----கன்னியரின் கதிர்வீச்சு----
ஆண் மகனே!
ஆண்மையை தீண்டும்
விழிகளின் வலையில்
வீழ்ந்து விடாதே!
கண்ணியரின்
காதல் விழி வீச்சு
அணு உலையின்
கதிர் வீச்சை விட
ஆபத்தானது....
பெண்ணாசையில்
மண்ணுக்குள் போன
மனிமகுடங்கள் நிறைய
கண்ணசைவில்
காணாமல் போன
கப்பல்கள் நிறைய
இதழ் சிரிப்பில்
இல்லாமல் போன
இமயங்கள் நிறைய
அறிவுக் களஞ்சியத்தை
அழித்து விடும்
உயர்வு பயணத்தை
தளர்த்தி விடும்
ஊதியத்தை
கரைத்து விடும்.
முதலில் காதல்
துள்ளி வரும்
ஜொள்ளு விட்டு
இளித்துக் கொண்டு.....
முடிவில் காதல்
தள்ளி விடும்
புதை குழியில்
இழுத்துச் சென்று.
ஊத்தக் காதலே
உலகமென்று
சொத்தையாகாதே!
உன் இதயத்தில்
நுழைந்தது
காதலென்னும்
பட்டாம்பூச்சி அல்ல
பிணம் திண்ணும் கழுகு
முதலில் உன் தூக்கத்தை திண்ணும்
முடிவில் உன்னையே திண்ணும்
உயிரோடு திண்ணும்
வாலிபத்தில் வரும்
பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்
காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை!
(அடுத்து வருவது
ஒரு முறையற்ற காதல் கதை
காதல் எச்சரிக்கை!............தொடரும்)
Thanks-Soundcloud Kanne Kalaimane(Sad) by ajaykarthik
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |