவியின் குரல்

“மீன் வாங்க போயிட்டு
வெறும் கையோட வந்திருக்கு
வீணாப் போன மனுஷன்! 

********************************************
எலி பிடிக்க வாரிகாளா?
என்று சொல்லி விட்டு.....                 
இப்படி உல்டா பன்னுகிறாயே              
கிலி  பிடித்து விட்டதா?


இரண்டும் ஒன்றுதான் 
அதுதான் முன்பே 
பதிவிட்டு விட்டேனே 

***********************************************************

நகரத்து எலிகள

ஹமேலின்(Hamelin)நகரத்து
மாயவியே!
நகரத்தில் தொல்லை தந்த
எலிகளையெல்லாம்
உன் குழலிசையால்
எங்கோ அழைத்துச்சென்று
தொலைத்தாயே!    

ஒ..பைடு பைப்பர்(Pied Piper)ரே! நீ
மறுபிறவி எடுபாயா?  
உன் குழல் எடுத்து
மாய இசையை   
மீண்டும் இசைப்பாயா?

**********************************************
 Video-real mermaid swimming


Thanks-YouTube-Uploaded by OrParag on Oct 15, 201




Kunguma poove konjum purave Golden Hitz by dj powerboyz

***************************************************************

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1