(இது
மலர்கள் மீது
நான் கொண்ட காதல்)
மேகம்
வரைந்த
வானவில்லும்
மறைந்துபோகும்.
நீ
வரைந்த
காதல் ஓவியம
கலையாதே!
உன்னை
தழுவியே
காற்றுக்கும்
வந்ததோ வாசம்?
அதுவே
என் சுவாசம்!
எழுந்ததே
என் இதயத்தில்
காதல் நேசம்!
இனி
நீயே
என் சகவாசம்
நீ
இல்லையேல்
ஏது சுகபோகம்?
உன்
கள்ளூறும்
இதழ்கள்
கவிதை தந்தன!
போதையில்
பொங்கின
காதல் கவிதைகள்!
போதைக் கவிதைகள்!
Chinese Flute by Asher Lindsay Graieg
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |